Don't Miss!
- News
இதுதான் டாடா.. A டூ Z எல்லாமே பக்கா ஸ்கெட்ச்.. மின்சார கார் சந்தையில் டாடா போடும் மெகா பிளான்
- Lifestyle
Today Rasi Palan 28 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் தேடி வரப்போகிறது...
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் பிக் பாஸ் ரசிகர்கள்... கூலாக வந்த கமல்... டைட்டில் வின்னர் யார்?
சென்னை: நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பதை தெரிந்துகொள்ள பிக் பாஸ் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
இறுதிப்போட்டிக்கு ஷிவின், விக்ரமன், அசீம் மூவர் மட்டுமே தகுதிப் பெற்றுள்ளதால் இவர்களில் யார் வேண்டுமானாலும் டைட்டில் வெல்லலாம் என சொல்லப்படுகிறது.
இன்று மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் சீசன் 6ன் இறுதி நாளுக்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 இறுதிநாள்
கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 இன்றுடன் நிறைவடைகிறது. நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி, தமிழ்நாட்டின் மிகப் பெரிய ரியாலிட்டி ஷோவாக பார்க்கப்படுகிறது. ஜிபி முத்து, அசல் கோளாறு, ஷிவின், சாந்தி, மணிகண்டன், குயின்ஷி, நிவாஷினி, ஷெரினா, ஜனனி, ரச்சிதா, மகேஸ்வரி, அசீம், விக்ரமன், ராம், ஏடிகே, ராபர்ட் மாஸ்டர், அமுதவாணன், மைனா நந்தினி, ஆயிஷா, கதிர் என 21 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கியது. இந்நிலையில், தற்போது ஷிவின், விக்ரமன், அசீம் மூவர் மட்டுமே டைட்டில் வின்னர் போட்டியில் களத்தில் உள்ளனர்.

தொடங்கியது கிராண்ட் பினாலே
ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வாக்குகள் அடிப்படையில் போட்டியாளர்கள் எவிக்சன் செய்யப்பட்டனர். இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றிருந்த கதிர் பண மூட்டையுடனும் அமுதா பணப் பெட்டியுடனும் வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து மைனா நந்தினி மிட் வீக் எவிக்சனில் வெளியேறினார். இறுதியாக ஷிவின், விக்ரமன், அசீம் மட்டுமே பிக் பாஸ் டைட்டில் வின்னர் ரேஸில் களத்தில் உள்ளனர். இந்த மூன்று பேருக்குமே மக்களிடத்தில் அதிக ஆர்வம் இருப்பதால் போட்டி பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூலாக வந்த கமல்
பிக் பாஸ் கிராண்ட் பினாலே விஜய் டிவியில் இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அப்போது டைட்டில் வின்னர் யார் என்ற உண்மை மக்களுக்கு தெரிந்துவிடும். இந்நிலையில், தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இறுதி நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் டைட்டில் வின்னர் யார் என்பதை அறிவிக்க கமல் ரெடியாகிவிட்டதை பார்க்க முடிகிறது. முன்னதாக ஏடிகேவின் ராப் இசையுடன் கிராண்ட் பினாலே கொண்டாட்டம் தொடங்கியது. அதில் மணிகண்டன், குயின்ஷி, மகேஸ்வரி, மைனா நந்தினி, ஜிபி முத்து, கதிர் உள்ளிட்ட ஹவுஸ்மேட்ஸ்கள் ஆட்டம் பாட்டத்துடன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

யாருக்கு 50 லட்சம்?
பிக் பாஸ் சீசன் 6 தொடங்கியபோது அதிகம் எதிர்பார்க்கப்படாத ஷிவினும் விக்ரமனும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கினர். இதில் விக்ரமனின் அறம் தவறாத நேர்மையும், ஷிவினின் போராட்டமும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. அதேபோல் அசீமின் கோபம் அவருக்கு மைனஸாக இருந்தாலும், தனியாக விளையாடி ரசிகர்களை வசீகரித்துவிட்டார். அதனால் மூவருக்குமே டைட்டில் வெல்ல வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.