Bigg Boss: பிக்பாஸ் வீட்டில் புதிதாக வந்த அந்த விஷயம்.. விஜய் சேதுபதியே அசந்துட்டாரு..

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நாளை முதல் அதாவது அக்டோபர் 5ஆம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இப்படி இருக்கும்போது இந்த நிகழ்ச்சிக்கான புரோமோக்களை பிக்பாஸ் தரப்பில் தொடர்ந்து ரிலீஸ் செய்து கொண்டே இருக்கிறார்கள். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இம்முறை புதிதாக ஒரு விஷயத்தை அறிமுகம் செய்துள்ளார்கள். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 8 சீசன்களாக தமிழில் பலராலும் விரும்பப்படுகிற நிகழ்ச்சியாக உள்ளது. இப்படி இருக்கும்போது 7 சீசன்கள் வரை கமல்ஹாசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். 8 வது சீசனாக கடந்த சீசனில் அவர் விலக, அதன் பின்னர் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, விஜய் சேதுபதி கமிட் ஆனார். கடந்த சீசனை அவர் தொகுத்து வழங்கியது பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அதாவது அவரது பாணி பலராலும் ரசிக்கப்பட்டது. போட்டியாளர்களை தனது அதிரடி மற்றும் நேரடிக் கேள்விகளால் திக்குமுக்காடச் செய்துவிட்டார்.

Bigg Boss Tamil Season 9 Vijay Sethupathi Gets Shocked After Seeing jacuzzi in BB House

ஷாக் ஆன விஜய் சேதுபதி: இந்நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நாளை முதல் தொடங்கவுள்ளது. நேற்றே சீசன் 9க்கான படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சீசனில் யார் எல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்ற பேச்சும் ரசிகர்கள் மத்தியிலும், இணையத்திலும் பரவலாக காணப்படுகிறது. இந்நிலையில் இணையத்தில் தற்போது ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது. அதாவது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் குளியல் அறையில், ஜக்குஸி எல்லாம் வைத்து வீடு உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு சீசனில் நீச்சல் குளம் எல்லாம் வைத்திருந்தார்கள். அதன் பின்னர் அந்த நீச்சல் குளத்திற்கு தண்ணீர் சில நாட்கள் விட்டார்கள், அதன் பின்னர், அதற்கு தண்ணீர் நிரப்பாமல் விட்டுவிட்டார்கள்.

Bigg Boss Tamil Season 9 Vijay Sethupathi Gets Shocked After Seeing jacuzzi in BB House

ஜக்குஸி: இப்படி இருக்கும்போது இந்த சீசனில் ஜக்குஸி எல்லாம் வைத்துள்ளார்கள் என்றால், நீச்சல் குளமும் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என ரசிகர்கள் பேசி வருகிறார்கள். வீட்டிற்குள் ஜக்குஸி உள்ளதைப் பார்த்ததும் விஜய் சேதுபதி, " ஓ ஜக்குஸி எல்லாம் இருக்கா" என்று ஆச்சரியத்துடன் கேட்கிறார். இப்படி இருக்கும்போது ரசிகர்களோ கண்டபடி கமெண்ட் போட்டு வருகிறார்கள். குறிப்பாக ஒரு இணையவாசி அந்த வீடியோவுக்கு, கண்றாவியாக இருக்கப்போகிறது என்றும், மற்றொரு இணையவாசி, பலூன் அக்கா பிக் பாஸ்ல கலந்துக்க போறாங்கனு சொல்றாங்க, அப்படினா ஒரே கில்மா தான் போங்க என்று கமெண்ட் போட்டுள்ளார். தற்போது இந்த வீடியோவும் அந்த கமெண்ட்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X