»   »  வெள்ளித்திரையில் "பேய்"... சின்னத்திரையில் "சேய்"... இது தான் சக்சஸ் பார்முலா!

வெள்ளித்திரையில் "பேய்"... சின்னத்திரையில் "சேய்"... இது தான் சக்சஸ் பார்முலா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ளித்திரையில் பேய்ப்படங்கள் ஆக்கிரமித்திருப்பது போல, சின்னத்திரையில் குழந்தைகள், கர்ப்பம், தாய்ப்பாசம் போன்றவை தான் பிரதானப்படுத்தப்பட்டு வருகின்றன.

மக்கள் எத்தகைய படங்களை விரும்பிப் பார்க்கிறார்களோ, அத்தகைய படங்களாக வரிசைகட்டி ஒரு சீசனில் வெளியாகும். பின் திடீரென வித்தியாசமான படம் ஒன்று வெற்றி பெற்றதும், அது போன்ற படங்களையே இயக்கத்தொடங்கி விடுவார்கள்.

அந்தவகையில், தற்போது தமிழ் சினிமாவில் பேய்களின் ஆட்சி எனலாம். தொடர்ந்து பேய்ப்படங்களாக வெளிவந்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இப்படியாக தமிழ் சினிமாவிற்கு பேய் பிடித்துள்ளது என்றால், சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு சேய் பிடித்துள்ளன என்றால் மிகையில்லை.

குழந்தைகள்...

குழந்தைகள்...

டிவியை ஆன் செய்தாலே ஏதாவது ஒரு சேனலில், ஏதாவது ஒரு சீரியலில் யாராவது சில பெண்கள் அழுது கொண்டோ அல்லது சண்டை போட்டுக் கொண்டோ இருக்கிறார்கள். ஆனால், அவற்றை உற்றுப் பார்த்தால் அந்தக் காட்சிகளின் பின்புலத்தில் காரணகர்த்தாகவாக ஏதாவது ஒரு குழந்தை முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளது.

தெய்வமகள்...

தெய்வமகள்...

சன் டிவியின் ஒளிபரப்பாகி வரும் தெய்வமகள் சீரியலில் சமீபகாலம் வரை வில்லி காயத்ரி, டைவர்ஸ் கோரும் தனது கணவரிடமிருந்து தனது மகளை மீட்க போராடிக் கொண்டிருந்தார். அது ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

டாக்டரின் தவறு...

டாக்டரின் தவறு...

தற்போது அதனைத் தொடர்ந்து சத்யா கர்ப்பமாக இருப்பதாக டாக்டர் கூறிய தவறான தகவலால் புதிய பிரச்சினை வெடித்துள்ளது. தன் மீது தவறில்லை என்பதை நிரூபிக்க இனி வரும் எபிசோட்களில் சத்யா போராடுவாள் என எதிர்பார்க்கலாம்.

குலதெய்வம்...

குலதெய்வம்...

இதேபோல், குலதெய்வம் சீரியலிலும் ரோஹித்தால் ஏமாற்றப்பட்ட பெண், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் அவரிடம் பேசுகிறார். இது தொடர்பாக அப்பெண்ணின் அம்மாவுக்கும் விசயம் தெரிந்துவிட, இனி ரோஹித் குடும்பம் அப்பிரச்சினையை எப்படி எதிர்கொள்கிறது என்பதை இன்னும் சில அல்லது பல நாட்கள் எபிசோட்களாகக் காட்டுவார்கள்.

பிரியமானவளே...

பிரியமானவளே...

பிரியமானவளே சீரியலில் ஆரம்பத்தில் இருந்தே குழந்தைப் பிரச்சினை தான் மையப்படுத்தப்பட்டு வந்தது. இடையில் கொஞ்சகாலம் கொலை என கதைக்களம் மாறியது. ஆனால், தற்போது மீண்டும் கர்ப்பம், குழந்தை என பழைய மாவை அரைக்கத் தொடங்கியுள்ளனர்.

அவந்திகாவைப் போட்டு வெளுத்த ஈஸ்வரி...

அவந்திகாவைப் போட்டு வெளுத்த ஈஸ்வரி...

