»   »  குட்டி குஷ்பு... சீரியல் நடிகை ஸ்வேதாவிற்கு அஜீத் கொடுத்த பட்டம்!

குட்டி குஷ்பு... சீரியல் நடிகை ஸ்வேதாவிற்கு அஜீத் கொடுத்த பட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ஹன்சிகாவை ரசிகர்கள் குட்டி குஷ்பு என்று அழைக்கின்றனர். சின்னத்திரையிலும் ஒரு குஷ்பு இருக்கிறார். அவர் சந்திரலேகா, லட்சுமி வந்தாச்சு சீரியல்களின் நாயகி ஸ்வேதா. குட்டி குஷ்பு என்று ஸ்வேதாவிற்கு பெயர் சூட்டியவர் நடிகர் அஜீத்தாம்.

சின்னத்திரையில் நடித்து பிரபலமாகி சினிமாவிற்கு ஹீரோயின் தோழியாக, சில சமயம் ஹீரோயினாகவும் நடிப்பார்கள். ஆனால் சினிமாவில் தங்கையாக அறிமுகமாகி சில படங்களில் ஹீரோயினாக நடித்த ஸ்வேதா, தற்போது சின்னத்திரை சீரியல்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

சன்டிவியில் ஒளிபரப்பாகும் சந்திரலோகா சீரியலில் பெண் நிருபர் சந்திராவாகவும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் லட்சுமி வந்தாச்சு தொடரில் ரவுடி லட்சுமியாகவும் நடித்து இல்லத்தரசிகளின் நெஞ்சங்களில் இடம் பிடித்துள்ளார்.

படிப்பு ப்ளஸ் நடிப்பு

படிப்பு ப்ளஸ் நடிப்பு

ஸ்வேதா பிறந்தது வளர்ந்தது புனே. பி.டெக் எம்.பி.ஏ படித்து விட்டு நடிக்க வந்து விட்டார். அப்பா அக்கவுன்டன்ட், அம்மா ஆசிரியையாம். ஆழ்வார் படத்தில் அஜித் தங்கையாக நடித்த ஸ்வேதா 'நான்தான் பாலா', 'வள்ளுவன் வாசுகி' உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் ஸ்வேதா.

அஜீத் தங்கை

அஜீத் தங்கை

மாடலிங் செய்து கொண்டு இருந்த போதுதான் அஜீத் நடித்த ஆழ்வார் படத்தில் தங்கை வாய்ப்பு கிடைத்ததாம். தலைக்குத் தங்கச்சின்னு சொன்ன உடனே ஓகே சொல்லிட்டாராம். அப்புறம் வள்ளுவன் வாசுகி, நான் தான் பாலா ஆகிய படங்களின் நடித்தாராம் ஸ்வேதா.

குட்டி குஷ்பு

குட்டி குஷ்பு

அஜீத்தை பார்த்த உடனே மைண்ட் ப்ளாக் ஆயிடுச்சு. ஏதோ பேசிட்டு இருக்காரு. ஆனா என்ன பேசினாருன்னே தெரியல. ஒண்ணே ஒண்ணு மட்டும் இப்போ வரைக்கும் ஞாபகம் இருக்கு. நீ குட்டிக் குஷ்பூ மாதிரி இருக்கே'னு சொன்னாரு. அந்தப் படத்துல பார்த்ததுக்கப்பறம் எனக்கு நேர்ல பார்க்கற வாய்ப்பே இல்ல! என்று வருத்தப்படுகிறார் ஸ்வேதா.

தைரியமான நாயகி

தைரியமான நாயகி

சந்திரலேகா தொடரில் தைரியமான ரிப்போர்ட்டர் ரோல். லட்சுமி வந்தாச்சு சீரியல்லயும் எனக்கு இன்னொரு நாயகி கேரக்டர்.
சீரியல் லைப் ஜாலியாக போகிறது. சினிமாவுல நடிச்சப்போ கூட இவ்ளோ பிரபலம் கிடைக்கல. இப்போ எங்க போனாலும் நீங்க சந்திரா தானேன்னு கேட்கறாங்க என்கிறார் ஸ்வேதா.

அஜீத் உடன் செல்ஃபி

அஜீத் உடன் செல்ஃபி

சினிமாவில் நடிக்க இப்பவும் நிறைய வாய்ப்புகள் வருது. ஆனால் எனக்கு சீரியல் கரெக்டா செட் ஆயிடுச்சு. ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்னா ஓகே சொல்லிடுவேன்!. அஜீத்தை மீண்டும் பார்த்தால் நான் உங்க தங்கச்சின்னு சொல்வேன். ஞாபகம் வரலைன்னா நான் உங்க ஃபேன்னு சொல்லிட்டு செல்ஃபி எடுத்துட்டு வந்துருவேன் என்கிறார் ஸ்வேதா.

English summary
Serial actress Swetha told I Ajith sister in Azhwar Movie he called my name Kutti Kushboo.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil