பிக்பாஸில் நான்காமிடம் பிடித்த மிஸ்டர் ஜெனியூன்!
சென்னை : தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. போட்டியின் வெற்றியாளர் அறிவிக்கப்பட இருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் பகுதி ஒளிபரப்பாகும் இன்று ஓவியா உட்பட இதற்குமுன் வெளியேறிய போட்டியாளர்களில் நடிகர் ஶ்ரீ, நமீதா தவிர அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் 4 பேரில் ஒரு வெற்றியாளர் தேர்வு செய்யப்படுகிறார். இந்நிலையில், மூன்றாவது ரன்னர்-அப் அறிவிக்கப்பட்டார்.
நடிகர் கணேஷ் வெங்கட்ராம் மூன்றாவது ரன்னர்-அப் அதாவது நான்காமிடம் பெற்றவரை அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர் அழைத்து வருவார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கணேஷின் மனைவி நிஷா பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று கணேஷை அழைத்து வந்தார்.
Comments


Click it and Unblock the Notifications