கலர்ஸ் தமிழ் புதிய நிகழ்ச்சி வெல்லும் திறமையில் நிக்கி கல்ராணி.. அழகான நடுவர் ரெடி!

சென்னை : கலர்ஸ் தமிழ் சேனல் பல நிகழ்ச்சிகள், சீரியல்கள் என தொடர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறது.

இந்த சேனலின் புதிய நிகழ்ச்சி வெல்லும் திறமை. இந்த நிகழ்ச்சியில் பிரபல நாயகி நிக்கி கல்ராணி இணைந்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு ஒரு மணிநேரம் தொடர்ந்து ஒளிபரப்பாக உள்ளது.

வெல்லும் திறமை நிகழ்ச்சி

வெல்லும் திறமை நிகழ்ச்சி

தேஷ் கி ஷான் என்னும் நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பாக உருவாகியுள்ள நிகழ்ச்சி வெல்லும் திறமை. இந்த நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் சேனல் ஒளிபரப்பி வருகிறது. நிகழ்ச்சி சனிக்கிழமை தோறும் இரவு 7 மணிக்கு ஒரு மணிநேரம் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நாடு முழுவதும் உள்ள சிறப்பான திறமைகளை உலகிற்கு அறிமுகப்படுத்துவதே நோக்கம் என்று நிகழ்ச்சிக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வித்தியாசமான திறமைகள்

வித்தியாசமான திறமைகள்

இந்த நிகழ்ச்சியில் மாறுபட்ட திறமைகளை பங்கேற்பாளர்கள் வெளிப்படுத்தலாம், நடனம், மாயாஜாலம், தற்காப்புக் கலைகள் உள்ளிட்ட பல வித்தியாசமான திறமைகளை அவர்கள் இந்த நிக்ழச்சியில் வெளிப்படுத்தலாம். இதன்மூலம் அங்கீகாரம் கிடைக்காமல் ஏங்கும் இளைஞர்கள் முதல் அனைவரும் சிறப்பான வெளிச்சத்தை பெற முடியும்.

16 வாரங்கள்

16 வாரங்கள்

சனிக்கிழமைகளில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 16 வாரங்கள் ஒளிப்பரப்பாக உள்ளதாம். தொகுப்பாளர் ஆன்ட்ரூஸ் நிகழ்ச்சியை சிறப்பான வகையில் தொகுத்து வழங்கவுள்ளார். அவர் எப்போதுமே நகைச்சுவையுடன் கூடிய தொகுப்பை வழங்குவார். இதிலும் அதேபோல தொடர்ந்து செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.

திறமையானவர்களுக்கு வெளிச்சம்

திறமையானவர்களுக்கு வெளிச்சம்

இதனிடையே மூலை முடுக்குகளில் உள்ள திறமையானவர்களை கண்டறிந்து அவர்களின் திறமைகளை வெளி உலகிற்கு காட்டுவதற்கான வாய்ப்பை இந்த இந்த நிகழ்ச்சி வழங்குவதாக கலர்ஸ் தமிழ் சேனலின் உயரதிகாரி தெரிவித்துள்ளார். இதன்மூலம் ரசிகர்களுக்கும் சிறப்பான அனுபவம் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நடுவராக நிக்கி கல்ராணி

நடுவராக நிக்கி கல்ராணி

இந்த நிகழ்ச்சியில் இளம் திறமைகளின் வித்தியாசமான திறமைகள் என்ன என்பதை பார்க்க நாங்களும் காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் திருமணம் நடைபெற்ற நடிகை நிக்கி கல்ராணி, கராத்தே நிபுணர் ஷிஹான் ஹுசைனி மற்றும் பிரபல நடன இயக்குநர் ஸ்ரீதர் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்க உள்ளனர்.

Recommended Video

Aadhi-NikkiGalrani-க்கு கோலாகலமாக திருமணம்; குவியும் ரசிகர்களின் வாழ்த்து! | Filmibeat Tamil
மேலும் 2 நடுவர்கள்

மேலும் 2 நடுவர்கள்

இந்த நிகழ்ச்சி மூலம் ஷிஹான் ஹுசைனி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் முதல்முறையாக சேனலில் நடுவர்களாக இணைந்துள்ளனர். ஆனால் ஸ்ரீதர் முன்னதாக டான்ஸ் vs டான்ஸ் 2 நிகழ்ச்சியில் நடுவராக இருந்துள்ளார். மீண்டும் இந்த நிகழ்ச்சியில் இணைந்தது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X