ஆதிரைக்கு ஃபயர் விட்டது எல்லாம் வேஸ்ட்டா? ரொம்ப கஷ்டம்.. வெளியே வந்ததும் ஓவர் பேச்சு!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நான்கு வாரங்களை நிறைவு செய்யவுள்ளது. இப்படி இருக்கும்போது மூன்றாவது வாரத்தில் வெளியேற்றப்பட்ட ஆதிரை அதன் பின்னர் அளித்துள்ள பேட்டியில் பகிர்ந்து கொண்டது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக வினோத் முகத்திற்கு நேராக அவர் காலைத் தூக்கிப் போட்டதை விஜய் சேதுபதி கண்டித்திருந்தார். அப்போது அமைதியாக இருந்த ஆதிரை, நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் அளித்த பேட்டியில் தான் செய்தது சரி என்று பேசி வருவது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அவர் அந்த பேட்டியில், " நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு சில நாட்கள் முன்னர் எஃப்.ஜேவை பார்க்கிறேன். அப்போது அவர் பிக் பாஸில் கலந்து கொள்ளப் போகிறார் என்று தெரியாது. பார்ப்பதற்கு அழகாக இருந்தார், சைட் அடித்தேன். அதில் ஒன்றும் தவறு இல்லை என்று எனக்கு தோன்றுகிறது. அதேபோல் நானும் எஃப்.ஜேவும் பிக் பாஸ் வீட்டில் பேசிக்கொண்டதும் பழகியதும் லவ் கண்டெண்ட் கிடையாது. மாறாக அது எனது பிக் பாஸ் வாழ்க்கையில் ஒரு அங்கம் அவ்வளவுதான். எனக்கு அவரைப் பிடித்திருந்தது, பர்சனலாக கனெக்ட் ஆனது. எனக்கு அவர் ஒரு சப்போர்ட் சிஸ்டமாக இருந்தார் அவ்வளவுதான்.

Bigg Boss Tamil Aadhirai Interview Creates Noise From BB Fans
Photo Credit:

வினோத் உடனான பிரச்னை: வினோத் உடனான பிரச்னை என்பது, எனது பாட்டில்களுக்கு அருகில் அவர் அமர்ந்து இருந்தார். நான் எனது பாட்டில்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக மிகவும் கவனமாக இருந்தேன். அதனால் தான் வினோத்தை தள்ளி உட்காருங்க என்று கூறினேன். ஆனால் அவர் என்னுடன் சண்டைக்கு வந்துவிட்டார். மேலும் அவரது காலைத் தூக்கி அவரது கால் மீது போட்டு உட்கார்ந்து கொண்டு, அப்படித்தான் உட்காருவேன் என்று கத்தி கத்தி கூறினார். அதனால்தான் நானும் எனது காலைத் தூக்கி போடட்டுமா என்று கேட்டு அவ்வாறு செய்தேன். எனக்கு இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. அவர் உட்கார்ந்து கொண்டு செய்ததை நான் நின்று கொண்டு செய்தேன் அவ்வளவுதான், ஆனால் அதுதான் விவாதமாக மாறியுள்ளது" என்று பேசியுள்ளார்.

Bigg Boss Tamil Aadhirai Interview Creates Noise From BB Fans
Photo Credit:

ரசிகர்கள் அப்செட்: ஆதிரை தனது காலைத் தூக்கி வினோத் முகத்திற்கு நேராக நீட்டியது தவறு. இன்னும் சொல்லப்போனால் அது ஒருவரை மரியாதை குறைவாக நடத்தும் செயல். அப்படி இருக்கும்போது இதை விஜய் சேதுபதியும் கண்டித்தார், பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் கண்டித்தார்கள். இது அடிப்படையில் தவறான செயல், ஆனால் ஆதிரை இதை நியாயப்படுத்துவது எந்த வகையில் சரி என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால், ஆதிரையின் முகத்திற்கு நேராக யாராவது காலை நீட்டி இருந்தால் ஆதிரையின் நடவடிக்கையும் பேச்சும் இப்போது இருப்பதைப் போல, என் முகத்திற்கு நேராக கால் நீட்டியது தவறு இல்லை என்று சொல்லுவாரா என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆதிரையின் இந்த பேச்சு, அவருக்கு ஃபயர் விட்ட ரசிகர்களுக்கே சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பலரோ எலிமினேஷன் ஆகியும் ஆதிரை தனது தவறை உணராமல் இருக்கிறாரே என்றும் பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X