Bigg Boss: ஆதிரைக்கு ஓவர் திமிரா.. என்னங்க புரோமோவை பாத்துட்டே ரசிகர்கள் திட்ட ஆரம்பிச்சுட்டாங்க!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 கடந்த வாரம் தொடங்கி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. ஒரு வாரத்திற்கு உள்ளாகவே வெளியேறிய போட்டியாளர், ஏதோ ஆட்டம் தொடங்கி சில வாரங்கள் ஆனது போல, போட்டியாளர்களுக்கு இடையில் சரியான சண்டைகள் என இந்த சீசன் பிக் பாஸ் ஏதோ கொஞ்சம் ஏடா கூடமாக தான் சென்று கொண்டுள்ளது. இப்படி இருக்கையில் இன்று அதாவது அக்டோபர் 11ஆம் தேதி முதல் வீக் எண்ட் புரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது இந்த புரோமோவில், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி போட்டியாளர்களை நோக்கி அவர்களின் பெயரைக் கேட்கிறார். உடனே போட்டியாளர்கள், சபரி, விக்ரம், எஃப்.ஜே, பிரவீன் என இவர்கள் நால்வரும் எழுந்து நின்று தங்களது பெயரைக் கூறுகிறார்கள். அடுத்து அமர்ந்திருந்த ஆதிரை, எழுந்து நின்று பெயரைக் கூறாமல், தனது கையை தூக்கி தனது பெயரை கூறுகிறார்.

ஆதிரை செய்தது என்ன?: இதை கவனித்துக் கொண்டு இருந்த விஜய் சேதுபதி, உடனே, "உங்களுக்கு முன்னாடி நான்கு பேர் எழுந்து நின்று பெயரைச் சொன்னார்கள்" என்று கூறினார். அதற்கு ஆதிரையோ, ' ஓ.கே' என்று கூற, கடுப்பான விஜய் சேதுபதி, " ஓ.கே-ன்னா என்ன அர்த்தம்" என்று கேட்டார். அதற்கு ஆதிரையோ, " நான் நார்மலாகத்தான் சொன்னேன்" என்று கூறினார். அதன் பின்னர், விஜய் சேதுபதியோ, " நான்கு பேர் எழுந்து நின்று பெயரைச் சொல்லும்போது அதை பிரேக் செய்ய வேண்டும் என்ற தேவை எங்கிருந்து வந்தது" என்று கேட்டார்.
கடுப்பான விஜய் சேதுபதி: அதற்கு ஆதிரையோ, பிரேக் செய்கிறேன் என்று இல்லை சார். அது அவர்களின் விருப்பம். இது எனது விருப்பம் என்று கூறினார். தொடர்ந்து பேசிய விஜய் சேதுபதி, " உங்கள் விருப்பத்திற்கு இருக்க இங்கு வரவில்லை. நாம் ஒரு விஷயத்தை விவாதிக்கும்போது அது வேறு, நாம் வேறு என்று புரிந்து கொள்ளத் தெரிய வேண்டும். இல்லை என்றால் எல்லாவற்றையும் பர்சனலாக எடுத்துக் கொண்டால் பாதிப்பு நமக்குத்தான். அது நல்லது இல்லை " என்று கூறுகிறார்.
ரசிகர்களின் ரியாக்ஷன்: இந்த புரோமோவைப் பார்த்ததும் பலரும் ஆதிரையைப் போட்டு கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். பலர் எல்லாம், ஆதிரைக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். ஓவர் திமிரு பிடித்த போட்டியாளர் இவருக்கு இது எல்லாம் தேவைதான். உள்ளே போய் திமிரா ஆட்டிடியூட் காட்டீட்டு இரு. நாங்க வெளியே பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லி அனுப்பி இருப்பார்கள் போல, ஆதிரைக்கு இந்த அடி எல்லாம் பத்தாது என்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் விஜய் சேதுபதி விளையாட்டுக்காகத்தான் இப்படிப் பேசி இருப்பார், தன்னிடம் பேசுபவர்கள் எழுந்து நின்று பேச வேண்டும் என்று எல்லாம் அவர் நினைக்க மாட்டார். இது போல கடந்த சீசன்களில் பல பார்த்துவிட்டோம் என்றும் பேசி வருகிறார்கள். மேலும் புரோமோவை மட்டும் பார்த்து எதையும் முடிவு செய்ய வேண்டாம் என்றும் சிலர் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











