twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சினிமா நடிகைகள் டிவி நிகழ்ச்சி செய்ய தடை… இங்கல்ல சீனாவில்!

    By Mayura Akilan
    |

    பெய்ஜிங்: சீனாவில் டிவி நிகழ்ச்சிகளை சினிமா நடிகைகள் தொகுத்து வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நம் ஊரில் இதே போல ஒரு தடை கொண்டு வரவேண்டும் என்று ஏங்கத் தொடங்கியுள்ளனர் இங்குள்ள தொகுப்பாளர்கள்.

    டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு தனி ரசிகர்கள் உள்ளனர். சின்னத்திரை என்ற விசிட்டிங் கார்டை வைத்துக்கொண்டு சினிமாவில் நுழைபவர்கள்தான் அதிகம். எனவேதான் கல்லூரியில் படிக்கும் போது டிவி ஆங்கர் ஆகவேண்டும் என்ற கனவோடு விசுவல் கம்யூனிகேசன் படித்துவிட்டு டிவியில் தொகுப்பாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.

    Celebrities banned from hosting television shows in China

    ஆனாலும் கடந்த காலங்களைப் போல இல்லாமல் சின்னத்திரையில் சினிமா நட்சத்திரங்கள் அதிக அளவில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகின்றனர். தமிழில் ரோஜா, ரம்யா கிருஷ்ணன், தொடங்கி குஷ்பு, சிம்ரன் என பலரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள்.

    சில நடிகைகள் ரியாலிட்டி ஷோக்களில் நடுவர்களாகவும் வலம் வருகின்றனர் நடிகைகள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இனிமே நடிகர்கள் டி.வி நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது' என்று ஒரு சட்டம் போட்டால் எப்படி இருக்கும்?!

    சீனாவில் சின்னத்திரை சங்கத்தினர், நிஜமாகவே இப்படி ஒரு சட்டத்தை அமல்படுத்தியிருக்கிறார்கள். ‘நிகழ்ச்சியோட ஐடியா நல்லா இருந்தும், அதை பப்ளிசிட்டிக்காக சினிமா நட்சத்திரங்கள் கையில கொடுக்கும்போது, சொதப்பி விடுகின்றனர் என்ற புகார் சீனாவில் எழுந்துள்ளது.

    ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகரை, இன்னொரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கூப்பிடும்போது, அவர்கள் அணியும் கவர்ச்சியான உடைகள் முகம் சுழிக்கும் வகையில் அமைந்துள்ளது.

    நடிகைகள் தொகுப்பாளர்களாக வருவதால் இளமையான பல நல்ல தொகுப்பாளர்களுக்கு வாய்ப்பும் கிடைக்காமப் போய்விடுகிறது என்பது சின்னத்திரை தொகுப்பாளர்களின் ஆதங்கம்.

    எனவே இனி திரை நட்சத்திரங்கள் டி.வி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கக் கூடாது!' என்று சீனா அரசாங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.

    அதேபோல டிவி நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பும் போது சொதப்பலாக வழங்காமல் நன்றாக பயிற்சி பெற்ற தொகுப்பாளர்களைக் கொண்டு ரெகார்ட் செய்து ஒளிபரப்ப வேண்டும் என்றும் சீனா அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

    நம் ஊர் காட்டுக்கத்தல் லைவ் ஷோக்களுக்கு இதேபோல தடைகள் வருமா என்று பலரும் மைன்ட் வாய்ஸ் மூலம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதேபோல இந்தியாவில் அறிவிப்பு வருமா?

    English summary
    Celebrities have been banned by China's media regulator from appearing as presenters on television shows to ensure no "improper remarks" are made on air, state news agency Xinhua has reported.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X