2000 எபிசோட்களை எட்டி சாதனை...கேக் வெட்டி கொண்டாடிய சந்திரலேகா சீரியல் டீம்
சென்னை : சன் டிவி.,யில் ஒளிபரப்பாகும் சீரியல் சந்திரலேகா. தினந்தோறும் பிற்பகல் 2 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. 2014 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ம் தேதி துவங்கப்பட்ட இந்த சீரியல் அக்டோபர் 5 ம் தேதியான நேற்றோடு 2000 எபிசோட்களை கடந்துள்ளது. இதனை இந்த சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.
சரிகம நிறுவனம் தயாரிப்பில், டைரக்டர் ஏ.பி.ராஜேந்திரன் இயக்கி வரும் இந்த சீரியலில் ஸ்வேதா பந்தேகர், நாகஸ்ரீ ஜி.எஸ், சந்தியா ஜகர்லமுடி, ஜெய் தனுஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தமிழில் ஒளிபரப்பாகும் முதல் மிக நீண்ட நெடுந்தொடர் என்ற பெருமையை இந்த சீரியல் பெற்றுள்ளது.

கொரோனா காரணமாக 2020 ம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் நிறுத்தப்பட்ட இந்த சீரியல், 2020 ம் ஆண்டு ஜுலை மாதம் வரை நிறுத்தப்பட்டிருந்தது. குடும்ப, காதல் கதையாக தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த சீரியல் தற்போது ஐந்தாவது சீசனை எட்டி உள்ளது. தமிழ் சின்னத்திரை வரலாற்றிலேயே தொடர்ந்து 7 ஆண்டுகள் ஒளிபரப்பான ஒரே சீரியல் இது தான்.
இந்த சீரியலுக்கு இதுவரை 6 பேர் வசனம் எழுதி உள்ளனர். இதற்கு முன் சன் டிவி.,யில் ஒளிபரப்பான வள்ளி சீரியல் தான் இதுவரை நீண்ட காலம் ஒளிபரப்பான அதிக எபிசோட்களை கொண்ட சீரியலாக இருந்து வந்தது. இந்த சீரியல் 1961 எபிசோட்கள் ஒளிபரப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து சன் டிவி.,யில் ஒளிபரப்பான கல்யாண பரிசு சீரியல் மிக நீண்ட சீரியலாக கருதப்பட்டது. இந்த சீரியல் 1840 எபிசோட்கள் ஒளிபரப்பப்பட்டது.
காலையிலேயே மலர்ந்திடும் என துவங்கும் இந்த சீரியலின் டைட்டில் பாடல் மிகவும் பிரபலம். இந்த பாடலை பிரபல பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம், சரவணன் ராஜா ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர். 2000 ம் எபிசோட்களை கடந்ததை சந்திரலேகா சீரியல் குழுவினர் செட்டிலேயே கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இந்த ஃபோட்டோ சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டதை அடுத்து, ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சந்திரலேகா சீரியல் 2000 எபிசோட்களை எட்டி உள்ளது பற்றி இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.இது போன்ற ஒரு சாதனை தொடரில் நடிப்பது தங்களுக்கு த்ரில்லிங்காக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சீரியலில் நடித்த நடிகர் - நடிகைகள் இந்த தகவலை தங்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் குறிப்பிட்டு, தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











