»   »  புதைக்கப்பட்ட பூமிநாதன்... தேடி அலையும் மனைவி: திருப்பங்களுடன் வாணி ராணி

புதைக்கப்பட்ட பூமிநாதன்... தேடி அலையும் மனைவி: திருப்பங்களுடன் வாணி ராணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பூமிநாதனை சவப்பெட்டியில போட்டு புதைச்சிட்டாங்களே எப்படி உசுரோட வந்துருவாரா? வாணி கண்டுபிடிச்சுருவாங்களா? அரைமணிநேரந்தானே தாங்கும்னு டாக்டர் சொன்னாரு... ஆனா நாளைக்கு தான் வாணி கண்டு பிடிப்பாங்க போல இருக்கே... கடந்த இரு தினங்களாக சன் டிவியில் வாணி ராணி பார்ப்பவர்களின் திக் திக் பேச்சாக இருக்கிறது.

நம்ம வீட்ல சொந்தக்காரங்க சீரியஸா இருந்தா கூட இப்படி துக்கம் தொண்டையை அடைக்க பேச மாட்டங்க... ஆனா சீரியல்ல கவுதம் அடிபட்டு ஆஸ்பத்திரியில இருக்கான். வாணியோட வீட்டுக்காரர் பூமிநாதனுக்கும் ஆபத்து வந்திருக்கு அப்படின்னு ஒரே அங்கலாய்ப்புதான்.

சீரியஸ் வில்லன்கள்

சீரியஸ் வில்லன்கள்

வாணி ராணி சீரியலில் வில்லத்தனம் செய்ய ஆள் பற்றாக்குறை ஏற்பட்டது என்னவோ உண்மைதான். ரவுடித்தனம் செய்த காளியும், கதிரும் வாணி, ராணி வீட்டு சம்பந்திகள் ஆன பின்னர் வில்லன்கள் இல்லாத சீரியலாக நகர்ந்தது.

மருமகள் சிநேகா

மருமகள் சிநேகா

எத்தனை நாளைக்குத்தான் சிநேகாவின் வில்லத்தனத்தை ரசிப்பது. நல்லவளாக நடித்து பழிவாங்கும் கதையைத்தான் எல்லா சீரியலிலும் போடுகிறார்களே அதனால் ஏ.சி அன்புச்செல்வன் வடிவில் வில்லனை கொண்டுவந்தனர்.

ரவுடி போலீஸ்

ரவுடி போலீஸ்

அன்புச்செல்வனுக்கும் போலீஸ் ட்ரெயினிங்கில் இருக்கும் கவுதமுக்கும் பிரச்சினை எழவே அடித்து பெட் ரெஸ்டில் போட்டு விட்டார்கள். இதனால் மட்டுமே டிஆர்பி எகிறுமா என்ன? பூஜாவை ரத்தம் சொட்ட சொட்ட பாதையாத்திரை நடக்க விட்டு விட்டார்கள்.

கத்தி சேகருக்கு ஜாமீன்

கத்தி சேகருக்கு ஜாமீன்

கத்தி சேகருக்கு ஜாமீன் கிடைக்காமல் செய்து விடுவார் வாணி என்று அஞ்சிய அன்புச்செல்வன் அவரது கவனத்தை திருப்ப பூமிநாதனை புதைத்து விட்டார்கள். வாணியும் கடந்த இரு தினங்களாக பூமி நாதனை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.

ராணியின் வேண்டுதல்

ராணியின் வேண்டுதல்

சகோதரியின் கணவருக்கு ஏதோ ஆபத்து வரப்போகிறது என்று தெரிந்து கொண்ட ராணி, நாகத்தின் சிலையை வைத்து அபிஷேகம் செய்கிறார். யாருக்கோ அனகோண்டா தோஷம் அதான் அம்மா சாமி கும்பிடுகிறார் என்று தேனு கிண்டல் செய்கிறாள்.

காட்டிக்கொடுத்த செல்போன்

காட்டிக்கொடுத்த செல்போன்

சவப்பெட்டிக்குள் செல்போனை போட்டு புதைத்து விடவே அதன் மூலம் வாணியிடம் பேசுகிறார் பூமிநாதன். அந்த சிக்னலை வைத்து பூமிநாதனை தேடுகிறார் வாணி. சனிக்கிழமைக்குள் கண்டு பிடித்துவிடுவார் என்று நம்புவோம்.

English summary
Vaani Raani serial is full of thrills nowadays and Vaani is searching her husband as he was buried alive.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil