»   »  சிநேகா, கவுதமி, சதா... 2016ல் சின்னத்திரைக்கு வந்த சினிமா ஹீரோயின்கள்

சிநேகா, கவுதமி, சதா... 2016ல் சின்னத்திரைக்கு வந்த சினிமா ஹீரோயின்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ளித்திரையில் நாயகிகளாக கோலோச்சியவர்கள் வாய்ப்புகள் குறைந்த பின்னர் சின்னத்திரையில் சீரியல் நாயகிகளாகவோ, ரியாலிட்டி ஷோவிற்கு நடுவர்களாகவோ வருவது வழக்கமான ஒன்றுதான்.

சினிமாவில் இருந்து ராதிகா, ரம்யாகிருஷ்ணன், குஷ்பு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் சின்னத்திரைக்கு வந்து வெற்றிகரமாக வலம் வருகின்றனர். அந்த வரிசையில் யுவராணி, ஆனந்தி, சான்ட்ரா ஆகியோரும் மீண்டும் சீரியல்களில் நடிக்க வந்துள்ளனர்,

திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்ட நடிகை சினேகா, வேந்தர் டிவியில் திருமண நிகழ்ச்சி நடத்தினார். குழந்தை பிறந்த பின்னர் சிறிது கால ஓய்வுக்குப் பின்னர் உடம்மை ஸ்லிம் ஆக்கிக் கொண்டு விளம்பரங்கள், நடன நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரைக்கு வந்துள்ளார்.

டான்ஸ் நிகழ்ச்சில் கவுதமி

டான்ஸ் நிகழ்ச்சில் கவுதமி

சினிமாவில் ஹீரோயினாக இருந்த கவுதமி, சில ஆண்டுகளுக்கு முன்னர் சின்னத்திரையில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். கமல் உடனான லிவ் இன் வாழ்க்கை வாழ்ந்த கவுதமி, பாபநாசம் படத்தின் மூலம் சினிமாவில் மீண்டும் ஹீரோயினாக நடிக்க வந்தார். அதுவே அவருக்கு பிரபலத்தை தரவே, ஜீ தமிழ் டிவியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் நடுவராக சின்னத்திரைக்கு வந்துள்ளார் கவுதமி.

சிநேகாவின் நடன ஆர்வம்

சிநேகாவின் நடன ஆர்வம்

திருமண நிகழ்ச்சி ஒன்றின் மூலம் நடுவரான சிநேகா, சில ஆண்டுகள் ஓய்வுக்குப் பின்னர், 2016ம் ஆண்டில் மீண்டும் ஜீ தமிழ் டிவியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக வந்துள்ளார். கணவருடன் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார் சிநேகா.

விஜய் டிவிக்கு வந்த சதா

விஜய் டிவிக்கு வந்த சதா

ஜெயம் படத்தில் போய்யா... போ... என்று சொல்லி பிரபலமானவர் சதா. பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர். வாய்ப்பு குறைந்த பின்னர் வடிவேலு உடன் எலி படத்தில் ஹீரோயினாக நடித்தார். சினிமா வாய்ப்புகள் குறைந்து போகவே, விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்கியுள்ளார். சதாவின் மதிப்பெண், கமெண்டுகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

பாசமலர் வில்லி யுவராணி

பாசமலர் வில்லி யுவராணி

சன்டிவியில் பாசமலர் தொடரில் வில்லியாக களமிறங்கியுள்ளார் நடிகை யுவராணி. சினிமாவில் சில காலங்கள் ஹீரோயினாக நடித்து, திருமணம் செய்த பின்னர் டிவி சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். சில காலங்கள் ஊடக வெளிச்சம் படாமல் மறைந்திருந்த யுவராணி, 2016ல் மீண்டும் சின்னத்திரையில் வில்லியாக அவதாரம் எடுத்துள்ளார்.

தலையணைப் பூக்கள் சான்ட்ரா

தலையணைப் பூக்கள் சான்ட்ரா

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சான்ட்ரா, பிரஜீன் உடனான திருமணத்திற்குப் பின்னர், சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் தலை காட்டினார். சில காலங்கள் எங்கே இருக்கிறார் என்ற அடையாளமற்று இருந்தார் சான்ட்ரா. சின்னத்திரையில் விளம்பரம் மூலம் தலைகாட்டிய சான்ட்ரா, தலையணைப் பூக்கள் டிவி சீரியலில் வில்லியாக களமிறங்கியுள்ளார்.

English summary
Big screen movie heroines Sineha, Gouthami and Sadhaa are coming back to reality show judges in Television

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil