Bigg Boss: "ஒன்னும் தெரியாத பாப்பா".. அரோராவுக்கு ரெய்டு விட்ட ரம்யா ஜோ.. பார்வதிக்கு ஜாலிதான் போங்க!
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கிய சில நாட்களில் இருந்தே மொத்த வீடு ஒரு பக்கமும், வி.ஜே. பார்வதி மற்றும் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரும் ஒரு பக்கமுமாக மாறிவிட்டது. அவர்கள் என்ன செய்தாலும் இவர்கள் குறை செல்வதும், அவர்களை வம்புக்கு இழுத்தால் தான் என்று தெரிந்து செய்கிறார்களா தெரியாமல் செய்கிறார்களா என்று ரசிகர்களை குழப்பும் அளவுக்கு இவர்கள் இருவரும் இருக்கிறார்கள். இதைப் பார்த்த ரசிகர்கள் மூன்றாவது சீசனில் வனிதா விஜயகுமார் எப்படியோ அதுபோல இந்த சீசனில் பார்வதி என்று யோசிக்கும் அளவுக்கு சென்று விட்டார்கள். இப்படி இருக்கும்போது, ஒன்றாக கொஞ்சிக் குழாவிக் கொண்டு இருந்த ரம்யா ஜோ, அரோரா மற்றும் ஆதிரைக்கு இடையில் புதிதாக பஞ்சாயத்து தொடங்கியுள்ளது.
அதாவது, பிக் பாஸ் வீட்டில் இருந்து சூப்பர் டீலக்ஸ் வீட்டிற்கு சென்ற ஆதிரைக்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸை ரம்யா ஜோ வழங்கினார். அதை விட்டுக் கொடுத்தார் என்று கூட கூறலாம். காரணம், டீலக்ஸ் வீட்டிற்குச் சென்றதும் அங்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸை வைத்திருந்தவர்களிடம், தனக்கு நாமினேசன் ஃப்ரீ பாஸ் வேண்டும் என்று, இல்லை என்றால் நான் இந்த வாரத்தில் எலிமினேட் ஆகிவிடுவேனோ என்ற பயம் இருக்கிறது என்று தெரிவித்து நாமினேஷன் ஃப்ரீ பாஸை வாங்கினார். இதுதான் நடந்தது. ஆதிரைக்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸை வழங்க, ரம்யா ஜோவும் ஓட்டு போட்டார். இப்படி இருக்கும்போது இதனால் தான் தற்போது புது பஞ்சாயத்து தொடங்கி உள்ளது.

புது பஞ்சாயத்து: அதாவது, ஆதிரை கொஞ்சிக் கேட்டதால், தன்னிடம் இருந்த நாமினேஷன் ஃப்ரீ பாஸை விட்டுக் கொடுத்ததாக ரம்யா ஜோ தன்னிடம் கூறியதாக, அரோரா ஆதிரையிடம் கூறியதாக கூறி பிரச்னை தொடங்கி உள்ளது. இதனால் ஆதிரை நேரடியாகவே சென்று, சூப்பர் டீலக்ஸ் பாஸ் எனக்கு வேண்டும் என்று நான் கேட்டேன், அதை நீ எனக்கு விட்டுக் கொடுத்தேன் என்று பேசாதே என சண்டைக்குச் செல்கிறார். இது தொடர்பாக பிரச்னை நடந்து கொண்டு இருக்கும் போது வரும் அரோரா, ஆதிரையைப் பார்த்து, அவள் ( ரம்யா ஜோ) எப்படி விட்டுக் கொடுக்க முடியும் என்று கேள்வி எழுப்புகிறார்.

ஒன்னும் தெரியாத பாப்பா: ஆதிரையை நான் நாமினேட் செய்து என்று நான் சொல்லவே இல்லை, ஆனால் அரோரா எப்படி அதைக் கூறுகிறார். அவள் செருப்பைக் கழட்டி அடிக்கச் சொல் நான் வாங்கிக் கொள்கிறேன் என்று கோபத்தில் கத்துகிறார் ரம்யா ஜோ. இதைக் கேட்டதும், வாயை மூடு ரம்யா, இப்படி பேசாதே என்று அரோரா கூறுகிறார். ஆனால் மேலும் கோபமான ரம்யா, சும்மா இரு அரோரா நீ நடிக்காதே. ஒன்னும் தெரியாத பாப்பா, போட்டுச்சாம் தாப்பா என்பது போல நடிக்காதே. இங்கே இருக்கும் போது நீ என்னென்ன பேசினாய் என்று நான் சொல்லவா? உன்னைப் போன்ற புத்தி எல்லாம் எனக்கு இல்லை. நீ பேசாதே" என்று கூறுகிறார். ஒற்றுமையாக இருந்து பார்வதியை டார்கெட் செய்து கொண்டு இருந்தவர்களுக்குள் இப்படி ஒரு பஞ்சாயத்து வந்துவிட்டதா என்று பார்வதிக்கு இப்போது கொஞ்சம் ஜாலியாக இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











