Just In
- 8 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 8 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 10 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 10 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Kanmani serial: அடடா முத்துச் செல்வி மேல சின்னவருக்கு வெறுப்பு வந்து கல்யாணம் நடக்காதுன்னு...!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியல் ஒரு கிராமத்தில் நடக்கும் கதையை பிரதிபலிப்பதாக இருக்கிறது. ஜமீன் பரம்பரை, நாட்டாமை, மணியக்காரர் என்று, இப்போது ஒரு சில கிராமத்து மக்களே கூட அறியாத விஷயங்களைத் தொட்டு கதை நகருது.
எப்படியாவது சின்னவருக்கு தன் மீது வெறுப்பை கொண்டு வர வேண்டும் என்று முத்துச்செல்வி பட்ட கஷ்டங்கள் வீண் போகவில்லை. சின்னவரு கண்ணில் தன் மீதான வெறுப்பையும் கண்டுவிட்டாள்.
சின்னவரே தன்னிடம் இனிமேல் என் முகத்தில் விழிக்காதேன்னு செல்லும் படியும் செய்துட்டா. இப்போது தன் நினைத்ததை செய்துவிட்டோம் என்று மனசு திருப்தி அடைந்தாலும், காதல் வலி தீர்ந்து போகுமா என்ன?

ஜெயிலில் இருந்து
கிருஷ்ணவேணி அம்மா ஜெயிலிலிருந்து ஜாமீனில் வர மாட்டேன்னு அடம் பிடிக்கறாங்க. இதுக்கெல்லாம் காரணமா இருந்த முத்துச் செல்வி இந்த வீட்டில் இருக்க கூடாது, கண்ணனுக்கும், முத்துச் செல்விக்கும் கல்யாணம் நடக்கக் கூடாதுன்னும் கண்டிஷன் போடறாங்க.. இப்படிப்பட்ட கண்டிஷன்களுக்கும் ஒன்னும் சொல்ல முடியாத நிலையில் கிருஷ்ணவேணி அம்மா புருஷனும் வந்துடறார்.

சின்னவரு முத்துச்செல்வி
கண்ணன் முத்துச்செல்வியை பார்த்து அவளிடம் மனம் விட்டு பேசணும்னு போறான். மணியக்காரர் வீட்டில் தங்கி இருக்கும் முத்துச் செல்வியை கண்ணன் பார்க்க போறான். மணியக்காரர் முத்து உன்னைப் பார்க்க சின்னவரு வந்திருக்கார்னு சொல்றார். .முத்துச் செல்வியும் வந்து பார்க்கறா. என்ன சின்னவரேன்னு கேட்க, ஏ புள்ளே முத்துச்செல்வி உன் மனசுல என்னதான் புள்ள இருக்கு. அதை சொல்லிடுன்னு கேட்கறான்.

ஒண்ணும் இல்லை
என் மனசுல ஒண்ணுமில்லை சின்னவரே .உங்க மனசுல என்ன இருக்குதுன்னுதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்னு சொல்றா. அப்படி என்னத்த புள்ள கண்டுட்டே.. இன்னும் கூட நீயா இப்படி நடந்துக்கறேன்னு என்னால நம்ப முடியலை. எங்க சின்ன அத்தை என் அக்காவை ரொம்ப மிரட்டிக்கிட்டு இருக்கறது உண்மைதான்.ஆனா, அதுக்கு என்ன செய்யணுமோ அதை செய்துக்கலாம். உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லையா,இல்லை என்னை கல்யாணம் கட்டிக்க புடிக்கலையான்னு சின்னவர் கேட்கறார்.

என்னையே நான் கொலை
உங்களை பிடிக்கலைன்னு நான் எப்படி சொல்லுவேன் சின்னவரே...அப்படி சொன்னால் என்னையே நான் கொலை செய்துக்கற மாதிரின்னு மனசுக்குள்ள பேசிக்கறா. இந்த கரிசனம் வேணாம் சின்னவரே... இப்போ கூட உங்க வாக்கு தவற கூடாதுன்னுதானே இப்படி கெஞ்சறீங்கன்னு கேட்கறா. என்ன முத்து இப்படி பேசறே.. வீட்டில் அக்காவும் மாமாவும் எப்படி தவிச்சு போயிருக்காங்க தெரியுமா? ,இப்போதும் உனக்கு சப்போர்ட்டாதான் பேசறாங்கன்னு சொல்றான் கண்ணன்..

எனக்காக வரலை
இப்பவும் உங்க குடும்பத்துக்காகவும், சவுந்தர்யா அம்மாவுக்காகவும்தானே வந்து இருக்கீங்க. அப்போ கூட எனக்காக வரலை இல்லேன்னு முத்து பேச கடுப்பாகி விடறான் கண்ணன். ச்சீ உனக்கு இவ்ளோ கேவலமான புத்தியா? இனிமே இந்த கல்யாணம் நடக்காது. எங்கியோ போய் தொலைங்க...ஆனா, அதுக்கு முன்னாடி வீட்டுக்கு வந்து, உன்னை நினைவு படுத்தற ஒரு சின்ன பொருளை கூட வீட்டுல விட்டுட்டு போக கூடாதுன்னு சொல்லிட்டு போறான்.
நன்றி சின்னவரே இதுதான் நான் எதிர்பார்த்தன்னு சொல்லிக்கறா முத்துச்செல்வி கண்ணீருடன்!