Bigg Boss : அழுது, கூப்பாடு போட்ட நந்தினி.. வாங்கிய 5 நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும், ரசிகர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 9 முதல் வாரத்திலேயே எதிர்பாராத திருப்பங்களுடன் களைகட்டத் தொடங்கியுள்ளது. எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் சுவாரஸ்யமான சம்பவங்களுக்கும் குறைவு இல்லாமல் நிகழ்ச்சி சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்த தானாக வெறியேறிய நந்தினி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த வாரம் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில், பெரும்பாலான போட்டியாளர்கள் ரசிகர்களுக்குப் புதிய முகங்களாக இருந்ததால், இந்த சீசனின் வெற்றி குறித்து ஆரம்பத்தில் சந்தேகம் எழுந்தது. இதனால், வீட்டிற்குள் இருக்கும் அனைவரும், எப்படியாவது பிரபலமாகிவிட வேண்டும் என பெரிய திட்டத்தோடு வீட்டிற்குள் வந்து, ஆள் ஆளாகுக்கு கண்டண்ட் கொடுத்து வருகின்றனர்.

Bigg Boss tamil season 9 nandhini Salary
Photo Credit:

பிக் பாஸ் சீசன் 9: இந்த சீசனின் முதல் வாரத்திலேயே போட்டியாளரான நந்தினி வீட்டை விட்டு வெளியேறினார். அதாவது நந்தினி, எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பார் என சக போட்டியாளர்கள் அவரை கிண்டலடித்து பேசினார்கள். இதனால், ஆத்திரமடைந்த நந்தினி தனியாக சென்று அழுதார். அவரை சமாதானப்படுத்த பலர் முயற்சி செய்தும், யாரும் கிட்டவராதீங்க என ஆக்ரோஷமாக கத்தினார். அதன் பின், கனி, நந்தினியை சமாதானப்படுத்தினார். இதன்பின், நந்தினி அமைதியாக இருந்தார். இதையடுத்து, பிக்பாஸ் வீட்டில் எல்லோரும் சாகும்போது எப்படி இருப்பார்கள் என போட்டியாளர்கள் ஜாலியாக பேசிய போது, மன அழுத்தத்தில் அழுத நந்தினி, இங்கு யாருமே ரியாலிட்டியா இல்ல, என்னால் உங்கள மாதிரி நடிக்க முடியாது என்று மீண்டும் ஆவேசமாக கத்தினார்.

கத்தி கூச்சலிட்ட நந்தினி: அதோடுவிடாமல், கனி அக்கா நீங்க நல்லவங்க தான், ஆனால், சாப்பாட்டில் உப்பு அதிகமாக போட்டு அனைவரையும் சாப்பிட விடாமல் செய்தீர்கள், இப்படி செய்யலாமா... ஆக நீங்களும் பொய்ய இருக்கீங்க. பொய்ய நடிப்பவர்கள் இருக்கும் வீட்டில் நான் இருக்கமாட்டேன், என்னால் இங்கு இருக்க முடியாது என்று கத்திய நந்தினி, உனக்கு சக்தி இருக்கு நீ ஜெயிப்ப என்று கலையரசனை பார்த்து கூறியுள்ளார். அதன்பிறகு காடன் ஏரியாவில், நீங்க உண்மையா இருக்கீங்க, இங்கிருந்து போக கூடாது என்று நந்தினியிடம் துஷாரா சொல்ல, நந்தினி நான் போயே ஆகணும் என்று விடாபிடியாக கதறி அழ, அதைப்பார்த்த துஷாராவும் கதறி அழுதார். நள்ளிரவு வரை நந்தினி கத்தி கூச்சல் போட்டுக்கொண்டு இருந்த நிலையில், பிக்பாஸ் அவரை கன்பர்சன் ரூமுக்கு அழைத்து விசாரித்தார்,

நந்தினி வாங்கிய சம்பளம்: அப்போது நந்தினி இங்க யாரும் ரியாலிட்டி இல்லை, என்னால் பொய் வாழ்க்கை நடத்த முடியாது என்று வெளிப்படையாக பேச நீங்கள் வெளியே போகலாம் என்று பிக்பாஸ் சொல்லிவிட, பிக் பாஸ் வீட்டில் இருந்து நந்தினி வெளியேறினார். தற்போது,பிக் பாஸ் ஐந்து நாட்கள் இருந்த நந்தினி வாங்கி இருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் நந்தினிக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் என்று பேசப்பட்டிருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் நந்தினி ஐந்து நாட்கள் இருந்ததால், அவருக்கு வெறும் 5 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X