இது பிக் பாஸ் வீடா? இல்லை இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங்கா?.. கடுப்பான ரசிகர்கள்!

சென்னை: விஜய் டிவியில் இந்த ஆண்டுக்கான பிக் பாஸ் சீசன் நேற்று கோலாகலமாக துவக்க விழாவுடன் தொடங்கியது. கமல்ஹாசன் முதல் சீசன் முதல் 7வது சீசன் வரை தொகுத்து வழங்கிய நிலையில், கடந்த 8வது சீசனை தொகுத்து வழங்குவதில் இருந்து விலகினார். அவருக்கு பதில், விஜய் சேதுபதி கடந்த சீசனை தொகுத்து வழங்கினார்.

ஆனால், பெரிதாக ரசிகர்கள் மத்தியில் கடந்த சீசன் ஹிட் அடிக்கவில்லை. இந்நிலையில், 9வது சீசன் எப்படி இருக்கும் என்கிற கேள்வி எழுந்தது. இந்நிலையில், நேற்று வந்த போட்டியாளர்களை எல்லாம் பார்த்த ரசிகர்கள் திறமையானவர்கள் பலர் இருக்க என்ன ஒரே இன்ஃப்ளூயன்ஸர்களாக இந்த முறை விஜய் டிவி களமிறக்கி உள்ளதே என கலாய்த்து வருகின்றனர்.

Bigg Boss Tamil 9 Conestants maximum Influencers makes fans upset
Photo Credit:

அதிலும், ஆபாச வீடியோக்களால் அடுத்த மீரா மிதுன் போல டிரெண்டான பலூன் அக்கா என அழைக்கப்படும் அரோரா சின்க்ளேர், நடிகர் சூர்யா ரசிகர்களை கடுப்பேற்றிய வாட்டர் மெலான் திவாகர், அகோரி கலையரசன், விஜே பார்வதி உள்ளிட்ட போட்டியாளர்களை பார்த்து ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகியுள்ளனர்.

ஒரே வருஷத்தில் பிரபலம்: நடிகர் சூர்யாவையே அசிங்கப்படுத்தும் விதமாக வாட்டர் மெலான் திவாகர் கருப்பு படத்தின் டீசர் வெளியானதும் பண்ண வேலை காரணமாக பிரபல யூடியூப் சேனலின் தொகுப்பாளரே திவாகரை அசிங்கப்படுத்தி வெளியேற்றினார். ஆனால், விஜய் டிவியின் பிக் பாஸ் வீட்டுக்குள் திவாகரை ஒரு போட்டியாளராக உள்ளே கொண்டு வந்துள்ளனர். இதே போலத்தான் தொகுப்பாளினியிடம் தவறாக நடந்த கூல் சுரேஷையும் போட்டியாளராக மாற்றினர் என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். ஜோடி, ஸ்டார், ரட்சகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பிரவீன் காந்தியிடம் மத்த எல்லாருமே ஏற்கனவே செலிபிரிட்டி சார், நான் வந்து ஒரே வருஷத்துல செலிபிரிட்டி ஆகிட்டேன் என பேசிய காட்சிகளை ஷேர் செய்து கலாய்த்து வருகின்றனர்.

இன்ஃப்ளூயன்சர்ஸ் மார்க்கெட்டிங்: என்ன தான் பிக் பாஸ் டீம் இவர்கள் எல்லாம் மற்றவர்களை விட தேர்வில் தேர்ச்சி பெற்று செலக்ட் ஆனார்கள் என கம்பி கட்ன கதையெல்லாம் சொன்னாலும், அனைவருமே இன்ஃப்ளூயன்சர்ஸ் தான் என்றும் வெளியே பக்காவாக பிஆர் டீமை செட் செய்துவிட்டுத் தான் உள்ளே வந்துருக்காங்க என்றும் விஜய் டிவிக்கும் பிக் பாஸ் ஓட வைக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற இன்ஃப்ளூயன்சர்ஸ் தேவைப்படும் நிலை வந்துவிட்டது என ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். அடுத்த சீசனில் பீரோ அக்கா, ரீல்ஸ் அக்கா வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்றும் கலாய்த்து வருகின்றனர். சர்ச்சை கிளப்பினால் பிக் பாஸ் வீட்டில் சான்ஸ் என்று ட்ரோல்கள் குவிகின்றன.

இறங்கி ஆடுவாங்க: எந்தவொரு மீடியா பின்புலமும் இல்லாமல் மொபைல் போனை மட்டுமே வைத்துக் கொண்டு பிரபலமான இன்ஃப்ளூயன்சர்கள் தங்களது ஒட்டுமொத்த உழைப்பையும் போட்டு இந்த சீசனில் விளையாடுவார்கள் என்றும் கண்டிப்பாக கன்டென்ட்டுக்கு பஞ்சம் இருக்காது, ஆட்டம் போக போகத்தான் புரியும் என பிக் பாஸ் போட்டியாளர்களின் ஆதரவாளர்கள் சப்போர்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X