மக்கள் தப்பு பண்ணிட்டாங்க.. உள்ள மிக்சர் சாப்பிடுறாங்க.. நான் வெளியே போகணுமா? ஆதிரை சரமாரி கேள்வி!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 மூன்று வாரங்களில் மூன்று போட்டியாளர்களை வெளியே அனுப்பிவிட்டது. இதில் நான்காவது வார இறுதியில் இருந்து வைல்ட் கார்டு போட்டியாளர்களும் ஆட்டத்தில் களமிறங்க உள்ளார்கள். இப்படி இருக்கையில், இதில் மூன்றாவது வாரத்தில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் ஆதிரை. ஆதிரை வெளியேற்றப்பட்டது ஆதிரைக்கு எந்த அளவுக்கு அதிர்ச்சியோ அதே அளவுக்கு ஆதிரை மீது நம்பிக்கை வைத்த ரசிகர்களுக்கும் ஷாக் தான். இப்படி இருக்கையில் ஆதிரை விஜய் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மக்கள் தவறு செய்துவிட்டார்கள். நான் வெளியே போக வேண்டிய போட்டியாளரே இல்லை என்று பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், " முதல் வாரத்தில் நான் எனது ஆட்டத்தை ஆடினேன். இரண்டாவது வாரத்தில் கொஞ்சம் டவுன் ஆகிவிட்டேன், மூன்றாவது வாரத்தில் நான் டவுன் ஆகவில்லை. மூன்றாவது வாரத்தில் நான் டாஸ்குகளில் இருந்து அனைத்திலும் நான் எனது ஆட்டத்தை மட்டும் தான் வெளியேற்றினேன். நான் உள்ளே இருக்க வேண்டிய போட்டியாளர். ஆனால் மக்கள் என்னை வெளியேற்றியது எனக்கு ஷாக். மக்கள் தவறு செய்துவிட்டார்கள். உள்ளே இருக்க தகுதியே இல்லாத போட்டியாளர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கலையரசனைச் சொல்லுவேன். நான் ஆடிய ஆட்டத்தில் பாதி கூட அவர் ஆடி இருக்க மாட்டார். மூன்று வாரங்கள் ஆகிவிட்டது, அவர் இப்போது தான் ஏதோ கொஞ்சம் கொஞ்சமாக ஆடிக் கொண்டு உள்ளார். ஆனால் இதுவே ரொம்ப லேட். அதேபோல் கம்ருதீன், கம்ருதீனுடன் நான் சுமார் 2.5 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். ஆனால் அவர் விஜய் டிவி மாதிரியான தொலைக்காட்சியில், பிக் பாஸ் மாதிரியான நிகழ்ச்சியில் யாராவது ஒரு விமர்சனம் வைத்தால் கூட, மிகவும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியே பேசுகிறார்.
விஷமும் நடிப்பும்: வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் இயல்பாக இல்லாமல், நடிப்பவராக இருப்பது பார்வதி தான். அவர் காலையில் இருந்து மாலை வரை ஒரு மாதிரியும், அதன் பின்னர் ஒரு மாதிரியும் இருப்பார். அதேபோல் விஷம் என்றால் அது கம்ரூதின் தான். வீட்டில் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு சும்மா இருப்பவர் என்றால் அது கலையரசன். அன்பு என்றால் அது கனி திரு. கண்டிக்கும் இடத்தில் கண்டிப்பார், பாசத்தை கொடுக்க வேண்டிய இடத்தில் பாசத்தைக் கொடுப்பவராக கனி இருக்கிறார். நாட்டாமை என்றால் அது சபரி தான்.

டாப் 5: அதேபோல் வீட்டில் இப்போது இருக்கும் போட்டியாளர்களில் டாப் 5 போட்டியாளர்களாக இருப்பதற்கான அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கும் போட்டியாளர்கள் என்றால் அது, எஃப்.ஜே, கனி, சபரி, கெமி மற்றும் சுபிக்ஷா என இந்த ஐந்து போட்டியாளர்களும் இந்த சீசனில் டாப் 5 போட்டியாளர்களாக வருவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளது. திறமையான போட்டியாளர்களும் கூட" என்று தெரிவித்தார். இவரது இந்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சியில் போட்டியாளர்களை வெளியேற்றுவது என்பது ரசிகர்கள் வாக்கு செலுத்துவதில் தான் உள்ளது. மற்றபடி ஒழுங்கு நடவடிக்கைகள் காரணமாக போட்டியாளர்களை வெளியேற்றுவது என்பது பிக் பாஸ் தரப்பில் எடுக்கும் முடிவு தான்.


Click it and Unblock the Notifications











