பிக்பாஸ் வெற்றியாளர் - ஓவியாவின் மனங்கவர் நாயகன் ஆரவ்!

By Vignesh Selvaraj

சென்னை : தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைகிறது. பிக்பாஸ் போட்டியின் முதல் சீசன் 1 வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் பகுதி ஒளிபரப்பாகும் இன்று இதற்குமுன் வெளியேறிய போட்டியாளர்களில் நடிகர் ஶ்ரீ, நமீதா தவிர அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

பிரமாண்ட மேடையில் பல கலைநிகழ்ச்சிகளோடு இந்த விழா நடைபெற்றது. போட்டியாளர்கள் பாடல்களுக்கு நடனமாடினர்.

நான்காவது இடம் :

நான்காவது இடம் :

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் 4 பேரில் ஒரு வெற்றியாளர் தேர்வு செய்யப்படுகிறார். இந்நிலையில், மூன்றாவது ரன்னர்-அப்பாக கணேஷ் வெங்கட்ராம் அறிவிக்கப்பட்டார். அவரை கணேஷின் மனைவி நிஷா மேடைக்கு அழைத்து வந்தார்.

மூன்றாவது இடம் :

மூன்றாவது இடம் :

இரண்டாவது ரன்னர்-அப்பாக நடிகர் ஹரீஷ் கல்யாண் அறிவிக்கப்பட்டார். அவரை, நடிகை ஓவியா பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று, மேடைக்கு அழைத்து வந்தார்.

ரன்னர்-அப் :

ரன்னர்-அப் :

முதல் ரன்னர் அப்-பாக கவிஞர் சினேகன் அறிவிக்கப்பட்டார். பிக்பாஸ் வீட்டை விட்டுக் கிளம்பும்போது சினேகனும் ஆரவும் கண்கலங்கினர். அவர்கள் இருவரையும் கமல்ஹாசன் மேடைக்கு அழைத்து வந்தார்.

டைட்டில் வின்னர் :

டைட்டில் வின்னர் :

இறுதியாக, பிக்பாஸ் சீசன் 1 வெற்றியாளராக நடிகர் ஆரவ் அறிவிக்கப்பட்டார். மக்களின் வாக்குகளின் அடிப்படையில் ஆரவ் வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

ரசிகர்கள் ஆரவாரம் :

ரசிகர்கள் ஆரவாரம் :

பிக்பாஸ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதும் ஆரவ் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ட்ராஃபியை பெற்றுக்கொண்டார். வெற்றியாளர் ஆரவ் என அறிவிக்கப்பட்டதும் ஓவியா உள்பட பார்வையாளர்கள் அனைவரும் ஆரவாரத்தோடு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X