Bigg Boss Eviction: ஸ்வீட் பாக்ஸோட ரெடியா இருங்க.. தீபாவளிக்கு செம எவிக்ஷன் இருக்கு.. VJS சம்பவம் உறுதி!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகிறது. இப்படி இருக்கும்போது இந்த சீசனில் தான் முதல் வாரத்தில் இருந்தே எவிக்ஷன் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ரசிகர்கள் இந்த சீசனைப் போட்டு எட்டுத் திக்கும் கிழித்து தொங்கவிட்டு வருகிறார்கள். வைல்ட் கார்டில் ஆவது, நல்ல போட்டியாளர்களை களமிறக்க கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்நிலையில் இரண்டாவது வாரத்தில் பலருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு போட்டியாளர் வெளியேற போவதாக கூறப்படுகிறது.
இந்த வாரத்தைப் பொறுத்த வரையில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், பார்வதி, சபரி, கம்ருதீன், ரம்யா ஜோ, அப்சரா, எஃப்.ஜே., கெமி மற்றும் அரோரா நாமினேட் ஆனார்கள். இதில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று நாமினேட் ஆனவர் என்றால் அது பார்வதி தான். அதையடுத்து திவாகர். அதன் பின்னர்தான் மற்ற போட்டியாளர்கள் இருந்தார்கள்.

ரொம்ப மோசம்: நாமினேஷன் ஃப்ரீ பாஸ் இல்லாத போதும் நாமினேசனுக்குள் வராத ஆட்கள் என்றால் அது கனி திரு, கலையரசன், பிரவீன் ராஜ், விக்கல்ஸ் விக்ரம் உள்ளிட்டோரை கூறலாம். இப்படி இருக்கும்போது இந்த வாரத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் அதிருப்தியை சம்பாதித்தவர் என்றால் அதில் கிட்டத்தட்ட பெரும்பான்மையான போட்டியாளர்களை கூறலாம். பிக்பாஸ் என்றாலே புலம்பலில் புறம் பேசுவது என்றாலும், கடந்த சீசனில் எல்லாம் போட்டியாளர்களுக்கு 100வது நாளை நோக்கிய இலக்கு இருந்தது. ஆனால் இந்த சீசனில் போட்டியாளர்களுக்கு அப்படியான எண்ணமே இல்லையோ என்ற சந்தேகம் அவர்களது ஆட்டத்தைப் பார்க்கும் போது ரசிகர்களுக்கு இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது.
இரண்டாவது வார எவிக்ஷன்: இப்படி இருக்கும் போது, முதல் வாரத்திலேயே பிரவீன் காந்தி வெளியேறினார். இந்நிலையில் இரண்டாவது வாரத்தில் இதுவரை ரசிகர்கள் அளித்துள்ள வாக்குகளின் அடிப்படையில், அரோரா தான் கடைசி இடத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இவருக்கு கிட்டத்தட்ட 52 ஆயிரம் வாக்குகள் தான் கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் இந்த வாரத்தில் அரோரா தான் வெளியேற அதிக வாய்ப்புகள் என்று கூறப்படுகிறது.

ரசிகர்கள் மனநிலை: அரோரா வெளியேறினால் அதைக் கொண்டாட தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதற்கு காரணம் அரோராவின் நடவடிக்கைகள் அப்படி இருந்தது. பல இடங்களில் அவர் பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. இது மட்டும் இல்லாமல் பிக்பாஸ் போட்டிக்கு என்று அவர் எந்த பங்களிப்பும் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இப்படி இருக்கும்போது, விஜய் சேதுபதி இந்த வாரத்தில் அரோராவை தனது கேள்விகளால் திக்குமுக்காட வைப்பார் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.


Click it and Unblock the Notifications