அதே சீரியலில் அவந்திகாவை நடு ரோட்டில் பார்த்த ஈஸ்வரி, அவரை வம்பிக்கிழுத்து போட்டு அடித்து வெளுத்தையும் மக்கள் கண்டு மகிழ்ந்தனர். அதற்கும் அவந்திகாவின் கருக்கலைப்புதான் முக்கிய மேட்டர்.

வம்சம்...

வம்சம்...

வம்சம் சீரியலில் டாக்டர் குணாலால் ஏமாற்றப்பட்ட அருக்காணி தற்போது கர்ப்பமாக உள்ளார். அவர் கருவைக் கலைக்க நினைப்பதும், பின் மனதை மாற்றிக் கொள்வதையும் கடந்த சில தினங்களாகக் காட்டி வருகின்றனர்.

பூமிகா...

பூமிகா...

இது மட்டுமின்றி கலெக்டர் அர்ச்சனாவின் குழந்தைகள் திருடப்பட்டு, பின்னர் அவை பத்திரமாக மீட்கப்பட்ட காட்சிகள் அதற்கு முன்னர் ஒளிபரப்பானது. தற்போது பூமிகாவும் குழந்தையுடன் தலைமறைவான தனது கணவரை சல்லடைப் போட்டு தேடி வருகிறார்.

அழகி...

அழகி...

அழகி சீரியலில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, நடராஜின் மனைவி குழந்தைப் பெற்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதேபோல், மாலையில் ஒளிபரப்பாகும் பாசமலர்கள் சீரியலில் ஒரு பெண் கர்ப்பமாக இருப்பது போல் காட்டுகிறார்கள்.

கல்யாணப்பரிசு...

கல்யாணப்பரிசு...

மதியம் ஒளிபரப்பாகும் கல்யாணப்பரிசு சீரியலிலும், வள்ளியிலும் கூட இதே அக்கப்போர் தான்.

போட்டா போட்டி...

போட்டா போட்டி...

இப்படியாக சன் டிவியில் மதியம் முதல் இரவு வரை அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஒவ்வொரு சீரியலிலும் கர்ப்பம், குழந்தை, தாய்ப்பாசம் என ஒரே விசயத்தைத் தான் போட்டிப் போட்டு காட்டி வருகின்றனர்.

தெய்வம் தந்த வீடு...

தெய்வம் தந்த வீடு...

சரி சேனலை மாற்றுவோம் என முடிவு செய்து விஜய் டிவியை வைத்தால், அதில் தெய்வம் தந்த வீடு சீரியலிலும் இதே போல் குழந்தைகளை வைத்தே காட்சிகள் நகருகின்றன. இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்ற மகளை, கர்ப்பிணி ஒருவரின் வயிற்றைத் தொடச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார் அம்மா.

என்ன லாஜிக்கோ...

என்ன லாஜிக்கோ...

காரணம் அப்போது தான் அவருக்கும் ஆண் குழந்தையே பிறக்குமாம். ஆனால், எதிர்பாராத விதமாக சிறுமி ஒருவர் அவரது வயிற்றைத் தொட்டுவிட, ‘அடுத்ததும் பெண் குழந்தை தான் பிறக்கும்' என அப்பெண் அழுது கொண்டே செல்கிறார். இது என்ன லாஜிக்கோ?

மெல்லத் திறந்தது கதவு...

மெல்லத் திறந்தது கதவு...

போதுமடா சாமி என ஜீ தமிழ் சேனலுக்கு வந்தால், அதில் மெல்லத் திறந்தது கதவு சீரியலில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் கர்ப்பத்தைக் கலைக்க வில்லி முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

டி.ஆர்.பி. படுத்தும் பாடு...

டி.ஆர்.பி. படுத்தும் பாடு...

இந்த டி.ஆர்.பி. என்ற பெயரில் போட்டிப் போட்டுக் கொண்டு ஒவ்வொரு சீரியலிலும் கர்ப்பத்தை கதைக்களமாகக் கொண்டு காட்சிகளை நகர்த்தி வருகின்றனர்.

English summary
the Tamil serials are now concentrating on showing child related issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil