Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
பிக்பாஸ் சீசன் 5 ப்ரோமோ எப்போ... பரபரப்பான ஹாட் அப்டேட்
சென்னை : பிக் பிரதர் நிகழ்ச்சியின் மொழியெர்ப்பான பிக்பாஸ் பலரின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. டிவி ரியாலிட்டி ஷோக்களிலேயே அதிக ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சியும் இதுதான். இந்தியில் மட்டுமல்ல இந்தியாவில் பல்வேறு மாநில மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இந்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவடைந்தது. இதில் ஆரி டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். கொரோனாவால் பாதியில் நிறுத்தப்பட்ட மலையாளம் மற்றும் கன்னட பிக்பாஸ் ஷோக்களின் இறுதிப் போட்டியும் சமீபத்தில் அடுத்தடுத்து நடத்தி முடிக்கப்பட்டது.
பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய்யின் கெட்டப் இதுதான்.. லீக்கானது ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ!
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பிக்பாஸ் தமிழ் சீசன் 4 தாமதமாக அக்டோபர் மாதம் துவங்கப்பட்டு, ஜனவரியில் முடிவடைந்தது. ஆனால் சீசன் 5 எப்போதும் போல ஜுன் மாதத்தில் துவங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டும் கொரோனா உச்சம் தொட்டதால் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

கமல் தான் தொகுத்து வழங்குகிறார்
இருந்தாலும் பிக்பாஸ் சீசன் 5 பற்றிய ஏதாவது ஒரு தகவல் இணையத்தில் பரவிக் கொண்டு தான் உள்ளது. தேர்தலில் பிஸியாக இருந்ததால் கடந்த 4 சீசன்களைப் போல் இந்த சீசனை கமல் தொகுத்து வழங்க மாட்டார். அவருக்கு பதில் சிம்பு தொகுத்து வழங்க உள்ளதாக ஒரு செய்தி பரவியது. ஆனால் பிறகு அது உண்மையில்லை, சீசன் 5 யும் கமலே தொகுத்து வழங்க உள்ளதாகவும், அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டதாகவும் கூறப்பட்டது.

தீயாய் பரவும் ஃபோட்டோக்கள்
இது மட்டுமின்றி அவ்வப்போது போட்டியாளர்கள் பட்டியல் என பலரின் பெயரை உள்ளடக்கிய பட்டியல்களும் உலா வந்தன. பிக்பாஸ் ப்ரோமோ ஷுட்டிங் துவங்கி விட்டதாக வேறு இணையத்தில் சில ஃபோட்டோக்கள், வீடியோக்கள் பரவியது. இதனால் பிக்பாஸ் சீசன் 5 பற்றிய எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ப்ரோமோ ஷுட்டிங் எப்போ
இந்நிலையில் லேட்டஸ்டாக வெளியாகி உள்ள தகவலின் படி, கமல் பங்கேற்கும் பிக்பாஸ் சீசன் 5 ப்ரோமோ ஷுட்டிங் இந்த வாரம் நடைபெற உள்ளதாம். பிக்பாஸ் வீட்டின் இன்டீரியர் லுக்கும் முற்றிலும் மாற்றப்பட்டு வருகிறதாம். பிக்பாஸ் வீடு புதிதாக படுவேகமாக தயாராகி வருகிறதாம்.

புதிய லோகோ எப்போ ரிலீஸ்
கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் பார்வையாளர்கள் இல்லாமல் பிக்பாஸ் நடத்தப்பட உள்ளதாம். அக்டோபர் மாத இறுதியில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட உள்ளதாம். பிக்பாஸ் லோகோவும் இந்த முறை மாற்றப்பட்டுள்ளதால், புதிய லோகோ ஆகஸ்ட் 27 ம் தேதி இரவு 7 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாம்.

விநாயகர் சதுர்த்தியில் வருது
அதைத் தொடர்ந்து பிக்பாஸ் ப்ரோமோ, வரும் விநாயகர் சதுர்த்தி முதல் ஒளிபரப்பப்பட உள்ளதாம். போட்டியாளர்கள் பட்டியல் விபரங்களும் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.