அரோராவின் பேன்ட்டை பிடித்து இழுத்த திவாகர்.. பலூன் அக்காவை விடாமல் துரத்துறாரே வாட்டர் மெலன்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கிய நாளில் இருந்தே வாட்டர் மெலான் திவாகர் பலூன் அக்கா என ரசிகர்களால் கொண்டாடப்படும் அரோரா சின்க்ளேரை துரத்திக் கொண்டு இருக்கிறார் என்றும் நீச்சல் குளத்தில் அரோரா இறங்கியதுமே ஓடி வந்து திவாகர் குதித்தார் என ஏகப்பட்ட ட்ரோல்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், நடிக்கிறேன் என்கிற பெயரில் அரோராவின் பேன்ட்டை பிடித்து திவாகர் இழுக்கும் வீடியோ காட்சியை ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

எல்லோரும் என்னை கார்னர் பண்றாங்கனு புலம்பிய திவாகர் இப்போ எப்படியெல்லாம் விளையாடுறாரு பாருங்க என்றும் அவருக்கு அதிகமான ஓட்டுக்கள் கிடைத்து வருவதாகவும் சோஷியல் மீடியாவில் திவாகருக்கு தனி தர்பூசணி ஆர்மியே உருவாகியுள்ளது.
கலைத்தாயே: தங்களுடைய சொந்தக் கதை சோகக் கதை சொல்லும் டாஸ்க் இந்த சீசனிலும் தொடங்கிய நிலையில், திவாகர் பேசும் போது கலைத்தாயே தர்பூசணி வடிவில் வந்ததாக பேசியதையும் தன்னுடைய ஆங்கிலம் சிபிஎஸ்சி ஆங்கிலம் போல இருப்பதாக பாராட்டினார்கள் என லிட்டர் கணக்கில் ரீல் விட்டு வருவதை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
பேன்ட்டை பிடித்து இழுத்த திவாகர்: தான் ஒரு ரொமாண்டிக் ஸ்டார் என தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கும் திவாகர் அந்த பிக் பாஸ் வீட்டில் அரோரா மீது தான் ஒரு கண்ணாக உள்ளார் என்று கூறுகின்றனர். காதலியிடம் காலில் விழுந்து கெஞ்சுவது போல நடிக்கிறேன் என்கிற பெயரில் அரோராவின் பேன்ட்டை பிடித்து திவாகர் இழுக்க, அவர் பேன்ட் கழண்டு விழாமல் பார்த்துக் கொள்ள இழுத்து பிடித்துக் கொண்டு அய்யோ என் பேன்ட் என கூச்சலிட்ட காட்சிகள் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளன.
எங்கே போய் முடியப் போகுதோ: டாக்டர் திவாகர் என சொல்லிக் கொண்டு பிசியோ தெரபி ட்ரீட்மெண்ட் எல்லாம் திவாகர் பண்ண ஆரம்பித்துள்ள நிலையில், இதெல்லாம் எங்கே போய் முடியப் போகிறதோ என்கிற கேள்வி எழுந்துள்ளது. திவாகர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் வரை கன்டென்ட் தான் என்றும் அவரை சீக்கிரம் வெளியே அனுப்பிவிட்டால் இந்த சீசன் பிக் பாஸ் டல் அடித்து விடும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











