Bigg Boss: கைகலப்பில் முடிந்த துஷார் - கம்ரூதின் வாக்குவாதம்.. இதுக்கும் சேனலை மாத்த சொல்லுவீங்களா VJS?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 மூன்றாவது வாரத்தில் சென்று கொண்டுள்ளது. வழக்கமாக ரசிகர்களுக்கு ஏதாவது ஒரு போட்டியாளர் மீது பொதுவாகவே அதிருப்தியும் எதிர்ப்பும் இருக்கும். இல்லை என்றால் அவ்வப்போது சில போட்டியாளர்களின் நடவடிக்கைகள் அதிருப்தியைக் கொடுக்கும். ஆனால் இந்த சீசன் தான் ஏதோ சாபம் வாங்கி வந்தது போல, தொடக்கத்தில் இருந்து இப்போது வரை அதிருப்திகளை மட்டுமே கொடுத்து வருகிறது. இப்படி இருக்கையில் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வரும் வீடியோவில், துஷார் மற்றும் கமருதீன் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்கள்.
துஷார் மற்றும் கமருதீன் என இருவருக்கும் இடையில் லேசான பனிப்போர் ஆரம்பத்தில் இருந்தே இருந்து வந்தது. இந்த சீசனின் தொடக்கத்தில் இருந்தே கமருதீன் மிகவும் மோசமாகவே நடந்து வருகிறார். இன்னும் சொல்லப்போனால் சக போட்டியாளர்களுடன் ஏதாவது வாக்குவாதம் ஏற்பட்டால், ஒரு கட்டத்திற்கு மேல், அவர்களை மிகவும் மோசமாக விமர்சிக்கிறார். சில நேரங்களில் ஒருமையில் சபையில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்துகிறார்.

கடந்த வாரத்தில் கேப்டன்சி டாஸ்கின் போது, சக போட்டியாளர் சுபாவை பார்த்து, மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தினார். அதேபோல்தான், அரோரா, ஆதிரை, ரம்யா என அவர் யாருடன் சண்டை போட்டாலும் கோபத்தில் வார்த்தைகளை விடுகிறார். இப்படி இருக்கும்போது அவருக்கும் துஷாருக்கும் ஏற்பட்ட பிரச்னையில், துஷார் மீது கமருதீன் கையை வைத்து தள்ளி விட, துஷார் கோபத்தில் கமருதீன் மீது கையை வைக்க பெரிய பிரச்னையே ஏற்பட்டு விட்டது.
அடிதடி சண்டை: நான் இங்கு நின்றால் உங்களுக்கு என்ன என்று கமருதீனை நோக்கி துஷார் சொல்லி உள்ளார். அதற்கு கமருதீனோ, இதே வார்த்தையை நீ வெளியில் பேசி இருந்தால் தலையை திருப்பிக் கையில் கொடுத்து இருப்பேன் என்று ஆக்ரோஷமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். அதற்கு துஷார், இது வெளியில் இல்லை, இது பிக் பாஸ் வீடு என்று கூற, வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. உடனே சக போட்டியாளர்கள் சுதாரித்துக் கொண்டு இருவருக்கும் இடையிலான பிரச்னையை பெரிதாக்காமல் பார்த்துக் கொண்டனர்.

விஜய் சேதுபதியை விளாசிய ரசிகர்கள்: வீட்டின் கேப்டன் கனி திரு தன்னால் முடிந்த அளவுக்கு இருவருக்கும் இடையிலான பிரச்னையை தீர்த்து வைக்க முயற்சித்தார். இப்படி இருக்கும்போது, இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள், இப்படி அடுச்சுக்குறாங்களே இதுக்கு ரெட் கார்டு கொடுப்பீங்களா இல்லை இதுக்கும் சேனல் மாத்துங்கனு சொல்லுவீங்களா என்று கேட்டு வருகிறார்கள். இவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.
வைல்ட் கார்ட் போட்டியாளர்கள்: இந்த சீசனில் மூன்றாவது வாரத்தில் இருந்தே வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் களமிறக்க பிக் பாஸ் தரப்பில் ஏற்பாடுகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ புரோமோக்களும் வெளியிடப்பட்டது. இதைப் பார்த்த ரசிகர்கள் வைல்ட் கார்ட் போட்டியாளர்களையாவது நல்ல போட்டியாளர்களாக தேர்வு செய்யுங்கள் என்று தங்களது ஆதங்கத்தை கமெண்ட் செக்ஷனில் கொட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











