கானா வினோத் முகத்துக்கு நேராக கால் தூக்கி போட்டது சரிதான்.. VJS சொல்லியும் திருந்தாத ஆதிரை!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 மூன்று வாரங்கள் முடிந்து நான்காவது வாரம் போய்க்கொண்டு உள்ளது. முதல் வாரத்தில் இருந்தே போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதில் மூன்றாவது வாரத்தில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் ஆதிரை. ஆதிரை வெளியேற்றப்பட்டது ஆதிரைக்கு எந்த அளவுக்கு அதிர்ச்சியோ அதே அளவுக்கு ஆதிரை மீது நம்பிக்கை வைத்த ரசிகர்களுக்கும் ஷாக் தான். இப்படி இருக்கையில் அவர் விஜய் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தனது ஆட்டம் குறித்தும் இந்த சீசன் போட்டியாளர்கள் குறித்தும் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆதிரையைப் பேட்டி எடுத்த ஜாக்குலின் பேசுகையில், " முதல் வாரத்தில் பார்த்தபோது ஆதிரைக்கு நான் ஃபயர் விட்டுக் கொண்டு இருந்தேன். ஆனால் இரண்டாவது மூன்றாவது வாரத்தில் அது அப்படியே குறைந்துவிட்டது. சுமார் மூன்று ஆண்டுகளாக பிக் பாஸ்க்கு நீங்கள் முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கும்போது, அந்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தவில்லையோ என்ற எண்ணம் இருக்கிறதா? நீங்கள் வெளியேற என்ன காரணமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

Bigg Boss Tamil season 9 Aadhirai Interview She Justify Issue With Gana Vinoth
Photo Credit:

அதற்கு ஆதிரை அளித்த பதில் பலருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் உள்ளது. அதாவது, " நான் முதல் வாரத்தில் நான் எனது ஆட்டத்தை ஆடினேன். இரண்டாவது வாரத்தில் சரியாக விளையாடவில்லை என்பது எனக்கே தெரியும். மூன்றாவது வாரத்தில் நான் மீண்டும் எனது ஆட்டத்தை ஆடினேன். எனது ஆட்டத்தில் மக்களுக்கு அதிருப்தி கொடுத்ததாக, நான் நினைக்கும் விஷயம், கானா வினோத் முகத்திற்கு நேராக கால் நீட்டியதுதான்.

செய்தது சரிதான்: ஆனால் நான் செய்தது சரி. அந்த சூழலில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ, அப்படித்தான் நான் நடந்து கொண்டேன். யாருக்கு மரியாதை கொடுக்க வேண்டும், எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்று பேசியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மூன்றாவது வார இறுதியில் விஜய் சேதுபதி பேசினார். அப்போது தன் மீது தவறு உள்ளது என்று ஒத்துக் கொண்ட ஆதிரை இப்போது பேட்டியில், கானா வினோத் முகத்திற்கு நேராக கால் தூக்கிப் போட்டது சரி எனப் பேசியிருப்பது உள்ளபடி ஷாக் தான்.

ரசிகர்கள் கேள்வி: இவரது இந்த பேட்டியை பார்த்த இணையவாசிகள் சிலர், கேமராவுக்காக, கண்டெண்டுக்காக நான் எதுவும் செய்ய மாட்டேன் என்று கூறும் ஆதிரை, விஜய் சேதுபதியிடமே இதேபோல், யாருக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்று கூற வேண்டியது தானே. அப்போது எல்லாம் பெட்டிப் பாம்பாக அடங்கி விட்டு, இப்போது பேட்டியில் சீறுவதைப் பார்த்தால் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது என்று விமர்சித்து வருகிறார்கள். ஆதிரை வெளியேறியதற்கு மிகவும் முக்கியமான காரணங்களுல் ஒன்று, எஃப்.ஜே உடன் எப்போதும் கவனத்தை வைத்துக் கொண்டு இருந்ததும், வீட்டில் அதிகப்படியாக ஆபாச மற்றும் இரட்டை அர்த்த பேச்சுக்கள் பேசியதும் தான் என்றும் சிலர் கூறி வருகிறார்கள். முதல் வாரத்தில் இருந்ததைப் போல தொடர்ந்து இருந்திருந்தால் இந்த சீசனில் ஒரு ஸ்டார் பிளேயராக ஆதிரை ஜொலித்திருக்கலாம், ஆனால் அதை தவற விட்டு விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X