நொருங்கி போய்விட்டேன்...ட்ரோல் செய்தவர்களுக்கு அட்வைஸ் செய்த வெங்கடேஷ் பட்

சென்னை : தன்னை ட்ரோல் செய்த மீம் கிரியேட்டர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார் செஃப் வெங்கடேஷ் பட். அதே சமயம் வெங்கடேஷ் பட் சொன்ன கருத்தை வரவேற்று சிலர் மீம் போட்டு, பாராட்டி உள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகிறார் செஃப் வெங்கடேஷ் பட். கடந்த இரண்டு சீசன்களையும் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் நடுவர்களாக இருந்து நடத்தி வந்த நிலையில், சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார் செஃப் தாமு. இருந்தாலும் வெங்கடேஷ் பட் தொடர்ந்து நடுவராக இருந்து நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

குக்வித் கோமாளி பார்த்தால் குழந்தை பிறக்கும்

குக்வித் கோமாளி பார்த்தால் குழந்தை பிறக்கும்

சமீபத்தில் ஒளிபரப்பான எபிசோடில் பேசிய வெங்கடேஷ் பட், குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும், இந்த நிகழ்ச்சியை பார்த்து தற்போது ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறார் என்றார். வெங்கடேஷ் பட்டின் இந்த பேச்சை வைத்து சோஷியல் மீடியாவில் மீம்கள் உருவாக்கி, ட்ரோல் செய்தனர்.

என்னடா புது கதையா இருக்கு

என்னடா புது கதையா இருக்கு

குக் வித் கோமாளி பார்த்தால் குழந்தை பிறக்குமா. இது என்னடா புது கதையா இருக்கு என பல கிண்டல் செய்தனர். கடந்த இரண்டு நாட்களாக வெங்கடேஷ் பட் பேசிய வீடியோ கிளிப்ஸ் அதிகம் பகிரப்பட்டு, கிண்டல் செய்து வருகின்றனர். இந்நிலையில் இதற்கு வெங்கடேஷ் பட் இன்று கருத்து தெரிவித்துள்ளார்.

மனிதம் செத்துவிட்டதோ

மனிதம் செத்துவிட்டதோ

அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், கடந்த இரண்டு நாட்களாக நொறுங்கிப் போனேன். என்னை ட்ரோல் செய்கிறார்கள் என்பதற்காக அல்ல. ஆனால் மனிதம் செத்துவிட்டதோ என்று எண்ணி வருந்தினேன். குழந்தை செல்வம் இருப்பவர்களுக்குத்தான் தெரியும் அது எவ்வளவு பெரிய பாக்கியமென்று . இல்லாதவர்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். மீம் கிரியேட்டர்கள் தயவு செய்து என்னை கேலி செய்வதாக நினைத்து, உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

Recommended Video

CWC பாருங்க குழந்தை பிறக்கும்! என்னங்க சொல்றீங்க? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ் #TV
நல்லவர்கள் இன்னும் இருக்கிறார்கள்

நல்லவர்கள் இன்னும் இருக்கிறார்கள்

நல்லவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதற்கு சிலர் எனது கருத்தை வரவேற்று பதிவிட்டுள்ள கமெண்ட் தான் சாட்சி. எனக்காக அல்ல ஒரு உயிரை சுமக்கும் பெண்ணிற்காக கேட்கிறேன். எனக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் கழித்து தான் குழந்தை செல்வம் கிடைத்தது. ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாகனதை நான் உணர்ந்தவன் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X