இவங்க 5 பேர் தான் டாப்.. டைட்டில் அடிக்க இவங்களுக்கு எல்லா வாய்ப்பும் இருக்கு - ஆதிரை சர்டிஃபிகேட்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 மூன்று வாரங்கள் முடிந்து நான்காவது வாரம் போய்க்கொண்டு உள்ளது. முதல் வாரத்தில் இருந்தே போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதில் மூன்றாவது வாரத்தில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் ஆதிரை. ஆதிரை வெளியேற்றப்பட்டது ஆதிரைக்கு எந்த அளவுக்கு அதிர்ச்சியோ அதே அளவுக்கு ஆதிரை மீது நம்பிக்கை வைத்த ரசிகர்களுக்கும் ஷாக் தான். இப்படி இருக்கையில் அவர் விஜய் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தனது ஆட்டம் குறித்தும் இந்த சீசன் போட்டியாளர்கள் குறித்தும் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அவர் பேசுகையில், " முதல் வாரத்தில் நான் எனது ஆட்டத்தை ஆடினேன். இரண்டாவது வாரத்தில் கொஞ்சம் டவுன் ஆகிவிட்டேன், மூன்றாவது வாரத்தில் நான் எனது பழைய ஆட்டத்திற்கு திரும்பிவிட்டேன். நான் வெளியேறியது எனக்கு ஷாக் தான். நான் உள்ளே இருக்க வேண்டிய போட்டியாளர். நான் விளையாடிய விளையாட்டில் பாதி கூட கலையரசன் விளையாடி இருக்க மாட்டார். அப்படி இருக்கும்போது, நான் வெளியேறியது ஷாக் தான்.

Bigg Boss Tamil 9 Aadhirai Interview She Opens About Who Are Getting Chance To Top 5

பட்டமும் போட்டியாளர்களும்: வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் இயல்பாக இல்லாமல், நடிப்பவராக இருப்பது பார்வதி தான். அவர் காலையில் இருந்து மாலை வரை ஒரு மாதிரியும், அதன் பின்னர் ஒரு மாதிரியும் இருப்பார். அதேபோல் விஷம் என்றால் அது கமருதீன் தான். விஜய் டிவி மாதிரியான தொலைக்காட்சியில், பிக் பாஸ் மாதிரியான நிகழ்ச்சியில் யாராவது ஒரு விமர்சனம் வைத்தால் கூட, மிகவும் கடினமான வார்த்தைகளைக் கூறுகிறார். வீட்டில் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு சும்மா இருப்பவர் என்றால் அது கலையரசன். அன்பு என்றால் அது கனி திரு. கண்டிக்கும் இடத்தில் கண்டிப்பார், பாசத்தை கொடுக்க வேண்டிய இடத்தில் பாசத்தைக் கொடுப்பவராக கனி இருக்கிறார். நாட்டாமை என்றால் அது சபரி தான்.

டாப் 5 போட்டியாளர்கள்: அதேபோல் வீட்டில் இப்போது இருக்கும் போட்டியாளர்களில் டாப் 5 போட்டியாளர்களாக இருப்பதற்கான அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கும் போட்டியாளர்கள் என்றால் அது, எஃப்.ஜே, கனி, சபரி, கெமி மற்றும் சுபிக்‌ஷா என இந்த ஐந்து போட்டியாளர்களும் இந்த சீசனில் டாப் 5 போட்டியாளர்களாக வருவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளது. திறமையான போட்டியாளர்களும் கூட" என்று தெரிவித்தார். இவரது இந்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Bigg Boss Tamil 9 Aadhirai Interview She Opens About Who Are Getting Chance To Top 5

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X