Bigg Boss: விளாச முடிவெடுத்த VJS.. வண்டி இன்னும் அங்க திரும்பாம இருக்கேனு ரசிகர்கள் ஆதங்கம்!
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இரண்டாவது வாரம் முடிந்துள்ளது. வழக்கமாக ஒரு சீசன் தொடங்குகிறது என்றால் அது சூடு பிடிக்க இரண்டு வாரங்கள் எடுத்துக் கொள்ளும். ஆனால் இந்த சீசன் முதல் நாளில் இருந்தே ரசிகர்களை அப்செட்டிலும் டென்சனிலுமே வைத்துள்ளது. இப்படி இருக்கையில் இரண்டாவது வாரத்தின் கடைசியில் விஜய் சேதுபதிக்கு வேலை ரொம்பவும் அதிகமாக இருக்கப்போகிறது என்று ஏற்கனவே ரசிகர்கள் தெரிவித்து வந்த நிலையில், அதற்கு ஏற்ற வகையில் விஜய் சேதுபதியும் போட்டியாளர்களை போட்டு பொளந்து கட்டி வருகிறார்.
இன்றைய எபிசோடின் இரண்டாவது புரோமோவில் கம்ருதீனை போட்டு வறுத்து எடுத்து விட்டார் என்றுதான் கூறவேண்டும். அதாவது, கமருதீன் வீட்டுத் தல போட்டியில் கலந்து கொண்டார். இது குத்துங்க எஜமான் குத்துங்க டாஸ்கில் அவருக்கு அதிக குத்துகள் விழவே, அவரால் அந்த டாஸ்கில் வெற்றி பெற்று, வீட்டுத் தலையாக ஆக முடியவில்லை. இப்படி இருக்கும்போது அவர் சக போட்டியாளர்கள் சிலரிடம் மிகவும் கடினமாக நடந்து கொண்டார். குறிப்பாக ரம்யாவிடம் மோசமாக நடந்து கொண்டார். அதற்கு ரம்யாவும் பதிலடி கொடுத்துவிட்டார்.
கம்ருதீனின் மோசமான அணுகுமுறை: இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் விதிமுறைகளைப் பின்பற்றித்தான் விளையாடினார்கள். இப்படி இருக்கும்போது கம்ருதீனின் அணுகுமுறை மிகவும் மோசமாக இருந்ததால், இரண்டாவது புரோமோவில் விஜய் சேதுபதி கமருதீனை போட்டு வறுத்து எடுத்துவிட்டார் என்பது நன்றாகத் தெரிகிறது. அதாவது அவர் கூறும்போது, கமருதீன் மனதை காயப்படுத்தாமல் டாஸ்க்கில் விளையாடச் சொல்லி விதிமுறைகளை மாற்றிக் கொடுக்கட்டுமே என்று கோபமாகவே கேட்டுவிட்டார் விஜய் சேதுபதி.

சிக்கிய கம்ருதீன்: முதல் வாரத்தில் இருந்தே கம்ரூதினுக்கும் விஜய் சேதுபதிக்கும் சரியாக ஒத்துப் போகாமலே இருக்கிறது. விஜய் சேதுபதி கேட்கும் நேரடி கேள்விகளுக்கு கம்ருதீனால் நேரடியாக பதிலே சொல்ல முடியவில்லை. முதல் வாரமே கமருதீனை எச்சரித்த விஜய் சேதுபதி, இரண்டாவது வாரத்தை அதை விட கூடுதலாவே கடுமையாக நடந்து கொள்ள, எல்லா விதமான செயல்களையும் கம்ரூதின் செய்துள்ளார். அதாவது, வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை அநாகரீகமாக நடத்தியதில் தொடங்கி, பல வேலைகளைப் பார்த்துள்ளார். அது மட்டும் இல்லாமல், ரம்யாவுடனான சண்டையின் போதும் மிகவும் மோசமாகவே நடந்து கொண்டார். இப்படி இருக்கையில் இன்றைக்கு கம்ரூதினுக்கு இருக்கு கச்சேரி.

விளாசல்: அடுத்ததாக, மூன்றாவது புரோமோவில் பொதுவான கேள்வியை பிக்பாஸ் வீட்டார் முன் எழுப்ப, பெரும்பாலான நபர்கள், கனி திரு மற்றும் சபரி பெயரைச் சொல்கிறார்கள். இதனால் தனித்துவமான ஆட்டம் உங்களிடத்தில் இல்லையா என்ற கேள்வியை எழுப்புகிறார். இந்த புரோமோக்களில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தது, அரோராவை விஜய் சேதுபதி கேள்வி எழுப்ப மாட்டாரா என்பதுதான். காரணம் இந்த வாரத்தில் அரோரா பல வேலைகளைச் செய்துள்ளார். இப்படி இருக்கும்போது அவரை நோக்கிய கேள்விகள் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இது மட்டும் இல்லாமல், இந்த வாரத்தில் அரோரா தான் எலிமினேட் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. என்ன நடக்கும் என்பதை காத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











