»   »  சின்னத்திரை கலைஞர்களின் தொடர் தற்கொலைகள்... டிவி நடிகர்கள் அதிர்ச்சி

சின்னத்திரை கலைஞர்களின் தொடர் தற்கொலைகள்... டிவி நடிகர்கள் அதிர்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சாய்பிரசாந்த் நேற்றிரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் நடித்த சாருகேஷ் தொடங்கி இன்றைய சாய் பிரசாந்த் வரை பல நடிகர், நடிகையர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

டிவி சேனல்களில் தொகுப்பாளர்களாக இருந்தவர்கள் பலரும் டிவி சீரியல்களில் நடித்து வருகின்றனர். ஏராளமான டிவி சீரியல்கள் ஒளிபரப்பானாலும்,

சின்னத்திரையில் பிரபலமாக நடித்துகொண்டிருந்த பல நடிகைகள் கடந்த ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டனர்.

நடிப்பதற்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் போகவே மன உளைச்சலுக்கு ஆளாகி நடிகை, நடிகர்கள், சின்னத்திரை தொழில் நுட்பக்கலைஞர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

நடிகைகள் தற்கொலை

நடிகைகள் தற்கொலை

ஷாலினி, மயூரி, வைஷ்ணவி,ஷரத்தா என பல நடிகைகள் தற்கொலை மூலம் மரணத்தை தழுவியவர்கள். ஏனைய நடிகைகளின் மரணம் மர்மமாகவே உள்ளது. உள்வியல் தாக்கமே தற்கொலைக்கு முக்கிய காரணம் எனப்படுகிறது.நடிகைகளின் தற்கொலையைத் தடுக்க எத்தனையோ முயற்சிகள் நடைபெறுகின்றன.என்றாலும் இதற்கொரு முடிவு வருவதாகத் தெரியவில்லை.

பாலாஜி யாதவ்

பாலாஜி யாதவ்

கடந்த ஆண்டு சின்னத்திரை இயக்குநர் பாலஜி யாதவ் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இவர் பிரபல டிவி சீரியல்களை இயக்கியவர். டிவி சீரியல் இயக்குவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், கடன் பிரச்சினையால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளியானது.

முரளி மோகன் தற்கொலை

முரளி மோகன் தற்கொலை

வம்சம், தென்றல் உள்ளிட்ட பல சீரியல்களிலும், சினிமாக்களிலும் நடித்த நடிகர் முரளி மோகன் கடந்த 2014ம் ஆண்டு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சீரியல் வாய்ப்புகள் குறைந்து போன காரணத்தினாலே அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

சோபனா தற்கொலை

சோபனா தற்கொலை

பிரபல நகைச்சுவை நடிகையான சோபனா, சிக்கன்குனியா மற்றும் ஆஸ்துமாவால் கஷ்டப்பட்டதால், அவரால் திரைப்படங்களில் தொடந்து நடிக்க முடியாமல் போனது. இதனால் மன இறுக்கத்திற்கு ஆளாகி அவர் தற்கொலை செய்து கொண்டார்.

சாய் பிரசாந்த்

சாய் பிரசாந்த்

நடிகர் சாய்பிரசாந்த் ஏராளமான டிவி சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சன்டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தாமரை சீரியலிலும் நடித்து வருகிறார்.

பாரதி தொடங்கி தாமரை வரை

பாரதி தொடங்கி தாமரை வரை

பாரதி திரைப்படத்தில் அறிமுகமான சாய் பிரசாந்த் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் எடை அதிகரித்து வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார். உடல் எடை குறைந்த பின்னர் சீரியல்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் சாய்பிரசாந்த் தற்கொலை செய்து கொண்டார்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

சாய் பிரசாந்த் மரணமடைந்த செய்தி கேட்ட உடன் அவரது வீட்டின் முன்பு போஸ் வெங்கட், டிங்கு உள்ளிட்ட பல சின்னத்திரை நடிகர்கள் திரண்டனர். பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என்று நடிகர் போஸ் வெங்கட் தெரிவித்தார்.

சின்னத்திரை கலைஞர்களுக்கு கவுன்சிலிங்

சின்னத்திரை கலைஞர்களுக்கு கவுன்சிலிங்

டிவி நடிகர்கள், நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் சின்னத்திரை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரை கலைஞர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க வேண்டும் என்றும் நடிகர் சங்கத்திற்கு பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
Reportedly TV actor Sai Prashanth of Neram and Vadacurry fame has committed suicide during the night of March 13th, 2016 due to unknown reasons. Because the exact reason behind this is unknown and that he is too young for such an uneventful act, the Nadigar Sangam is currently in talks to bring aboard a counsellor to help artists whenever necessary.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil