Bigg Boss Tamil 9: உங்க மகளை பிக் பாஸ் ஷோ பார்க்க வைப்பீங்களா? விஜய் சேதுபதியை விளாசும் ரசிகர்கள்!

சென்னை: 16+ ஷோவாக பிக் பாஸ் இருந்தாலும் வீட்டில் பெரியவர்கள் பார்க்கும் போது கூடவே சேர்ந்து குழந்தைகளும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு முன் வெளியான 7 சீசன்களையும் குழந்தைகள் அதிகளவில் பார்த்துள்ளனர். கமல்ஹாசனையே பிக் பாஸ் என்றே குழந்தைகள் அழைத்து வந்ததையும் பார்த்திருக்கிறோம்.

முதல் சீசனிலேயே ஓவியாவுக்கு ஆரவ் கொடுத்த முத்தம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், கமல்ஹாசன் மருத்துவ முத்தம் என முட்டுக் கொடுத்தார். நிவாஷினியுடன் அசல் கோலார் போட்ட ஆட்டமெல்லாம் ரசிகர்களை அருவருக்க செய்தது.

Bigg Boss Tamil 9 fans slams Vijay Sethupathi for hosting worst season

பிக் பாஸ் சீசன் 7ல் பிரதீப் ஆண்டனி பெண் போட்டியாளர்களுக்கு தொல்லை கொடுக்கிறார் என்றும் அவரால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என பெண்கள் ஆடிய கேம் காரணமாக அவருக்கு ரெட் கார்டும் கொடுக்கப்பட்டது. ஆனால், தற்போது பெண்களே பிக் பாஸ் வீட்டில் மோசமாக நடந்துக் கொள்கின்றனர் என்றும் விஜய் சேதுபதி தனது மகளை முதலில் இந்த ஷோவை பார்க்க அனுமதிப்பாரா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆபாச வீடு: பிக் பாஸ் வீடாக ரசிகர்கள் இதுவரை கொண்டாடப்பட்டு தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஆபாச வீடு என்கிற அடைமொழியுடன் அழைக்கப்பட்டு வருகிறது. அகம் டிவி வழியே அகத்துக்குள் என கமல் கட்டி காப்பாற்றி வந்த பிக் பாஸ் வீட்டை விஜய் சேதுபதி கன்ட்ரோல் பண்ண முடியாமல் கெடுத்துவிட்டார் என்றும் தமிழ்நாட்டு மக்களின் குழந்தைகளையும் இளைஞர்களையும் கெடுத்து கலாச்சார சீரழிவுக்கு வித்திடவே இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது என்றும் 24 மணி நேரமு ஓடிடியில் அவர்கள் பண்ணும் அலப்பறைகளுக்கு அளவே இல்லை என்கின்றனர்.

அடிக்கடி மாப் போடுவியா?: முத்தம் கொடுப்பது, கட்டியணைப்பதை தாண்டி கண்ட இடங்களுக்கு கை செல்வதும், அடிக்கடி மாப் போடுவியா, ரொம்ப பசிக்குது, மிட் நைட்ல சாப்டுவியா என ஆதிரை, அரோரா, எஃப்ஜே, துஷார், கம்ரூதின் உள்ளிட்ட பலர் ஆபாச பேச்சுக்களையும் இரட்டை அர்த்த வசனங்களையும் பேசி இளைஞர்களின் மனதை ரொம்பவே கெடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன.

Bigg Boss Tamil 9 fans slams Vijay Sethupathi for hosting worst season

விஜய் சேதுபதி மகளை பார்க்க விடுவாரா?: கடந்த சீசனில் ரீல் மகளாக மகாராஜா படத்தில் நடித்த சாச்சனா பிக் பாஸ் வீட்டுக்கு வரும்போதே உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என விஜய் சேதுபதி கேட்டார். அவர் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9ஐ அவரது மகளை பார்க்க விடுவாரா? ஆதிரையின் கை எங்கே போகுது பாருங்க ரொம்பவே வக்கிரம் பிடித்த அந்த நபரை உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்றுங்கள் அல்லது இந்த நிகழ்ச்சியை நிறுத்துங்கள் என ரசிகர்கள் காட்டமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தி பிக் பாஸ் போல: சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் குளிப்பது, லிப் கிஸ் அடிப்பது, ஒரே போர்வைக்குள் இருவரும் சென்று கசமுசா செய்வது என எல்லை மீறி வரும் நிலையில், அதே போல தமிழ் பிக் பாஸையும் மாற்றி வருவதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X