Bigg Boss 9 : வேலியில போற ஓணாவை எடுத்து.. அவரசமாக பிரசாந்த் ரங்கசாமி வாங்கிக் கொண்ட பல்பு.. எதுக்கு?
சென்னை: பிக் பாஸ் என்றாலே பஞ்சாயத்து, பஞ்சாயத்து என்றாலே பிக்பாஸ் தான். பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் பஞ்சாயத்துக்கள் ஒருபுறம் இருந்தாலும், ரசிகர்களுக்கு இடையில் நடைபெறும் பஞ்சாயத்துகளும் இணையத்தில் பெரும் கவனத்தைப் பெறும். இந்நிலையில் 9-தாவது சீசன் இன்றுதான் தொடங்கி உள்ள நிலையில், பிரபல சினிமா விமர்சகர், பிரசாந்த் ரங்கசாமி இணையத்தில் விமர்சனங்களை எதிர் கொண்டு உள்ளார்.
அதாவது இதுவரை சில போட்டியாளர்கள் தான் வீட்டிற்குள் சென்றுள்ளார்கள். இந்நிலையில் ரசிகர்கள் பலரும் போட்டியாளர்களின் அறிமுகத்தையும் வீட்டையும் ஆவலாக பார்த்து வருகிறார்கள். வீடு பிரமாண்டமாகவும் அழகாகவும் இருக்கிறது என்று பலரும் பேசி வருகிறார்கள். மேலும் பலர், ஒவ்வொரு போட்டியாளரும் மிகவும் சுவாரஸ்யமாகவும் சிறப்பாகவும் இருப்பதாக பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

இப்படி இருக்கும்போது, பிரபல சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி தனது எக்ஸ் பக்கத்தில் இதுவரை அறிமுகம் ஆகியுள்ள போட்டியாளர்களில் FJ மிகவும் நம்பிக்கை அளிக்கக் கூடிய நபராக இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார். அதாவது, " FJ - looks like a promising guy . Paarpom !" என்று பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த பிபி மாமா என்று எக்ஸ் பக்கத்தில் இயக்குபவர் பிரசாந்த் ரங்கசாமியை, " போதும் ப்ரோ, போன சீசனில் நீங்க யாரை சொன்னீங்கனு தெரியும் தானே" என்று கமெண்ட் போட்டுள்ளார்.
இப்படி இருக்கும் போது மற்றொரு இணையவாசி, யாரைச் சொன்னார் என்று கேட்க, உடனே அந்த பிபி மாமா என்ற இணையவாசி, கடந்த சீசனில் போட்டியாளராக களமிறங்கி சில வாரங்களில் வெளியேறிய சுனிதா நம்பிக்கை அளிக்கும் போட்டியாளர் என்று தெரிவித்துள்ளார் என்று ஸ்க்ரீன் ஷாட் உடன் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த இணையவாசிகள் பலரும் இந்த பிரசாந்த் ரங்கசாமி அமைதியாகவே இருக்க மாட்டார் போலயே என்று பேசி வருகிறார்கள்.

இந்த சீசனில் ஸ்டேன்டப் காமெடியன் விக்கல்ஸ் விக்ரம், குக் வித் கோமாளி கனி திரு, வாட்டர் மெலன் திவாகர், விஜே பார்வதி, வி.ஜே.ஷோபனா, பிரவீன்ராஜ் தேவசகாயம், நடிகை மாலினி ஜீவரத்தினம், நடிகர் சபரிநாதன், வியனா, இயக்குநர் பிரவீன் காந்தி, கேரளாவைச் சேர்ந்த மாடல் அழகி அப்சரா சி.ஜே, வினோத் பாபு, ஜனனி அசோக்குமார், வைஷாலி கேம்கர், ரோஷன், ரம்யா ஜூ, மஞ்சுநாதன் உள்ளிட்டோர் களமிறங்கி உள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











