»   »  கனடா சென்றார் 'சூப்பர் சிங்கர்' ஜெசிக்கா... விமானநிலையத்தில் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

கனடா சென்றார் 'சூப்பர் சிங்கர்' ஜெசிக்கா... விமானநிலையத்தில் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டொராண்டோ : விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் போட்டியில் இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்ற ஜெசிக்காவிற்கு கனடாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.

விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கனடாவைச் சேர்ந்த ஈழ மாணவி ஜெசிக்காவும் கலந்து கொண்டார். இந்தப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த ஜெசிக்காவுக்கு ஒரு கிலோ தங்கம் பரிசாக வழங்கப் பட்டது.

Canada : Grand welcome super singer Jessica

அந்த ஒரு கிலோ தங்கத்தையும் தமிழ்நாடு மற்றும் ஈழத்தில் வாழும் அனாதை குழந்தைகள் வளர்ச்சிக்காக வழங்கினார் ஜெசிக்கா. ஏற்கனவே, தனது இனிமையான குரலால் தமிழ் மக்களைக் கவர்ந்த ஜெசிக்கா, இந்த நற்செயல் மூலம் அவர்களது மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

இந்நிலையில், கனடா திரும்பினார் ஜெசிக்கா. டொராண்டோ விமான நிலையத்தில் ஜெசிக்காவை வரவேற்க ஏராளமான தமிழர்கள் திரண்டிருந்தனர். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜெசிக்காவை பாராட்டி அவர்கள் கையில் பதாகைகள் ஏந்தியிருந்தனர்.

English summary
The Canadian Tamils have given a grand welcome to vijay Tv's super singer winner Jessica.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil