»   »  என்னை திட்டினா நான் சந்தோசப்படுவேன்... வில்லி கவுரி லட்சுமி

என்னை திட்டினா நான் சந்தோசப்படுவேன்... வில்லி கவுரி லட்சுமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நல்ல நடிக்கிறீங்க என்று சொன்னால் நடிகைகள் சந்தோசப்படுவார்கள். ஆனால் பெண்கள் திட்டினால் சந்தோசப்படுவேன் என்கிறா பொம்மலாட்டம் வில்லி கவுரி லட்சுமி. நடிப்புடன் சொந்த ஊரான திருப்பூரில் பியூட்டி பார்லரும் தொடங்கியிருக்கிறாம்.

திருப்பூரை சேர்ந்த கவுரி, உள்ளூர் சேனலில் தொகுப்பாளர் பணியை தொடங்கி சன் மியூசிக் சேனலில் நுழைந்து

இப்போது சீரியல், சினிமா என வலம் வருகிறார்.

சன் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த போது, ஏவி.எம் நிறுவனத்தில் ‘வைராக்யம்'என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. தொடர்ந்து பொம்மலாட்டம் தொடரில் வில்லி கதாபாத்திரம் கிடைத்தது. கெட்டியா பிடிச்சுட்டேன் என்று கூறியுள்ளார்.

முழு நேர சீரியல் நடிகை

முழு நேர சீரியல் நடிகை

கோபமே வராத பொண்ணு நான், ஆனால் வில்லியாக நடிப்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது என்கிறார்.

எனக்கு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது ரொம்ப பிடிக்கும் என்று கூறும் கவுரி இப்போது முழுநேர சீரியல் நடிகையாகி விட்டார்.

காஞ்சனாவில் தோழி

காஞ்சனாவில் தோழி

காஞ்சனா 2 படத்தில் கங்காவின் தோழியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனால்தான் அப்போது சீரியலுக்கு முழுக்க பிரேக் விட்டுட்டு போயிருந்தேன். அப்போதுதான் பொம்மலாட்டம் தொடரில் நடிக்க அழைப்பு வந்தது. வில்லத்தனமான நடிப்பு ரசிகர்களுக்கு பிடித்து விட்டது என்கிறார்.

திட்டுவது சந்தோசம்

திட்டுவது சந்தோசம்

பொம்மலாட்டம் தொடரில் நடிக்க ஆரம்பித்த போது பிறகு ஸ்ரீஜா அக்கா, ஸ்ரீ அண்ணா இருவரும் பயிற்சி கொடுத்தார்கள். இப்போது எல்லோரும் திட்டும் அளவிற்கு நடிக்கிறேன். அந்த பாத்திரத்துக்காக இன்னைக்கு எல்லார்கிட்டயும் திட்டு வாங்கறது சந்தோஷமா இருக்கு என்கிறார் கவுரி

பியூட்டி பார்லர்

பியூட்டி பார்லர்

பிசினஸ் செய்யவேண்டும் என்பது சிறுவயதில் இருந்தே எனக்குள்ள கனவு. அந்த கனவை விட்டுக்கொடுக்க கூடாது என்பதற்காக என் சொந்த ஊரான திருப்பூரில் பியூட்டி பார்லர் ஆரம்பிச்சிருக்கேன். அடுத்து சென்னையிலும் மற்ற நகரங்களிலும் இதைத் தொடங்கும் திட்டம் இருக்கிறது என்கிறார் கவுரி.

English summary
TV anchor to serial actress and beauty parlour owner hear Gowri Lakshmi's media travel.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil