Bigg Boss 9: காட்டு கத்து கத்திட்டு வெளியேறிய நந்தினி.. பிக்பாஸையே ஒரு கை பார்ப்பாங்க போலயே!
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 கடந்த வாரத்தில் இருந்து தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. மத்த சீசன்களில் எல்லாம் ஒரு நாள் முழுவதும் சேர்த்து ஒரு மணி நேர கண்டெண்ட்டுக்கு பிக் பாஸ் டீம் படாத பாடு படுவார்கள். ஆனால் இந்த சீசனில் அந்த குறை எல்லாம் இல்லவே இல்லை. இன்னும் சொல்லப் போனால், இந்த சீசனில் களமிறக்கப்பட்ட போட்டியாளர்கள் எல்லாம் கண்டெண்ட் கொடுத்தால்தான் வீட்டில் நிலைக்க முடியும் என்று நினைத்துக் கொண்டு, கண்டெண்ட்டுகளை வாரி வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் போட்டியாளர் நந்தினி நேற்றைய எபிசோடில் வீட்டில் இருந்து வெளியேறினார். இது பலருக்கும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
முதல் இரண்டு நாட்கள் அமைதியாக இருந்த நந்தினிக்கு கடந்த கடைசி இரண்டு நாட்கள் வழக்கமானதாக அமையவில்லை. காரணம் சக போட்டியாளர்களின் நடவடிக்கைகள் மீது அவருக்கு பெரும் அதிருப்தி இருந்தது. இதனாலோ என்னவோ, அவர் போட்டியில் இருந்து வெளியேறுவதற்கு முந்தைய தினம் இரவும் போட்டியாளர்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார். இன்னும் சொல்லப்போனால், போட்டியாளர்களை கோபத்தின் உச்சிக்கு சென்று திட்டவும் செய்தார். கோபத்தில் இருக்கிறார், மிகவும் பயங்கரமாக அழுகிறாரே என்று அவரை ஆசுவாசப்படுத்த சென்ற போட்டியாளர்கள் மீது மேலும் கோபத்தைக் காட்டினார். அதன்பின்னர் போட்டியாளர் கனி திரு மட்டும் தனியாக சென்று அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்து தூங்க வைத்தார்.

நந்தினியின் உச்சகட்ட கோபம்: அதேபோல் அவர் வெளியேறிய நாளிலும் நடைபெற்றது. இதில் என்னவென்றால் அவர் போட்டியாளர்களை திட்டியது மட்டும் இல்லாமல், பிக் பாஸையும் மிகவும் மோசமாக விமர்சித்தார். குறிப்பாக, எனது உண்மையான அன்புக்கு இங்கு மதிப்பு இல்லை. இங்கு யாரும் உண்மையாக இல்லை. அன்பை சந்தேகப்படுகிறார்கள். நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் என்னை எல்லோரும் நாமினேட் செய்யுங்கள். நான் வெளியேறுகிறேன். இப்போது விட்டால் கூட போது நான் விஜய் சேதுபதியிடம் சொல்லிவிட்டு கிளம்பி விடுவேன் என்று கூறினார். மேலும் அவர் கோபத்தின் உச்சத்தில் இருக்கும்போது மிகவும் மோசமான வார்த்தைகளால் சக போட்டியாளர்களை திட்டினார்.
வெளியேறிய நந்தினி: இப்படி இருக்கையில் போட்டியாளர் பார்வதி, இவரை ஆசுவாசப்படுத்த முயற்சித்தார். அதே நேரத்தில் மனநலன் தெரபிக்கு போ என்று எல்லாம் அறிவுரை கூறி வந்தார். அதன் பின்னர் பிக் பாஸ் அவரை கன்ஃபக்ஷன் அறைக்கு அழைத்து என்ன பிரச்னை என்று கேட்டார். நந்தினி நிகழ்ச்சி மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்த, உடனே பிக் பாஸோ, உங்களுக்கு இடது புறத்தில் ஒரு கதவு உள்ளது. அதில் இருந்து நீங்கள் வெளியேறலாம் என்று கூறினார். நந்தினியும் வெளியேறிவிட்டார்.
ரசிகர்கள் ரியாக்ஷன்: நந்தினி வெளியேறியது குறித்த விவாதம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அதாவது, சிலர் நந்தினி வெளியேற்றப்பட்டது நல்லது என்றும், சிலர் நந்தினி வெளியேறியது ஆட்டத்தின் மீது நம்பகத்தன்மையை கேள்வி எழுப்புகிறது என்றும் பேசி வருகிறார்கள். நந்தினி திரை உலகம் மற்றும் சின்னத்திரை உலகில் நன்கு அறியப்பட்ட தொகுப்பாளினி ஆவார்.


Click it and Unblock the Notifications











