Bigg Boss: மயங்கி விழுந்த ரம்யா ஜோ.. மூச்சு பேச்சே இல்லை.. நடுங்கிப் போன விக்கல்ஸ் விக்ரம்

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி இரண்டாவது வாரம் முடியப்போகிறது. இப்படி இருக்கும்போது போட்டியாளர் ரம்யா ஜோ நேற்றைய எபிசோடில் தனது கதையைச் சொன்னார். அதன் பின்னர் சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழவே, சக போட்டியாளர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர். ஆனால் ரம்யா ஜோ கண் விழிக்கவே இல்லை. இது போட்டியாளர்களுக்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. என்ன நடந்தது என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

நேற்றைய எபிசோடில் ரம்யா ஜோவுக்கும் அரோராவுக்கும் இடையில் பெரிய பிரச்னை ஏற்பட்டது. அரோராவின் பேச்சும் ரம்யா ஜோவை மேலும் காயப்படுத்தும் அளவுக்கு இருந்ததால், ரசிகர்களுக்கே அவர்களின் சண்டை பெரிய அப்செட்டைக் கொடுத்தது. அதன் பின்னர் பிக் பாஸ் தரப்பில் இருந்து, இன்று யார் கதை சொல்ல விரும்புகிறீர்கள், என்று கேட்டதற்கு, நான் நாமினேசனில் இருக்கிறேன் என்று கமருதீன் கதை சொல்ல முன் வந்தார். அதேபோல் ரம்யா ஜோவும், இன்றைக்கு வீட்டில் சில தர்ம சங்கடமான சூழல்கள் உருவாகிவிட்டது. எனவே நான் இன்றைக்கே எனது கதையைச் சொல்லி விடுகிறேன் என்று தெரிவித்து தனது கதையைக் கூறினார்.

ரம்யா தனது கதையை சொன்னதை பிக் பாஸ் எபிசோடில் குறைந்த அளவிலேயே ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால் 24 மணி நேர லைவ் ஸ்டீரிமிங்கில் அவரது கதை முழுவதுமாக ஸ்டீரிம் ஆனது. அவரது கதை மிகவும் சோகமாக இருந்தது. அவர் தனது வாழ்க்கையில் தான் சந்தித்த ஒவ்வொரு இன்னலையும், தனது வாழ்க்கையில் இருந்த சந்தோசங்களையும் பகிர்ந்து கொண்டார். இவரது கதையைக் கேட்ட பின்னர் மொத்த வீட்டாரின் பார்வையும் ரம்யா குறித்து மொத்தமாக மாறிவிட்டது என்று கூறலாம்.

Bigg Boss Tamil 9 Ramya Joo Fainted After He Told Her Life Stroy With Emotional Vikkals vikram Got Angry
Photo Credit:

மயங்கிய ரம்யா ஜோ: தனது கதையைச் சொல்லிவிட்டு வெளியே வந்த கொஞ்ச நேரத்தில் ரம்யா ஜோ மயங்கி விழுந்தார். நடந்து சென்று கொண்டிருந்த அவர் திடீரென விழுந்தது அனைவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. சக போட்டியாளர்கள் எல்லாம் ரம்யா மீது தண்ணீரை தெளித்து, அவருக்கு விசிறியைக் கொண்டு காற்று வீசி அவர்களால் முடிந்த அளவுக்கு முதலுதவி செய்து வந்தனர். ரம்யா கிட்டத்தட்ட 4, 5 நிமிடங்கள் மூச்சு பேச்சு இல்லாமல், இருந்தார். இது மட்டும் இல்லாமல், அவர் கண்ணைத் திறந்து பார்க்காததால், போட்டியாளர்கள் நடுங்கி விட்டார்கள்.

டென்சன் ஆன விக்ரம்: ஒருபுறம் விக்கல்ஸ் விக்ரம் போட்டியாளர்கள் மற்றும் பிக் பாஸ் குழுவினரைப் பார்த்து, " டேய்... என்னடா பண்ணிட்டு இருக்கீங்க, சீக்கிரம் ஏதாவது பண்ணுங்கடா" என்று அழுது கொண்டே கத்துகிறார். போட்டியாளர் சுபாவோ, பிக்பாஸில் இருந்து மருத்துவர்களை வரச் சொல்லி அழுகிறார். ஒரு வழியாக ரம்யா கண் விழித்து பார்த்த பின்னர், அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுமாறு பிக்பாஸ் தெரிவித்தார். அதையைத்து அழைத்துச் சென்றனர். ஒரு பத்து நிமிடம் பிக்பாஸ் வீடே நடுங்கிப் போனது என்றுதான் கூறவேண்டும்.

எமோஷனல் ஆன அரோரா: ரம்யா ஜோ தனது வாழ்க்கையில் இவ்வளவு இன்னல்களை எதிர்கொண்டு இருப்பார், என்று தெரியாமல், அவரைக் காயப்படுத்தும் வார்த்தைகளை நான் பயன்படுத்தி விட்டேன் என்று, அரோரா ஒருபுறம் தேம்பித் தேம்பி அழுதார். விக்கஸ் விக்ரமோ பிக்பாஸ் தரப்பினரை கடுமையாக விமர்சிக்க தொடங்கிவிட்டார். விளையாட்டில் அடிபடுகிறது என்றால் பரவாயில்லை, அதை ஃபுட்டேஜ்க்காக என்று புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அந்த பொண்ணு மூச்சு பேச்சு இல்லாமல் உள்ளார், ஆனால் யாரும் வரவில்லை என்றால் அது என்ன அர்த்தம், டி.ஆர்.பிக்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்களா என்பது போல தனது அதிருப்தியை தெரிவிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X