»   »  பிக்பாஸ் போட்டியாளருக்கு மலேசியாவில் விருது!

பிக்பாஸ் போட்டியாளருக்கு மலேசியாவில் விருது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. பிக்பாஸ் போட்டியாளர்களில் ஶ்ரீ, நமீதா தவிர அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில், வீட்டுக்குள் போட்டியாளர்களின் அழகான நெகிழ்ச்சித் தருணங்கள் குறும்படமாகக் காட்டப்பட்டது. போட்டியாளர்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அதைக் கண்டு ரசித்தனர். பிறகு, அதைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

biggboss grand finale - bharani on stage

தமிழ் மக்கள் உலகம் முழுவதும் உள்ள நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியும் உலகம் முழுவதும் பிரபலமானத்தில் ஆச்சர்யமில்லை. ஆனால் மலேசிய துணை பிரதமர் தமிழ் பிக் பாஸ் போட்டியாளருக்கு விருது ஒன்றை அறிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் சுவர் ஏறிக் குதித்து தப்பிக்க முயற்சி செய்த பரணிக்கு மலேசிய மக்கள் நாயகன் என்ற விருது மலேசிய அரசின் சார்பில் அளிக்கப்பட்டுள்ளதாம். இந்தத் தகவலை நடிகர் பரணியே கமல்ஹாசன் முன்னிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறினார்.

பிறகு, பிக்பாஸ் நிகழ்ச்சியையும், போட்டியாளர்களையும் கலாய்த்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட மீம்களை திரையில் ஒளிபரப்பினர். ரைசா, ஜூலி ஆகியோரைக் கலாய்த்திருந்த மீம்களைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தனர்.

English summary
The grand finale show of the biggboss show is currently airing. Biggboss bharani got malaysia makkal nayagan award from malaysia government. Bharani said this on biggboss stage.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil