"தகுதி.. தராதரம் இருக்கா?".. தர்பூசணி திவாகருக்கு பதிலா பதிலடியா? விஜய் சேதுபதி வாய் திறப்பாரா?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 மூன்று வாரங்கள் கடந்து நான்காவது வாரத்தில் சென்று கொண்டுள்ளது. இதுவரை மூன்று போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். ஒரு போட்டியாளர் அவராகவே ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். இப்படி இருக்கையில் நான்காவது வாரத்தில் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் போட்டியாளர்கள் களமிறங்கவுள்ளனர். இப்படி இருக்கும்போது, இந்த சீசனில் ரசிகர்களுக்கு எரிச்சலை ஊட்டும் போட்டியாளர்கள் என பட்டியலிட்டால் மற்ற சீசன்களை விட இந்த சீசன் ஓவர் டேக் வாங்கிவிடும். அப்படியான போட்டியாளர்கள் இந்த சீசனில் உள்ளார்கள்.

அப்படி இந்த சீசனில் உள்ள போட்டியாளர்களில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரும் ஒரு நபர். இவரை எப்படி தேர்வு செய்தீர்கள் என்று ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியுடன் கேள்வி கேட்டார்கள். ஆனால் இந்த சீசன் தொடங்கிய நாளிலேயே திவாகர் தனது துறையில் மிகவும் சிறந்தவராக இருக்கிறார். அவரது துறை சார்ந்து கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் மிகவும் சரியாக பதில் அளித்தார் என்றும் விஜய் சேதுபதி கூறினார். விஜய் சேதுபதியே சர்டிஃபிகேட் கொடுக்கிறார் என்பதால் இவர் ஆட்டத்தில் ஏதாவது சுவாரஸ்யம் இருக்கும் என்று பார்த்தால், எரிச்சல்.. எரிச்சல்.. எரிச்சல்.

அதாவது திவாகர் மட்டும் தனித்து இருந்தால் கேமரா முன்னாடி நின்று கொண்டு ரீல்ஸ் செய்து கொண்டு இருப்பார். உடன் வேறு யாராவது இருந்தால் தான் அவரது கண்டெண்ட் ஒர்க் அவுட் ஆகி வருகிறது. இப்படி இருக்கும்போது, சக போட்டியாளர்களுடன் ஏதாவது பிரச்னையோ, வாக்குவாதமோ ஏற்பட்டால், தர்பூசணி திவாகர் உடனே கூறுவது, உனக்கு என்ன தகுதி இருக்கு? நீ எல்லாம் என்னோட செருப்புக்கு சமம், நீ எல்லாம் என்னோட கால் தூசிக்குச் சமம், உனக்கு எல்லாம் என்ன தகுதி தராதரம் இருக்கு" என்பது போன்ற அவமரியாதை பேச்சுகளும் கேள்விகளும் தான்.

Bigg Boss Tamil 9 Fans Expecting Vijay Sethupathi Should Address Watermelon Star Diwakar Ugly Approach Weekend
Photo Credit:

தர்பூசணி திவாகர்: இது ஏதோ இந்த வாரம் நடைபெறவில்லை. இந்த பேச்சுக்கள் கடந்த இரண்டு மூன்று வாரங்களாகவே திவாகரிடம் இருந்து வருகிறது. இதை மற்ற போட்டியாளர்கள் கண்டிக்கிறார்கள். அதே நேரத்தில் வார இறுதியில் விஜய் சேதிபதி இதை அட்ரஸ் செய்வாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்தால், விஜய் சேதுபதி இதை ஸ்கிப் செய்து விட்டுச் சென்று விடுகிறார். தன்னை வைத்தே கானா வினோத் ஃபேமஸ் ஆகவேண்டும் என்று முயற்சிக்கிறார் என்று பேசியதை கண்டித்த விஜய் சேதுபதி, வாட்டர்மெலன் ஸ்டாரின் தகுதி தராதரம் தொடர்பான பேச்சு குறித்து எதுவும் பேசவில்லை.

தகுதி தராதரம்: மற்ற போட்டியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டால், என்ன பிரச்னையோ அதைத்தான் பேசுகிறார்கள். ஆனால் தர்பூசணி திவாகரோ தகுதி தராதரம் என்று அவதூறுகளை கையில் எடுக்கிறார். இந்த வாரமும் விஜய் சேதுபதி இதைக் கேட்கவில்லை என்றால், அது தனி கேள்வியாக எழும். வீட்டில் இருக்கும் அனைவரும் தனது ஹவுஸ் மேட்ஸ் என்று சொல்லும் விஜய் சேதுபதி, தனது மற்ற ஹவுஸ்மேட்ஸை ஒரு ஹவுஸ் மேட் மிகவும் கேவலமாக பேசுவதை எப்படி கேள்வி கேட்காமலும் அதைக் கண்டிக்காமலும் இருக்கிறார் என்று தெரியவில்லை.

கேட்பாரா விஜய் சேதுபதி: ஏற்கனவே போட்டியாளர்கள் பேசுவது பிடிக்கவில்லை என்றால் சேனலை மாற்றிக் கொள்ளுங்கள் என்ற பதில் கொடுத்ததற்கு நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியை அன்றாட வாழ்க்கையில் மக்கள் எதிர்கொள்ளும் சூழலுடன் பொருத்திப் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். அப்படி பொருத்திப் பார்ப்பது தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாகவும் உள்ளது. ஆனால் சேனலை மாற்றிக் கொள்ளுங்கள் என்பது கண் முன்னே ஏதாவது பிரச்னை நடந்தால், சேனலை மாற்றுவது போல முகத்தை திருப்பிக் கொண்டு அடுத்த வேலையைப் பார்க்க போங்கள் என்று அறிவுறுத்துவது போன்றது. சேனலை மாற்றச் சொன்ன விஜய் சேதுபதி, தகுதி தராதரம் என வசை பாடிக் கொண்டு இருக்கும் தர்பூசணி திவாகருக்கு அளிக்கப்போவது பதிலா இல்லை பதிலடியா இல்லை கண்டுகொள்ளாமல் இருப்பாரா என்பதை இந்த வார கடைசியில் தெரியவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X