அசிங்கமா இல்லையா ஆதிரை.. FJ உடன் படுமோசமான ரொமான்ஸ்.. விளாசி எடுக்கும் பிக் பாஸ் ஃபேன்ஸ்!
சென்னை: விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள ஆதிரையை பிக் பாஸ் ரசிகர்கள் மற்றும் விஜே பார்வதியின் ஃபேன்ஸ் திட்டி தீர்த்து வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றாலே சிலருக்கு ஏகப்பட்ட ரீச் கிடைக்கும். அதே போல பலருக்கு பெயர் டேமேஜ் ஆகும் நிலையும் ஏற்படுவது சர்வ சாதாரணமாக உள்ளது. அதன் காரணமாகவே தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகளே இல்லை என்றாலும் பரவாயில்லை பிக் பாஸுக்கு போக மாட்டோம் என தொடர்ந்து பல ஹீரோயின்கள் மற்றும் நடிகர்கள் மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த முறை சோஷியல் மீடியாவில் சர்ச்சைகளை மட்டுமே கிளப்பி பிரபலமான இன்ஃப்ளூயன்சர்களை போட்டியாளர்களாக மாற்றி தினமும் அவங்க பண்றதை பாருங்க என பிக் பாஸ் டீம் ரசிகர்களை நோகடித்து வருவதாக ஏகப்பட்ட புகார்கள் கிளம்பி உள்ளன.
ஆதரவும் எதிர்ப்பும்: ஆரம்பத்தில் ஆதிரைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர். பார்க்க அப்படியே ஸ்டார் படத்தில் நடித்த ஷீ வெப்சீரிஸ் பிரபலம் அதிதி போஹங்கர் போல உள்ளார் என கொண்டாடினர். அதன் பின்னர் அவர் நாமினேட் செய்யும் போது வாட்டர் மெலன் திவாகர் எல்லாம் போட்டியாளராக உள்ளே நுழைந்தார் என்று பேசும் போது அவருக்கு ஆதரவு பெருகியது. ஆனால், இவரே பூர்ணிமாவின் தங்கச்சி என்றும் உறவுக்கார பெண் என்றும் பூர்ணிமாவின் பி ஆர் ஆக இருந்தவரே இவர் தான் என்றும் ஏகப்பட்ட ட்ரோல்கள் தற்போது ஆதிரையை அட்டாக் செய்து வருகிறது.
ஏகப்பட்ட லவ் டிராக்: சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் வேண்டுமென்றே லவ் டிராக் க்ரியேட் செய்து வருகின்றனர் என்றும் அரோரா துஷார் உடன் லவ் டிராக்கை ஆரம்பித்த நிலையில், ஆதிரை எஃப் ஜேவுடன் லவ் டிராக்கை ஆரம்பித்துள்ளார் என்றும் எஃப் ஜே படுத்துக் கிடக்க அவரது காலை ஆதிரை இழுத்துக் கொண்டு செல்வது எல்லாம் சகிக்கல என பிக் பாஸ் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
திட்டும் ரசிகர்கள்: ஆதிரையை முதல் வாரத்திலேயே விஜய் சேதுபதி வெளுத்து வாங்கியது சரிதான் என்றும் ஓவர் ஆட்டிட்யூட் காட்டி வருகிறார் என்றும் ட்ரோல்கள் குவிந்து வரும் நிலையில், விஜே பார்வதியை எஃப் ஜே வுடன் சேர்ந்துக் கொண்டு கட்டம் கட்டி வருகிறார் ஆதிரை என்றும் அசிங்கமாக இல்லையா ஆதிரை என ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர்.
ரைசிங் குயின்: பிக் பாஸ் வீட்டில் மிக்சர் திண்ணாமல் இப்படி ஏதாவது சர்ச்சை மற்றும் சண்டையில் சிக்கி கன்டென்ட் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரபலங்கள் தான் கடைசி வரை வீட்டில் பயணிப்பார்கள் என்றும் ஆதிரை ரைசிங் குயின் என அவரது ரசிகர்கள் சப்போர்ட் செய்து வருகின்றனர். இந்த வாரம் மாஸ்க் டாஸ்க் வீட்டில் தொடங்கியுள்ள நிலையில், பொம்மை டாஸ்க்கின் காப்பி தான் என்றும் கண்டிப்பாக இதன் மூலம் பிக் பாஸ் வீட்டில் பெரிய பெரிய சண்டைகள் இந்த வாரம் களைகட்டும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து 24 மணி நேரமும் ஹாட்ஸ்டாரில் நடக்கும் தரமான சம்பவங்களையும் விடாமல் பார்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











