Bigg Boss Tamil 9 Contestants List: பிக் பாஸ் தமிழ் 9ன் உறுதியான போட்டியாளர்கள் இவங்க தானா? தேறுமா?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி அக்டோபர் 5, 2025 அன்று தொடங்கவுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார். கடந்த ஆண்டு கமல்ஹாசனுக்குப் பதிலாக தொகுப்பாளராகப் பொறுப்பேற்ற விஜய் சேதுபதி, தனது தனித்துவமான தொகுத்து வழங்கும் பாணியால் அனைவரையும் கவர்ந்தார்.

பிக் பாஸ் சீசன் 8ன் டைட்டில் வின்னராக முத்துகுமரன் வெற்றி பெற்ற பிக் பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், புதிய சீசன் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த சீசனுக்கு 'ஒண்ணுமே புரியல' என்ற தலைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த முறை "இரட்டைப் பிரச்சனை" இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Bigg Boss Tamil 9 Expected Contestants list Vj Parvathy Aurora Sinclair Here s the list
Photo Credit:

மீடியா தகவல்களின்படி, போட்டியாளர்களுடன் அவர்களது நெருங்கிய நண்பரோ அல்லது குடும்ப உறுப்பினரோ கலந்துகொள்ளும் வகையில் ஒரு புதிய "உணர்ச்சிப்பூர்வமான அம்சம்" சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சீசனில் பொதுமக்களும் போட்டியாளர்களாகக் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

பிக் பாஸ் தமிழ் 9 நிகழ்ச்சியில் எதிர்பார்கக்ப்படும் போட்டியாளர்கள் பட்டியல் இதோ:

ஜனனி அசோக் குமார்: 'இதயம்' மற்றும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து, தமிழ்த் தொலைக்காட்சி உலகில் பிரபலமானவர்.

அரோரா சின்க்ளேர்: பலூன் அக்கா என சோஷியல் மீடியாவில் பிரபலமான ஒரு புகழ்பெற்ற மாடல் மற்றும் நடிகையான அரோரா சின்க்ளேர் இந்த சீசனில் போட்டியாளராக வருவது உறுதி என நெருங்கிய வட்டாரங்கள் தகவல்களை கசியவிட்டுள்ளன. சமூக வலைத்தளங்களில் பிரபலமான இவர், 'அஜலக்கா உஜலா' பாடலில் தோன்றி பெரும் கவனத்தை ஈர்த்தார். போல்டு கன்டென்ட்டுகளுக்கு இந்த சீசனில் பஞ்சமிருக்காது என தெரிகிறது. சமீபத்தில், டாப்லெஸ் போட்டோக்களையும் இவர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

அகமது மீரான்: ஒரு பிரபலமான யூடியூபர் மற்றும் டிஜிட்டல் கிரியேட்டர். இவர் முன்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டவர், தற்போது போட்டியாளராக களமிறங்குகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஃபரினா ஆசாத்: 'பாரதி கண்ணம்மா' தொடரில் நடித்துப் பிரபலமானவர். இவர் ஒரு புகழ்பெற்ற தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் 'குக் வித் கோமாளி சீசன் 5' நிகழ்ச்சியில் கோமாளியாகப் பங்கேற்றவர்.

அஷ்வின் குமார்: 'ராஜா ராணி' தொடரிலும், 'குக் வித் கோமாளி சீசன் 2' நிகழ்ச்சியிலும் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. படங்களில் ஹீரோவாக நடித்து அசத்திய அஷ்வின் குமார் 40 கதை கேட்டுத் தூங்கிட்டேன் என பேசிய பேச்சால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டுக்கு வரப்போகிறார் என்கின்றனர்.

பார்வதி (விஜே பார்வதி): சமூக வலைத்தளங்களில் பெரும் ரசிகர்களைக் கொண்ட ஒரு பிரபலமான விஜே. தன்னை ஒரு கிரியேட்டர், நடிகர் மற்றும் பயண தொழில்முனைவோர் என்று கூறிக்கொள்கிறார். ஏற்கனவே சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற விஜே பார்வதி பிக் பாஸ் வீட்டுக்குள் விருந்தினராகவும் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சிந்தியா வினோலின்: ஒரு பிரபலமான நடனக் கலைஞர், சமூக ஊடகப் பிரபலம் மற்றும் நடன ஆசிரியர். இவர் பிக் பாஸ் தமிழ் சீசன் 3ல் பங்கேற்ற சாண்டி மாஸ்டரின் உறவுக்கார பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

டாலி: 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர். இவர் ஒரு சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேஹா: 'பாக்கியலட்சுமி' தொடரில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர். தனது பன்முகத் திறமையால் பலரது மனதிலும் இடம்பிடித்த நேஹா இந்த 9வது சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறாராம்.

சித்தார்த் குமரன்: 2013-ல் 'சரவணன் மீனாட்சி சீசன் 2' தொடரில் அறிமுகமானார். 'யாரடி நீ மோகினி', 'ரெக்கை கட்டி பறக்குது மனசு', 'தேன்மொழி பி.ஏ', 'ஈரமான ரோஜாவே 2' போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

புவி அரசு: 'இதயம்' தொடரில் நடித்துப் பிரபலமானவர். 'மிஸ்டர் & மிஸ்ஸஸ் சின்னத்திரை 5' போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஒரு குடும்பப் பெயரானார். இவருடைய தொகுப்புத் திறனும் பாராட்டப்பட்டது.

ராஜவேலு: ஒரு பிரபலமான நகைச்சுவை நடிகர். 'கேபிஒய் சாம்பியன்ஸ் சீசன் 3' போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பிரபலமான ராஜவேலு பிக் பாஸ் வீட்டுக்குள் இந்த முறை காமெடி ரகளை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்து: 'ராஜா ராணி' தொடரில் நடித்து பிரபலமான சின்னத்திரை நடிகர். இவருக்கு நல்ல ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த சீசன் பிக் பாஸில் பங்கேற்று என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறாரோ என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

ஸ்ரீகாந்த் தேவா: இசையமைப்பாளர் தேவா அவர்களின் மகன். இவர் ஒரு பாடகர் மற்றும் இசையமைப்பாளர். தனது இசையின் மூலம் பலரையும் கவர்ந்த ஸ்ரீகாந்த் தேவா இந்த சீசனில் கன்ஃபார்மாக பங்கேற்பார் என தகவல்கள் கசிந்துள்ளன. பிக் பாஸ் கிராண்ட் ஓபனிங் நிகழ்ச்சி நாளை படமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உறுதியான லிஸ்ட் நாளை மாலையே கசிந்துவிடும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X