Bigg Boss Promo: விஜய் சேதுபதி ரோஸ்ட் இருக்கு.. ரெட் கார்டு கன்பார்மா? இல்லை இதுவும் வெற்று பில்டப்பா?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 கடந்த ஐந்தாம் தேதி தொடங்கி, இன்றுடன் 20 நாட்களை நிறைவு செய்கிறது. மூன்று வாரங்கள் முடிந்துவிட்டது, ஆனால் இந்த மூன்று வாரங்களில் தமிழ் பிக் பாஸ் ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் கோபமும் சலிப்பும் தான் ஏற்பட்டு வருகிறது. வார வார நடக்கும் பிரச்னைகளுக்கு வார இறுதியில் விஜய் சேதுபதி கட்டாயம் ஏதாவது, கேள்வி எழுப்புவார் என்று எதிர்பார்த்தால் அவரோ, பிடிக்க வில்லை என்றால் சேனலை மாற்றுங்கள் என்று சொல்வது போல வார இறுதி நாட்களை கையாளுகிறார்.

இப்படி இருக்கும்போது, மூன்றாவது வாரத்தின் முதல் புரோமோ பிக் பாஸ் தரப்பில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதில் அவர் சொல்வதே, " வீட்டில் போட்டியாளர்கள் நடந்து கொள்வது ரசிக்கும்படியாக இருக்க வேண்டும், அல்லது சகித்துக் கொள்ளும்படியாகவாவது இருக்க வேண்டும், ஆனால் சில போட்டியாளர்கள் நடந்து கொள்வது சகிக்க முடியவில்லை. இது எல்லாம் இவர்கள் தெரியாமல் எல்லாம் செய்யவில்லை, தெரிந்துதான் செய்து கொண்டு இருக்கிறார்கள். அப்படியான அவர்கள் செய்வது சகிக்கும் அளவுக்கு இல்லை என்றாவது சொல்ல வேண்டும் அல்லவா" என்று கூறுகிறார்.

Bigg Boss Tamil 9 Vijay Sethupathi Promo Creates Hope On Fans For Red Card

விஜய் சேதுபதி ரோஸ்ட்: இந்த புரோமோவைப் பார்த்தால் இன்னைக்கு நைட் சம்பவம் இருக்கு என்று தோன்றுகிறது. ரசிகர்கள் சிலரோ, இன்னைக்கு விஜய் சேதுபதி போட்டியாளர்களை போட்டு வறுத்து எடுப்பதைப் பார்க்கலாம் போலயே என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் சில ரசிகர்கள், விஜய் சேதுபதி வரும் போது எல்லாம் பிக் பாஸ் தரப்பில் இருந்து வெளியிடப்படும் புரோமோக்களுக்கு எல்லாம் பில்டப் நன்றாகத்தான் உள்ளது, ஆனால் நிகழ்ச்சியை பார்க்கும் போது உப்பு சப்பு இல்லாமல் இருக்கிறது என்றும் பேசி வருகிறார்கள்.

வைல்ட் கார்டு என்ட்ரி இருக்கா?: ரசிகர்கள் இவ்வாறு பேசுவதற்கு பல காரணங்களும் சம்பவங்களும் உள்ளது. இந்த வாரத்தில் மட்டும் விஜய் சேதுபதி பல பிரச்னைகள் குறித்து பேச வேண்டியுள்ளது. இப்படி இருக்கும்போது, இந்த வாரத்தில் வைல்ட் கார்டு என்ட்ரிக்கு ஏற்கனவே புரோமோக்கள் வெளியிடப்பட்டது. அப்படிப் பார்த்தால் விஜய் சேதுபதி எத்தனை பிரச்னைகளை கேள்வி எழுப்புவார் என்று பலரும் கேட்டு வருகிறார்கள்.

Bigg Boss Tamil 9 Vijay Sethupathi Promo Creates Hope On Fans For Red Card

ரெட் கார்டு இருக்கா?: இது ஒரு புறம் இருக்க, ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்பது ரெட் கார்டு விவகாரம். இந்த சீசனில் ரெட் கார்டுக்கு தகுதியான நபர்கள் என்று ஏற்கனவே இருவரது பெயர் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அதில் முதலாவது நபர் கமருதீன், இவர் சக போட்டியாளர்களிடம் அடிக்கடி கை கலப்பில் ஈடுபடுகிறார். இது மட்டும் இல்லாமல் சில நேரங்களில் மிரட்டல்களும் விடுக்கிறார். அதேபோல், பெண்களிடம் மிகவும் மோசமாக நடந்து கொள்ளும் வாட்டர் மெலன் ஸ்டாருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். இவர்கள் விஷயத்தில் விஜய் சேதுபதி என்ன மாதிரியான முடிவுளை எடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த வாரம் எலிமினேஷன் இருக்குமா என்ற கேள்வியும் ரசிகர்களுக்கு உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X