Bigg Boss Tamil Season 9: அடி தூள்.. பிக் பாஸ் சீசன் 9 விரைவில்.. வெளியானது மாஸ் அப்டேட்!
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் அனைவருக்கும் பிடித்த ரியாலிட்டி ஷோவாக உள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சி. இதுவரை 8 சீசன்களை கடந்திருக்கும் நிலையில் தற்போது பிக் பாஸ் 9வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி அவர்களே தொகுத்து வழங்க நிலையில், தற்போது மாஸ் அப்டேட் ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சி என்றாலே ரசிகர்களுக்கு சுவாரசியமாக நிகழ்ச்சிகளை கொடுப்பதில் ஆர்வமாக இருக்கும். அந்த வகையில், ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியது அதுதான் பிக் பாஸ். திரையில் பார்த்து நாம் வியந்த பிரபலங்கள் அனைவரும் நூறு நாட்கள் ஒரே வீட்டில் இருக்க வேண்டும் என்பதுதான் அந்த நிகழ்ச்சியின் விதி. இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து இருப்பதற்காக சில டாஸ்குகள் கொடுக்கப்படும். அதுமட்டுமில்லாமல் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களும் தங்களுக்கு பிடித்த போட்டியாளரை ஓட்டு போட்டு காப்பாற்றலாம் என்பதால், இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உண்டு.

பிக் பாஸ் : இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல சேனல்களில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றி பெற்றுள்ளது. இதில்,தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை எட்டு சீசன்களை கடந்துள்ளது. இதில்,ஏழு சீசன்களை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கினார். எட்டாவது சீசனில், தனக்கு இருக்கும் பணிச்சுமை காரணமாக இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல் அறிவித்துவிட்டு விலகினார். இதைத்தொடர்ந்து எட்டாவது சீசனை யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. சரத்குமார், சூர்யா, சிம்பு என பலரின் பெயர் அடிபட்டது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.
போட்டியாளர்கள் யார்: ஆரம்பத்தில், விஜய்சேதுபதி இதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், விஜய் சேதுபதி யாருக்கும் ஆதரவாக இல்லாமல், எதையும் சுற்றி வளைத்து பேசாமல் தவறு என்று பட்டதை முகத்திற்கு நேராக அடித்து பேசி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இதில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர் பற்றி தகவல் வெளியாகி உள்ளது. பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி ஃபரினா ஆசாத், குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உமைர் லத்தீஃப், ஷபானா ஷாஜஹான், பாலுன் அக்கா ஆகியோர் ஆடிஷனில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.
அடி தூள்: பிக் பாஸ் சீசன் 9 எப்போது தொடங்கும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில், புதிய சீசனின் ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி நாற்காலியில் அமர்ந்து கொண்டு ரசிகர்களுக்கு காட்சி அளிக்கிறா. இந்த ப்ரோமோ, புதிய சீசனின் சூழல், சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் மற்றும் போட்டியாளர்களின் பரபரப்பை முன்கூட்டியே ரசிகர்களுக்கு காட்டுகிறது.


Click it and Unblock the Notifications











