பார்ப்பதெல்லாம் உண்மையில்லை...இன்னும் 5 நாட்கள் மட்டுமே...அசத்தலாக வெளியான பிக்பாஸ் ப்ரோமோ

சென்னை : அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக துவங்கப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

பிக்பாஸ் துவங்கும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது முதலே, அடுத்த கேள்வியாக யாரெல்லாம் பங்கேற்கிறார்கள் என்பது தான் அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. இந்த ஆர்வத்தை தூண்டி, அதற்கு மேலும் தீனி போடும் விதமாக பல விதமாக போட்டியாளர்கள் பட்டியல்கள் சோஷியல் மீடியாவில் உலா வருகின்றன.

விறுவிறுப்பான போட்டியாளர் தேர்வு

விறுவிறுப்பான போட்டியாளர் தேர்வு

இதில் யார் சொல்வது உண்மை, இவர்கள் தான் நிஜமாகவே பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ள போகிறார்கள். எப்போது இறுதி பட்டியல் வெளியாகும் என ரசிகர்களும் தலையை பிய்த்து கொண்டு ஆர்வமாக காத்திருக்கிறார்கள். மொத்தமாக தேர்வு செய்யப்பட்ட 20 பேர்களில் இருந்து 16 பேரை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

பிக்பாஸ் வீடு ரெடி

பிக்பாஸ் வீடு ரெடி

இதற்கிடையில் பிக்பாஸ் வீடு மிக பிரம்மாண்டமாக தயாராகி விட்டதாகவும், அதை பத்திரிக்கையாளர்கள் காண விஜய் டிவி அனுமதி அளித்துள்ளதாகவும் ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. இதனால் பிக்பாஸ் வீடு எப்படி இருக்கு, இந்த சீசனில் என்னவெல்லாம் மாற்றம் கொண்டு வந்திருக்கிறார்கள் என்ற கேள்விகளும், ஆர்வமும் ரசிகர்களை தொற்றிக் கொண்டுள்ளது.

கமலின் அரசியல் பேச்சுக்கள்

கமலின் அரசியல் பேச்சுக்கள்

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 துவங்கும் நாள் நெருங்குவதால் அது தொடர்பாக ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி இன்று வெளியிட்டுள்ளது. புதிய ப்ரோமோ மட்டுமல்ல ஏற்கனவே வெளியிட்ட 5 ப்ரோமோக்களையும் வரிசையாக ரீ ரிலீஸ் செய்துள்ளது விஜய் டிவி. லேட்டஸ்டாக வெளியிடப்பட்ட ப்ரோமோ, பஞ்ச் டயலாக்குடன் வந்திருப்பதால் இந்த சீசனிலும் கமலின் அரசியல் சார்ந்த பேச்சுக்கள் இடம் பெறலாம் என தெரிகிறது.

 பார்ப்பதெல்லாம் உண்மையில்லை

பார்ப்பதெல்லாம் உண்மையில்லை

இன்று வெளியிடப்பட்ட ப்ரோமோவில், "பார்ப்பதெல்லாம் உண்மையில்லை. இங்கே யாரும் உண்மையை பார்ப்பதும் இல்லை. Five days to go Bigg Boss". என கமல் பேசுவது போல் அமைந்துள்ளது. பிக்பாஸ் துவங்க இன்னும் 5 நாட்களே உள்ளதால், ரசிகர்களும் அடுத்து பிக்பாஸ் பற்றி என்ன தகவல்கள் எல்லாம் வெளியாகும் என ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

புதிய விதிகள் உண்டு

புதிய விதிகள் உண்டு

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டும் விர்ஷுவல் முறைப்படியே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட போவதில்லையாம். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, அரசு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பல புதிய விதிகள் போட்டியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X