பிக் பாஸில் நடிகைக்கு டைபாய்ட்.. அச்சச்சோ பாவம்.. கொட்டித் தீர்க்கும் மழையால் வந்த பிரச்னை
ஹைதராபாத்: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 போல தெலுங்கிலும் பிக் பாஸ் சீசன் 9 போய்க்கொண்டு உள்ளது. இரண்டையும் கம்பேர் செய்யும் போது தெலுங்கில் சுவாரஸ்யமும், சில பல ஆஹா ஓஹோ மொமெண்ட்களும் நடைபெற்று வருவதால், தெலுங்கு தெரிந்த மற்றும் ஓரளவுக்கு தெலுங்கை புரிந்து கொள்வேன் எனக் கூறும் ரசிகர்கள் பலரும் தெலுங்கு பிக் பாஸ் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்படி இருக்கும்போது, தெலுங்கு பிக்பாஸில் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் சென்ற போட்டியாளர் சின்னத்திரை நடிகை ஆயிஷா. இப்போது அவர் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
பொன்மகள் வந்தாள் சீரியல் மூலம் பிரபலமான ஆயிஷா. பொன்மகள் வந்தாள் சீரியல் இயக்குநருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதில் இருந்து விலகினார். அதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாயா சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தினார். அதன் பின்னர் சத்யா சீரியலிலும் கலக்கு கலக்கு என கலக்கினார். இவர் பிக்பாஸ் தெலுங்கு சீசன் 9இல் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் களமிறங்கினார். இதில் என்ன விஷேசம் என்றால் இவரை வாழ்த்து பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறக்கியது நடிகரும் தமிழ் பிக் பாஸை தொகுத்து வழங்குப வருமான விஜய் சேதுபதிதான்.

இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றதே பெரிய பேசு பொருளாக மாற, உள்ளே சென்றதும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பித்த போட்டியாளராக மாறிவிட்டார். அதற்கு அவரது பேச்சு, நடவடிக்கைகள், சமயத்தில் அவர் எடுக்கும் முடிவுகள் என்றாலும் மற்றொரு காரணமாக இருந்தது, அவர் சேலை அணிந்து கொண்டு வீட்டிற்குள் உலா வருவதும் தான். இவரை பலருக்கும் பிடித்துவிட்டது. இவருக்காக தெலுங்கு பிக் பாஸ் பார்க்கும் தமிழ்நாட்டு ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
டைபாய்டு: இப்படி இருக்கையில் ரசிகர்கள் மனதில் இடியை இறக்குவது போன்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது. அதாவது கடந்த சில தினங்களாகவே பிக் பாஸ் வீட்டிற்குள் சோர்வாக காணப்பட்டார், ஆயிஷா. அவருக்கு சாதாரண காய்ச்சல் தான், சரியாகிவிடும் என்று நினைத்தார்கள் ரசிகர்கள். ஆனால் சோதித்துப் பார்த்ததில் அவருக்கு டைபாய்டு காய்ச்சல் இருப்பது தெளிவாக தெரிந்துள்ளது. இது தொடர்பாக மருத்துவரே அவரிடத்தில் கூறும்போது மிகவும் உடைந்து போகிறார்.
அழுகை: இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது மட்டும் இல்லாமல் அவர் ஏற்கனவே வீட்டில் சக போட்டியாளரிடம், எனக்கு வாழ்க்கையில் எதுவும் மிக எளிதாக கிடைத்தது இல்லை. எல்லாவற்றையும் நான் போராடிப் போராடித்தான் பெற்று வருகிறேன். பல நேரங்களில் அவை எல்லாம் எனக்கு இரண்டாவது வாய்ப்பில் தான் கிடைத்தும் உள்ளது. ஆனால் சில நேரங்களில் இரண்டாவது வாய்ப்பிலும் எனக்கு அவை கை கூடாமல் போயுள்ளது என்று சொல்லும் போது உடைந்து அழுதுள்ளார்.

ரசிகர்கள் கேள்வி: தற்போது அவருக்கு டைபாய்டு காய்ச்சல் என்பதால் ஆயிஷா தொடர்ந்து ஆட்டத்தில் இருப்பாரா? இல்லை ஆட்டத்தில் இருந்து வெளியேறி, மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவாரா என்ற கேள்வியில் ரசிகர்கர்கள் உள்ளார்கள். பலர் விரைவில் மீண்டு வாருங்கள் என்று பதிவிட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











