Bigg Boss: வெடித்தது பிரச்னை.. அத்துமீறினாரா வாட்டர்மெலன்? விளாசி விட்ட பார்வதி.. என்னதான் நடக்குது?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ரெட் கார்ட் இல்லாமல் போகும் என்று பலரும் நினைத்தால் வீட்டிற்குள் நடப்பதை எல்லாம் பார்த்தால் அப்படி இல்லை என்ற பேச்சுதான் ரசிகர்கள் மத்தியில் ஓடிக் கொண்டு உள்ளது. ஆண் போட்டியாளர்கள் மற்றும் பெண் போட்டியாளர்கள் என வீடே கலகலவென இருக்கும் என்று நினைத்தால் போட்டியாளர்களுக்கு இடையில் ஏதோ ஏழேழு ஜென்ம பகை இருப்பது போல ஆடிக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது ரெட் கார்ட் என்ற பேச்சு ரசிகர்கள் மத்தியில் கிளம்பியுள்ளது பலருக்கும் ஷாக் கொடுக்கும் விதமாக உள்ளது.
அதாவது, இந்த சீசன் தொடங்கி இப்போதுதான் இரண்டு வாரங்கள் முழுவதுமாக முடிந்து, மூன்றாவது வாரம் போய்க்கொண்டு உள்ளது. கடந்த இரண்டு வாரமாக வி.ஜே. பார்வதி தனது சக போட்டியாளரான வாட்டர் மெலன் ஸ்டாரை அண்ணா என்று தான் அழைத்து வருகிறார். இப்போதும் அவர் அப்படித்தான் அழைத்து வருகிறார். இப்படி இருக்கும்போது, வாட்டர் மெலன் ஸ்டார் இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே பார்வதியை டார்லிங் என்று அழைப்பதும், யாரோ உன்னை திருமணம் செய்து கொள்வதற்கு நான் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்று எல்லாம் பேசி வருகிறார். இதற்கு எல்லாம் பார்வதியும் தனது ஸ்டைலில் பதிலடிகளைக் கொடுத்து வருகிறார். ஆனாலும் வாட்டர் மெலன் ஸ்டார் தனது அப்ரோச்சை மாற்றுவதாக இல்லை.

திவாகர் நடவடிக்கைகள்: இதில் என்ன முக்கியமான விஷயம் என்றால் வாட்டர் மெலன் ஸ்டார் வீட்டில் இருக்கும் மற்ற பெண் போட்டியாளர்கள் சிலரிடமும் இப்படித்தான் நடந்து கொள்கிறார். குறிப்பாக அரோராவிடம் கொஞ்சம் ஓவராகவே போகிறார் என்றே சொல்லலாம். இது தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் அதிகம் பரவியது. இப்படி இருக்கையில் இன்று அதாவது அக்டோபர் 22ஆம் தேதி, பிக் பாஸ் தரப்பில் இருந்து வெளியிடப் பட்ட இரண்டாவது ப்ரோமோவில் பார்வதிக்கும் வாட்டர் மெலன் திவாகருக்கும் இடையில் பெரிய பிரச்னையே நடைபெறுகிறது.
சண்டை: அதாவது, " இப்படி இருக்கையில் சூப்பர் டீலக்ஸ் ஹவுஸில் இருக்கிறார் திவாகர், இவருக்கும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பார்வதிக்கும் இடையில் பெரும் பிரச்னையே வெடித்துள்ளது. இதில் திவாகரைப் பார்த்து பார்வதி, உனக்காக நான் என்ன எல்லாம் பேசியிருக்கேன் என்று எனக்குத் தெரியும். அதனால் என்னால் செய்ய முடியாது என்று கூறுகிறார். உடனே அருகில் இருக்கும் மற்றொரு ஆண் போட்டியாளர் பார்வதியை சமாதானப்படுத்த முயற்சி செய்தார். அதற்கு பார்வதியோ, ' ஏய்.. போடா' என்று கத்துகிறார்.

காரணம் என்ன?: பார்வதி கோபத்தின் உச்சத்திற்கே சென்று கத்துகிறார். வாட்டர் மெலன் திவாகரை நோக்கி, உனக்காக எக்ஸ்ட்ரா சாப்பாடு எல்லாம் தருகிறார்கள் தானே என்று கூற, திவாகரோ, ' உனக்கு சாப்பாடே கொடுக்கவில்லையா? உனக்கு எக்ஸ்ட்ரா சாப்பாடு கொடுக்கப்படவில்லையா? சும்மா சீன் போடாத என்று கத்துகிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் இவர்களுக்கு இடையில் சண்டை வருவதைப் பார்க்கும்போது நிம்மதியாக உள்ளது என்று சிலரும், திவாகரின் சமீபத்திய நடவடிக்கைகளை தவிர்க்க பார்வதி இவ்வாறு கோபத்தை வெளிப்படுத்தி, அவருடன் சண்டை போட்டிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











