நிஜமாவா சொல்றீங்க.. கடுமையாகும் விதிகள்.. விஜய் டிவி பிரபலங்களுக்கு நோ என்ட்ரி.. பிக்பாஸ் அப்டேட்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இம்முறை கட்டுப்பாடுகளும் விதிகளும் கடுமையாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் என பல்வேறு மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

தமிழில் பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சி 2017 ஆம் ஆண்டு தொடங்கியது. விஜய் டிவியில் எண்டோமால் நிறுவனத்தால் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மணி மகுடமாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளது.

தொகுப்பாளரான சினிமா நட்சத்திரங்கள்

தொகுப்பாளரான சினிமா நட்சத்திரங்கள்

ஒவ்வொரு மொழியிலும் அந்தந்த மொழியில் பிரபலமான சினிமா நட்சத்திரங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்தியில் சல்மான் கான், தெலுங்கில் நாகார்ஜுன், நானி, சமந்தா உள்ளிட்டோர் தொகுத்து வழங்கியுள்ளனர்.

தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளர்

தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளர்

மலையாளத்தில் அம்மொழி சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் மோகன் லால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கன்னடத்தில் நடிகர் சுதீப் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தமிழில் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 4 சீசன்களை கமல் தொகுத்து வழங்கி வந்த நிலையில் 5வது சீசனை அவர் தொகுத்து வழங்க மாட்டார் என கூறப்பட்டது.

பிக்பாஸ் சீசன் 5 - கமல்தான் தொகுப்பாளர்

பிக்பாஸ் சீசன் 5 - கமல்தான் தொகுப்பாளர்

ஆனால் 5வது சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார். இதற்காக ஒரு பெரும் தொகையை அவர் அட்வான்ஸாக பெற்றுள்ளார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனையும் தொகுத்து வழங்கவுள்ளார் என்பது அண்மையில் உறுதியானது.

பிக்பாஸ் சீசன் 4 - ஆரி டைட்டில் வின்னர்

பிக்பாஸ் சீசன் 4 - ஆரி டைட்டில் வின்னர்

தமிழில் இதுவரை நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனில் மாடலான ஆரவ் டைட்டில் வின்னரானார். இரண்டாவது சீசனில் நடிகை ரித்விகா டைட்டில் வின்னரானார். மூன்றாவது சீசனில் மலேசிய பாடகரான முகென் ராவ் டைட்டிலை வென்றார். நான்காவது சீசனில் நடிகர் ஆரி அர்ஜூனன் வின்னரானார்.

 இரண்டாவது அலை காரணமாக தாமதம்

இரண்டாவது அலை காரணமாக தாமதம்

கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இதனால் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம்தான் நிறைவடைந்தது. இந்நிலையில் பிக்பாஸ் 5வது சீசனை வழக்கம் போல் ஜூன் மாதம் தொடங்க நிகழ்ச்சிக் குழு திட்டமிட்டது. ஆனால் இந்த ஆண்டும் கொரோனா இரண்டாவது அலை லாக்டவுன் காரணமாக நிகழ்ச்சி தொடங்குவது தாமதமானது.

பிக்பாஸ் சீசன் 5 எப்போது ?

பிக்பாஸ் சீசன் 5 எப்போது ?

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த ஆண்டு மத்தியில் பிக்பாஸ் சீசன் 5 தொடங்கும் என கூறப்பட்டது. இதற்கான வேலைகளும் ஜரூராக நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டும் கொரோனா அச்சுறுத்தல் இருந்ததால் நிகழ்ச்சி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் விதிக்கப்பட்டதால் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் பணிகளும் தொடங்கின.

பிக்பாஸ் டீசர் - கமல் பங்கேற்பு

பிக்பாஸ் டீசர் - கமல் பங்கேற்பு

போட்டியாளர்கள் குறித்த உறுதிப்படுப்படாத தகவல்களும் வெளியான வண்ணம் இருந்தது. ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 5க்கான டேக் லைன், லோகோ மற்றும் பிக்பாஸ் வீட்டுக்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் டீசர் வேலைகளில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்ற போட்டோக்களும் வெளியானது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டீசர் மற்றும் புரமோக்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

விஜய் டிவி பிரபலங்களுக்கு நோ

விஜய் டிவி பிரபலங்களுக்கு நோ

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி குறித்த மேலும் சில அப்டேட்டுகள் வெளியாகியுள்ளது. அதன்படி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், கடந்த சீசன்களில் பங்கேற்றதை போல விஜய் டிவி பிரபலங்கள் அதிகம் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்படுகிறது. விஜய் டிவி பிரபலங்கள் ஓரிரண்டு பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. அதன்படி பிக்பாஸ் பிரபலங்களாக நடிகை தீபா, மைனா நந்தினி மற்றும் சுனிதா ஆகியோர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கடுமையாக்கப்பட்ட விதிகள் - வீக்கெண்ட் எபிசோட்

கடுமையாக்கப்பட்ட விதிகள் - வீக்கெண்ட் எபிசோட்

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் கட்டுப்பாடுகளும் விதிகளும் கடுமையாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இம்முறை பிக்பாஸ் வீடும் கடந்த சீசன்களை விட பிரமாண்டமாக அமைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சீசனை போலவே இந்த சீசனிலும் வீக்கெண்ட் எபிசோடுகளில் ஆடியன்ஸ் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

30 பிரபலங்களை அணுகிய நிகழ்ச்சிக் குழு

30 பிரபலங்களை அணுகிய நிகழ்ச்சிக் குழு

மாறாக பிக்பாஸ் சீசன் 4 போல் டிஜிட்டல் முறையில் ஆடியன்ஸ் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. மேலும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்காக இதுவரை விஜய் டிவி பிக்பாஸ் குழு 30க்கும் மேற்பட்ட பிரபலங்களை அணுகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் யார் யார் நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறார்கள் என்பது குறித்த தகவல் ரகசியமாகவே உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X