திருந்தாத பார்வதி.. எல்லாம் ரசிகர்களின் தலைவிதி.. ரொம்ப நல்லா இருக்கு பிக்பாஸ் உங்க ஆட்டம்!
சென்னை: இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை எப்படியாவது ஒரு நல்ல சீசன் என்ற பெயரை வாங்க வைத்துவிடலாம் என மொத்த பிக் பாஸ் டீமும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களோ, " இட்ஸ் வெரி ராங் ப்ரோ" என்று சொல்வது போல, பிக் பாஸ் குழுவினரின் எல்லா முயற்சிகளையும் போட்டு துவம்சம் செய்து வருகிறாகள். இதில் இந்த சீசனை காலி ஆக்கிவிட்டுத்தான் அடுத்த வேலை என்று என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கும் முதல் நபராக இருப்பவர், பார்வதி தான்.
பார்வதி மிகவும் சுதந்திரமானவராக இருக்கலாம், பார்வதி மட்டும் இல்லை அது ஒவ்வொரு தனி மனிதரும் சுதந்திரமானவராக இருக்க அனைத்து உரிமைகளும் இந்தியா போன்ற குடியரசு நாட்டில் தனி மனித உரிமையும் கூட. ஆனால் பிக்பாஸ் வீடு என்பது ஒரு நிகழ்ச்சி, இன்னும் சொல்லப்போனால் நமது அறிவை சோதிக்கிற, நமது மன தைரியத்தை சோதிக்கிற, உடல் வலிமையை சோதிக்கிற நிகழ்ச்சி. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு என தனி விதிமுறைகளை, நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்காக பிக் பாஸ் தரப்பில் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இது ரசிகர்களுக்கு சீசனுக்கு சீசன் புது அனுபவத்தை கொடுக்கிறது. இது இந்த விளையாட்டின் சுவாரஸ்யமும் கூட. ஆனால் எனக்கும் இந்த விதிமுறைகளுக்கும் சம்பந்தம் இல்லை, நான் எனது விருப்பத்திற்கு தான் இருப்பேன், ஒரு நாளும் விதிமுறைகளை பின்பற்ற மாட்டேன் என்ற மனநிலையில் விளையாடுவது என்பது நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களுக்கு எரிச்சலை உருவாக்குகிறது.
அபத்தம்: பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு வாரம் லக்சுரி வீட்டிற்குச் சென்றபோது, பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்களை வேலை வாங்கும் போதும், தான் கியூ.சி-ஆக இருந்த போது எப்படி எல்லாம் மற்றவர்களை தான் சொல்லும் வேலைகளை எல்லாம் செய்வதை ஏற்றுக் கொண்டார் பார்வதி. அதற்கு காரணம் பிக் பாஸ் தரப்பில் வகுத்து கொடுக்கப்பட்ட விதிமுறைகள் தான். ஆனால் இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது லக்சுரி வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் வேலை சொன்னால், அதை செய்யாமல் மறுப்பது என்பது மிகவுமே அபத்தமாக இருக்கிறது.

பிரதீப் ஆண்டனி: நடந்து முடிந்த ஒட்டுமொத்த பிக்பாஸிலும் வில்லி என்றால் அது வனிதா விஜயகுமாரைச் சொல்லலாம். ஆனால் வனிதாவின் கவுன்ட்டர் அட்டாக் எல்லாமே விதிகளுக்கு உட்பட்டு இருந்தது. அதேபோல் கடந்த 7வது சீசனில் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட பிரதீப் ஆண்டனி தான் இதுவரை நடந்து முடிந்துள்ள பிக்பாஸில் பிக்பாஸ் விதிகளை, பிக் பாஸ் விளையாட்டை அலசி ஆராய்ந்து களத்தில் இறங்கிய ஒரே போட்டியாளர். அதனால் தான் அவருக்கு வாரா வாரம் ரசிகர்கள் தரப்பிலான ஆதரவு பெருகிக் கொண்டே வந்தது. பிரதீப் இருந்தவரை அந்த சீசனின் வில்லனும் கதாநாயகனும் அவர்தான் என்று இருந்தது. ஒரு பீஸ்ட்டாக அந்த சீசனில் வலம் வந்தார்.
ரசிகர்கள் தலையெழுத்து: அவர் ரெட் கார்டு பெற்று வெளியேறிய பின்னரும் கூட ரசிகர்கள் அவருக்காக ரசிகர்கள் குரல் கொடுத்ததை பார்க்க முடிந்தது. அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தகாத வார்த்தைகள் பேசியதுதான். பிக் பாஸ் விதிகளுக்கு எல்லாம் கட்டுப்பட மாட்டேன் என்பவர் முதலில் எதற்காக பிக் பாஸ் போட்டிக்கு செல்ல வேண்டும்? தனக்கான நியாயத்தை பேசும்போது இருக்கும் பார்வதி போல மற்றவர்களும் தைரியமாக பேச வேண்டும் என்று அறிவுரை கூறலாம். ஆனால் பார்வதி போல தன் சௌகரியத்துக்கு இருப்பேன் என்பவரை தொடர்ந்து ஒரு போட்டியில் பிக் பாஸில் நீடிக்கச் செய்வதைப் பார்த்தால், எல்லாம் ரசிகர்களின் தலைவி என்று பலரும் புலம்புவதை பார்க்க முடிகிறது.


Click it and Unblock the Notifications











