பிக்பாஸையே மோசமாக பேசிய அரோரா.. என்னங்க வம்பிழுத்து வச்சிருக்காங்க.. ஆக்ஷன் எடுப்பாரா VJS?
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி இரண்டாவது வாரம் ஆகப்போகிறது. இந்த சீசனில் இதுவரை ரசிகர்கள் மத்தியில் அட பரவாயில்லப்பா இந்த போட்டியாளர்கள் என்று பெயர் எடுத்தவர்கள் என்று சொன்னால், அது விக்கல்ஸ் விக்ரம் மற்றும் கானா வினோத் ஆகியோரைக் கூறலாம். மற்ற போட்டியாளர்கள் எல்லாம் கிராமப்புறங்களில் சொல்லக்கூடிய சொலவடைகள் பலவற்றிற்கு முன் உதாரணங்களாக வீட்டிற்குள் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஏற்கனவே சர்ச்சைகளுக்குள் சிக்கிய அரோரா, பிக்பாஸ் வீட்டிற்குள் தன் மீதான விமர்சனங்களை எல்லாம் சரி செய்துவிட்டு, வேறு ஒரு நபராக வருவார் என்று அவரது தோழி நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால் அரோராவோ, என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டிங்கறீங்களே என்று கூறுவது போல பிக் பாஸ் வீட்டிற்குள் சர்ச்சைகளின் நாயகியாக உருமாறி வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியையே மிகவும் மோசமாக விமர்சித்துள்ளார். இதை விஜய் சேதுபதி கேள்வி எழுப்புவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பிக்பாஸ் குறித்து: அதாவது அரோரா தற்போது தெரிவித்துள்ள கருத்து பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, " நான் ஒரு மாடல், என்னால மத்தவங்கள மாதிரி கொண்டையை போட்டுக்கிட்டு உக்காந்துட்டு இருக்க முடியாது. நான் அழகா இருக்கிறதால தான் என்னை யாரும் பெருசா வேலை வாங்க மாற்றாங்க. அதே மாறி என்ன மாதிரி ஆளுக்கு வாய்ப்பு கொடுத்த காரணம், நான் ஒரு மாடல் இந்த பொண்ணு இந்த வீட்ல என்ன பண்ணுது பாப்போம்னு பாக்க தான். TALENT தான் முக்கியம்னா INDIA GOT TALENT போய் இருப்பேன். அதே மாதிரி பிக் பாஸ்ல TALENT ஆன ஆட்கள மட்டும் போட முடியுமா? அதே மாதிரி 20 அரோரா போட்டா இந்த வீடு என்ன ஆகுறது" என்று சக போட்டியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் கேள்வி: அரோராவின் இந்த பேச்சு பிக்பாஸ் நிகழ்ச்சி மீதான தரத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறது. இந்த சீசன் தொடங்கும்போது, வாட்டர்மெலன் ஸ்டாரை எப்படி எல்லாம் தேர்வுகள் வைத்து தேர்வு செய்தார்கள் என்று தெரிவித்தார். அப்படியானால், அரோராவுக்கு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை மட்டும் பார்த்து, தேர்வு செய்து விட்டார்களா என்ற கேள்வியை அவரது பேச்சு இயல்பாகவே எழுப்பியுள்ளது.
என்ன மனநிலை: உலக அழகி போட்டிக்கு தேர்வு செய்யும் போது கூட, அதில் கலந்து கொள்பவருக்கு சமூகம் குறித்த என்ன புரிதல் உள்ளது, பெண்களையும் ஆண்களையும் அவர் எப்படி எல்லாம் மதிப்பிடுகிறார், வாழ்க்கையில் எதை முதன்மையானதாக கருதுகிறார் என பலவகையான கேள்விகளுக்கு அவர்கள் அளிக்கும் பதில் அளிப்பதையும் கருத்தில் கொண்டுதான் தேர்வு செய்வார்கள். அப்படிப்பார்த்தா, அரோராவுக்கு என்ன மாதிரியான தேர்வுகள் பிக்பாஸ் குழுவினர் வைத்திருந்தால், நான் ஒரு மாடல், நான் அழகா இருக்கேன் என்பதை மட்டுமே வாதமாக வைத்து பேசிக்கொண்டு இருப்பார்?

கேள்வி எழுப்புவாரா விஜய் சேதுபதி?: ஏற்கனவே ரெஸ்ட் ரூம் பகுதியில் மைக்கை கழட்டி வைத்துவிட்டு, துஷாரிடம் அவர் ஏதோ பேச முயற்சித்தது தொடர்பான வீடியோ வெளியாகி பல சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது. இப்படி இருக்கும்போது பிக்பாஸ் குறித்து அவர் பேசியது குறித்து எல்லாம் விஜய் சேதுபதி வாரக் கடைசியில் கேள்வி எழுப்புவாரா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இதற்கு முந்தைய சீசன்களில் பல திறமைசாலிகள் கலந்து கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியின் தரத்தை உயர்த்தினார்கள். இந்த சீசனில் களமிறக்கப்பட்டுள்ள போட்டியாளர்களால் முந்தைய சீசன் போட்டியாளர்களையும் அவமதிப்பது போல உள்ளது என்ற குரல்களும் கேட்கத்தான் செய்கிறது. போதும் பிக்பாஸ், ரசிகர்கள் பாவம்.


Click it and Unblock the Notifications











