அது ரொம்ப அழகா இருக்குங்க.. யாரும் இல்லாத பிக்பாஸ் வீட்டில் பலூன் அக்காவிற்கு நூல் விட்ட திவாகர்!
சென்னை: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இன்று தொடங்கி உள்ளது. இதில், ஒவ்வொருவரையும் விஜய்சேதுபதி அறிமுகம் படுத்தி வருகிறார். இதில் அனைவருக்கும் தெரிந்த விஜே பார்வதி வந்துள்ளார்.
அதில் பேசிய பார்வதி, எங்கள் வீட்டில் மூன்று பேர், என்னைத்தவிர அனைவருமே வழக்கறிஞர்கள் தான். அதனால் தான், நான் யாருக்கும் பயப்படாமல் பல விஷயத்தை போல்டாக பேசினேன். இந்த சமூகத்தில் பேச தயங்கும் விஷயத்தை தைரியமாக பேசி வருகிறேன். இந்த தைரியத்தை எனக்கு கொடுத்தது என் அம்மா தான் அவர்கள் தான் என்னை ஒரு தைரியமான பெண்ணா என்னை வளர்ந்து இருக்கிறார் என்றார். இதைத்தொடர்ந்து, விஜய்சேதுபதி, உங்களுக்கு அறிமுகம் தேவையில்லை, போல்டான பெண்ணான நீங்கள், பிக் பாஸ் வீட்டிலும், பல விஷயத்தை போல்டாக பேசுவீர்களா என்று கேட்டார். அப்போது, பார்வதி, தவறு என்று என் மனதிற்கு தெரிந்தால் யாராக இருந்தாலும் நான் துணிந்து கேள்வி கேட்பேன் என்றார்.

பிக் பாஸ் சீசன் 9: பிக் பாஸ் வீட்டில் நண்பர் கிடைத்தாலும் இதே போலத்தான் இருப்பீர்களா என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த விஜே பார்வதி, நான் நண்பர்களை தேடி இந்த வீட்டிற்குள் வரவில்லை. எனக்கு வெளியில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். யார் தவறு செய்தாலும் நான் நிச்சயம் அவர்களை எதிர்த்து கேள்வி கேட்பேன் என்றார். பார்வதியின் இந்த பதிலைக்கேட்ட விஜய்சேதுபதி இன்றில் இருந்து போல்ட் பார்வதி என்று சொல்லி அவரை பாராட்டினார். இதைத்தொடர்ந்து, உழைப்பில் நிறம் சிவப்பு என கூறிய பார்வதி, சிவப்பு நிறத்தை தேர்வு செய்து பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.
நூல் விட்ட திவாகர்:இந்த நேரத்தில் முதல் போட்டியாளராக உள்ளே நுழைந்த திவாகர், இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான அரோரா சின்க்ளர் உள்ளே வந்தார். அதைத் தொடர்ந்து, மூன்றாவது போட்டியாளராக எஃப் ஜே வந்தார். அனைவரும் சேர்ந்து, வீட்டைச் சுற்றிப் பார்த்தனர். அப்போது, இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்தபோது வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் புதிய போட்டியாளர் அரோரா சின்க்ளரிடம் அறிமுகமானார். வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் அரோராவைப் பார்த்து உங்கள் கண்கள் அழகாக இருக்கிறது? கூறி நூல் விட்டு பார்த்தார். அப்போது எஃப் ஜே, அந்த பெண்ணிற்கு உங்கள் பேத்தி வயது இருக்கும் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











