»   »  சீரியல் டி.ஆர்.பிக்காக இப்படி ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணிட்டீங்களே?

சீரியல் டி.ஆர்.பிக்காக இப்படி ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணிட்டீங்களே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிவி சீரியர்கள் இப்போ ரொம்ப போரடிக்க ஆரம்பித்து விட்டது. தேர்தல் நேரம் என்பதால் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள், பேட்டிகள், மேடைப் பேச்சுகளை கேட்கவே இப்போது ஏராளமானோர் ஆர்வம் காட்டுவதால் டிவி சீரியல்கள் டல்லடித்து விட்டன.

சீரியலை பார்க்க வைக்க என்ன செய்வது என்று யோசித்த இயக்குநர்கள் டிஆர்பியை தக்க வைப்பதற்காக முக்கிய கதாபாத்திரங்களை அடிபட வைத்தோ அல்லது ஹார்ட் அட்டாக் வரவைத்தோ மருத்துவமனையில் அட்மிட் பண்ணி வைத்திருக்கிறார்கள்.

தெய்வமகள், வம்சம், பிரியமானவள், வாணி ராணி என நான்கு சீரியல்களிலும் யாராவது ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். இவர்களுக்கு என்ன ஆகுமோ ஏதாகுமோ என்றுதான் சீரியல் ரசிகர்கள் இப்போது பேசிக்கொண்டிருக்கின்றனர்.

வள்ளியை குத்திட்டானேப்பா

வள்ளியை குத்திட்டானேப்பா

பிற்பகல் நேரத்தில் இல்லத்தரசிகளின் தூக்கத்தைக் கெடுக்கும் சீரியல் வள்ளி. இதில் ஹீரோயின் கண் தெரியாத பெண்ணாகவும், போல்டான பெண்ணாகவும் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதில் தங்கைக்கு பதிலாக அவளது மாமனார் வீட்டிற்குள் போய் அக்கா வள்ளி நடிக்கிறார். வள்ளியைத்தான் குத்தி கொலை செய்ய முயற்சி செய்கின்றனர்.

ரொம்ப சீரியஸ்

ரொம்ப சீரியஸ்

கத்தியில் விஷத்தைத் தடவி வயிற்றில் குத்தியதில் வள்ளி, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். வள்ளியின் கணவன் விக்கி மீது கொலைப்பழி விழுந்துள்ளது. இது எத்தனை நாள் நீடிக்குமோ?

தெய்வமகள்

தெய்வமகள்

தெய்வமகள் சீரியலில் பிரகாஷ் மீது தேவையில்லாத பழியைப் போட்டு வீட்டை விட்டு துரத்தி விட்டனர். கெட்டதிலும் ஒரு நல்லதாக பிரகாஷ் - சத்யா சண்டை முடிந்து சந்தோஷமாக சேர்ந்து விட்டனர்.

அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக்

அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக்

பிரகாஷ் வீட்டை விட்டு வெளியே போன நேரம் அம்மா ஜானகிக்கு ஹார்ட் அட்டாக் வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் படுக்க போட்டு விட்டார்கள். இதில் ஜானகி மரணமடைந்து விட்டதாக வேறு பிரகாசுக்கு கனவு சீன் வேறு வைக்கிறார்கள்.

பூமிகாவுக்கு இப்படியாயிருச்சே

பூமிகாவுக்கு இப்படியாயிருச்சே

வம்சம் சீரியலில் பூமிகாவிற்கு ஆக்ஸிடென்ட் ஆகிவிட்டது. கண்கள் திறந்த நிலையில் செயல்பாடற்ற வகையில் ஐ.சி.யுவில் படுக்க போட்டு விட்டார்கள். இதை சாக்காக வைத்து பூமிகாவின் தங்கை ஜோதிகாவை திருமணம் செய்ய திட்டம் போடுகிறான் மதன். இன்னும் எத்தனை நாள் ஓட்டப்போறாங்களோ?

பிரியமானவள்

பிரியமானவள்

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக பிரியமானவள் தொடர்தான் பார்க்க சகிக்கவில்லை. போலீஸ் டார்ச்சரில் உமாவும், பூமிகாவும் ( இது வேறு பூமிகா) சிக்கி சீரழிவது ஒரு பக்கம், குடும்பமே ஒப்பாரி வைப்பது ஒரு பக்கம் என டி ஆர்பி அள்ளுகிறது.

புது வில்லி

புது வில்லி

கிருஷ்ணன் - உமா குடும்பத்தை அழிக்க இப்போது டிஎஸ்பியும் அவரது மனைவியும் கிளம்பியிருக்கின்றனர். இதில் பழைய கதை வேறு வந்து போகிறது. அதுவும் டிஎஸ்பியின் மனைவியாக நடிப்பவர் காட்டும் ஓவர் ஆக்டிங் வேறு தாங்க முடியலைடா சாமி.

கிருஷ்ணனுக்கு ஹார்ட் அட்டாக்

கிருஷ்ணனுக்கு ஹார்ட் அட்டாக்

மனைவி ஜெயிலுக்குப் போன அதிர்ச்சி ஒரு பக்கம், மாமன் மகளைப் பார்த்த அதிர்ச்சி மறுபக்கம் அழுத்த கிருஷ்ணனுக்கு ஹார்ட் அட்டாக் வந்து அட்மிட் ஆகி விடுகிறார். இது கனவாக உமாவிற்கு வருகிறது.

உமா வந்தால் உயிர் வரும்

உமா வந்தால் உயிர் வரும்

கிருஷ்ணனைப் பார்க்க சிறையில் இருந்து ஒருநாள் பரோலில் உமா வந்து பார்க்க, அப்பவும் கிருஷ்ணன் கண் முழிக்கலையே. ஜெயிலுக்கு போக நேரமாச்சு என்று சொன்ன உடனே உமா போய் கிருஷ்ணனின் பக்கத்தில் உட்கார்ந்து அழ, உடனே கைகள் ஆடுகிறது.

இன்னும் எத்தனை நாள்

இன்னும் எத்தனை நாள்

சதீஷ் கொலையை வைத்து கிட்டத்தட்ட 5 மாதமாக ஒரு சீரியலை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். இனி வேறு எதுவும் இல்லை என்ற உடன் கிருஷ்ணனை படுக்க போட்டு விட்டார்கள்.

வாணி - ராணி

வாணி - ராணி

ராதிகா இரட்டை வேடத்தில் நடிக்கும் வாணி ராணி சீரியலில் சூர்யவை கடத்தி விட்டார்கள். தேடிப் போன வாணியைப் பற்றி தகவல் எதுவுமில்லை. அந்த கவலையில் எல்லோரும் இருக்க, வாணியும் இப்போது கையில் கட்டுடன் மருத்துவமனையில் இருக்கிறார்.

எப்போ நிறுத்துவாங்க?

எப்போ நிறுத்துவாங்க?

எந்த சீரியலைப் பார்த்தாலும் இப்படி மருத்துவமனை சீன் ஆகவே இருக்கிறது. கொஞ்ச நாளைக்கு இந்த சீரியலை நிறுத்திட்டு வேறு ஏதாவது போட மாட்டாங்களா? செய்தி சேனல் பார்த்தலாவது நல்லா பொழுது போகும் என்பது இல்லத்தரசிகளின் மைன்ட் வாய்ஸ் ஆக இருக்கிறது.

English summary
Tamil TV serials are boring nowadays. For the sake of TRP rating the directors dagging the episodes unncessary
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil