Gana Vinoth: இளையராஜாவின் அந்த பாட்டை பாடிய கானா வினோத்.. மனுசன் பட்டைய கிளப்பிவிட்டுட்டாரு!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 மூன்று வாரங்கள் முடிந்து நான்காவது வாரம் போய்க்கொண்டு உள்ளது. வழக்கமாக எல்லா சீசன்களிலும் போட்டியாளர்களின் சண்டைகளை தவிர ரசிகர்களுக்கு ரசனையான பல விஷயங்கள் நடக்கும். ஆனால் இந்த சீசன் போட்டியாளர்களோ, சண்டை போடுவதற்கு நேரம் போதவில்லை என்பது போல, எப்போதும் ஒரே சண்டைதான். இப்படி இருக்கையில் வெகு சில போட்டியாளர்கள் தான் கொஞ்சம் என்டர்டைமெண்ட் கண்டெண்ட்கள் கொடுத்து வருகிறார்கள். அதில் ஒருவர் கானா வினோத். இவர் அவ்வப்போது பாடும் பாடல்கள் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் மிகவும் நன்றாக உள்ளது. இப்படி இருக்கும்போது கானா வினோத் நேற்று பாடிய பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த சீசனில் பலரது கவனத்தை ஈர்த்த போட்டியாளர்களில் ஒருவர் கானா வினோத். இவரது ஆட்டம் என்பது பலரது கவனத்தை ஈர்த்த ஆட்டமாக உள்ளது. இவர் மற்ற போட்டியாளர்களிடம் நேரடியாகவே எல்லா விஷயத்தையும் பேசுவது என்பது பாராட்டுக்குரியதாக உள்ளது. பொம்மை பொம்மை டாஸ்க்கின் போது இவர் கெமியை தடுத்து நிறுத்தியதற்கு, கெமியின் ரியாக்‌ஷன், அதையடுத்து சபரியின் ஓவர் ரியாக்‌ஷன் என்பதை ரசிகர்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளார்கள். அந்த விஷயத்தில் தன் மீது தவறு இருக்கிறதா இல்லையா என்பதை பற்றிய விவாதத்திற்குள் போகாமல், கெமியிடம் நேரடியாகவே மன்னிப்பு கேட்டது எல்லாம் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

Bigg Boss Tamil 9 Gana Vinoth Sing Ilayaraja Song It Was Very Good

கானா வினோத்தும் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரும் இணைந்து கொண்டு பேசுவது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் ஒரு கட்டத்தில் கானா வினோத் தன்னை வைத்து ஃபேமஸ் ஆகிவிட முயற்சிக்கிறார் என்று சொன்னதற்கு விஜய் சேதுபதி, வாட்டர்மெலன் ஸ்டாருக்கு கொடுத்த பதிலடி மிகவும் முக்கியமானது. இந்நிலையில் அவர் நேற்று, காசி படத்தில் இளையராஜா இசையமைத்து பாடிய பாடலான, " என் மன வானில்" பாடலைப் பாடினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

குறிப்பாக அவர், " இறைவனிடம் வரங்கள் கேட்டேன்
ஸ்வரங்களை அவனே கொடுத்தான்
மனிதரில்.....இதை யாரும் அறிவாரோ
நான் பாடும் பாடல் எல்லாம்
நான் பட்டபாடே அன்றோ
பூமியில்......இதை யாரும் உணர்வாரோ

மனதிலே மாளிகை வாசம்
கிடைத்ததோ மர நிழல் நேசம்
எதற்கும் நான் கலங்கியதில்லை

Bigg Boss Tamil 9 Gana Vinoth Sing Ilayaraja Song It Was Very Good

இங்கே ராகம் உண்டு தாளம் உண்டு
என்னை நானே தட்டிக்கொள்வேன்
என் நெஞ்சில் உண்மையுண்டு
வேறென்ன வேண்டும்" என்ற வரிகளைப் பாடினார். இது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இவரது குரலிலும் இந்த பாடல் கேட்க நன்றாக இருப்பதால் ரசிகர்கள் இந்த வீடியோவை வேகமாக பகிர்ந்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X