Don't Miss!
- News
பட்ஜெட்டில் "முக்கிய" அறிவிப்பு.. அடையாள ஆவணம் ஆகும் பான் கார்டு.. நிதி பரிவர்த்தனைக்கு கட்டாயம்!
- Finance
பிரதமரின் வீடு கட்டும் திட்டங்களுக்கு ரூ.79000 கோடி ஒதுக்கீடு.. சாமானியர்கள் ஹேப்பி!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Sports
மொத்த ப்ளானையும் மாத்துங்க.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. தினேஷ் கார்த்திக் முக்கிய அறிவுரை!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Lifestyle
பட்ஜெட் 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிக்பாஸ் சீசன் 5 எப்போது? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. தெறிக்கவிடும் கமல்!
சென்னை: பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கும் தேதி குறித்த அசத்தல் புரமோ வெளியாகியுள்ளது.
இந்தியில் பெரும் ஹிட்டான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 4 சீசன்கள் நிறைவடைந்துள்ளன.
அரண்மனை
3
ல்
ஆர்யாவுக்கு
இப்படி
ஒரு
கதாபாத்திரமா!
வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கியது.

ஜனவரியில் நிறைவு
இதனால் 100 நாட்களுக்கும் மேல் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம்தான் நிறைவடைந்தது. கடந்த பிக்பாஸில் பெரும்பாலான நாட்கள் பண்டிகைகளை வைத்தே கடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டாவது வழக்கம் போல் ஜூனில் தொடங்க நிகழ்ச்சி குழு திட்டமிட்டது.

கொரோனா இரண்டாவது அலை
ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக இந்த ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவது தாமதமானது. எப்படியும் இந்த ஆண்டும் அக்டோபர் மாதத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு விடும் என்று கடந்த சில மாதங்களாக தகவல் பரவி வந்தது.

புதிய புரமோ
இதனை தொடர்ந்து பிக்பாஸ் லோகோ அறிமுக புரமோ, நிகழ்ச்சிக்கான புரமோ என மொத்தம் நான்கு புரமோக்கள் வெளியானது. இதில் நிகழ்ச்சி தொடர்பான 3 புரமோக்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் எப்போது தொடக்கம்?
இந்த புரமோவில் பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் இடம் பெற்றுள்ளது. இதில் கண்ணாடி முன் நின்று பேசும் நடிகர் கமல் அடடே வாங்க வாங்க என கூறி ரிகர்சல் பார்க்கிறார். ஒவ்வொரு முறை அவர் கூறும் போதும் வேறொருவர் மாதிரி தெரிகிறது.

கஷ்டமான விஷயம் என்ன தெரியுமா?
இதனால் யோசனையில் ஆழ்ந்து போகும் கமல், எனன பார்க்குறீங்க... நான் நானா இருக்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.. ஆனால் எல்லாரும் வந்து போறாங்க என்கிறார். மேலும் பேசும் கமல், இந்த உலகத்துலேயே ரொம்ப கஷ்டமான விஷயம் என்ன தெரியுமா? இந்த வீட்டுல நான் நானா இருக்குறதான் என்கிறார்.

அக்டோபர் 3 முதல்
தொடர்ந்து காலிங் பெல் அடிக்க மீண்டும் அடடே வாங்க வாங்க.. என்கிறார் கமல். இதனை தொடர்ந்து அக்டோபர் 3 முதல் மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவியில் என பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கும் தேதி அதிகாரப்பூர்வமாய் அறிவிக்கப்பட்டுள்ளது.

உருப்படியா ஏதாவது பண்ணுங்க
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் நாள் அதிகாரப்பூர்வமாய் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த முறையாவது உருப்படியா ஏதாவது செய்யுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர். புரமோவை பார்த்த இந்த ரசிகர், இந்த முறை எப்பவும் போல டாஸ்க் குடுக்காட்டி கூட பரவாயில்லை .. ஆனா தயவு செஞ்சி இந்த இந்த பண்டிகை கொண்டாடுறதை மட்டும் நிப்பாட்டுங்க.. போன சீசன் மொக்கையா போனதுக்கு அதுவும் ஒரு காரணம்.. பாத்து உருப்படியா எதாவது பண்ணுங்க என பதிவிட்டுள்ளார்.