கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் இன்னொருவருடன் படுத்து தூங்கமாட்டேன்.. வீம்பு பிடிக்கும் நடிகை!

மும்பை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது பிரபலத்துவத்தை, திறமையை மேலும் மேம்படுத்த பல வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் முயற்சித்து வருகிறார்கள். நமக்கு இந்த ஆண்டு பிக்பாஸில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கும் பலர் உள்ளார்கள். சாமானியர்களும் பிக்பாஸில் கலந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். இப்படி இருக்கும்போது நடிகை ஒருவர் கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் சொல்லும் காரணம் தான் மிகவும் முக்கியமானது.

இந்தி நடிகை தனுஸ்ரீயை கடந்த 11 ஆண்டுகளாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி பிக் பாஸ் தரப்பில் அனுகியுள்ளார்கள். ஆனால் அவரோ முடியாது என்று கூறியுள்ளார். மேலும், பிக் பாஸ் தரப்பில் இருந்து ரூபாஉ ஒரு கோடியே 15 லட்சம் சம்பளம் தருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்கள். ஆனால் நடிகை தனுஸ்ரீ அதற்கு எல்லாம் மயங்கவில்லை. காரணம் அவர் எடுத்துள்ள முடிவுதான். அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நான் எனது பெட்டில் இன்னொரு பெண்ணுடன் படுத்து தூங்க வேண்டும்.

Bollywood Actress Dhanashri Kadgaonkar Rejects Bigg Boss Opportunity Last 11 Years She Has Unic Reason
Photo Credit:

முக்கிய காரணம்: அப்படி என்னால் எனது படுக்கையை வேறு ஒரு பெண்ணுடன் பகிர்ந்து கொள்ள முடியாது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரே அறையில் ஆண்களும் பெண்களும் தூங்குகிறார்கள். அதுவும் எனக்குப் பிடிக்காது. கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் நான் இது போன்ற விஷயங்களைச் செய்ய மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது வேகமாக பரவி வருகிறது.

தமிழில் எப்போது: தமிழில் 9வது சீசன் பிக்பாஸ் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்க உள்ளது என பிக் பாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டு உள்ளார்கள். இந்த ஆண்டு யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்றும் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளார்கள்.

மலையாளத்தில் சம்பவம்: மலையாள பிக்பாஸ் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர் தன்பாலினத்தவர். இதனால் இன்னொரு போட்டியாளர் அவரை தனது வீட்டிற்குள் விடமாட்டேன் என்று தெரிவித்தார். இதனால் கடுப்பான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மோகன்லால், எனது வீட்டிற்குள் நான், தன்பாலினத்தவரை விடுவேன், அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நீங்கள் ஏன் கலந்து கொண்டுள்ளீர்கள், நீங்கள் நிகழ்ச்சியை விட்டு தாராளமாக வெளியேறலாம் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X